தடுமாறி விழுந்து உயிருக்கு போராடிய பாட்டியை காப்பாற்றி ஆப்பிள் வாட்ச் 4.!
இந்த மாடலில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டன. முற்றிலும் புதயி வடிவமைப்புகள், வாட் ஓஎஸ் 5, பால் டிடெக்ஷன் போன்ற ஆப்பிள் தனது ஸ்மார்ட்வாட்ச்சில் சேர்ந்திரapple Watch Series 4 help after 80 year old falls
நிலை தடுமாறி கீழே விழுந்த பாட்டியை ஆப்பிள் வாட்ச் 4 காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இந்த சம்பவம் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகின்றது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4:
இந்த மாடலில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டன. முற்றிலும் புதயி வடிவமைப்புகள், வாட் ஓஎஸ் 5, பால் டிடெக்ஷன் போன்ற ஆப்பிள் தனது ஸ்மார்ட்வாட்ச்சில் சேர்ந்திருக்கிறது.
இஜிஜி மற்றும் பால் டிடெக்ஷன் போன்ற வசதிகள் மற்ற ஸ்மார்வாட்ச் மாடல்களில் இதுவரை வழங்கப்படவில்லை.

சிறப்பு அம்சம்:
இதில், இசிஜி அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பால் டிடெக்ஷன் அமச்ம் 65 வயதுக்குட்பட்ட மேற்பட்டோருக்கு தானாகவே செயல்படுத்தப்பட்டிருக்கின்றது. இசிஇ, பால் டிடெக்ஷன் அம்சம் ஆபத்து காலங்களிலும் பலருக்கு பயன்தரும் அம்சமாக இருக்கின்றது.

தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி:
அந்த வகையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜெர்மனியில் நிலை தடுமாறி விழுந்த 80 வயது மூதாட்டியை காப்பாற்ற அவசர உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் உதவியை நாடியது.

உதவிக்கு அழைத்த ஆப்பிள் வாட்ச்:
ஜெர்மனியில் அவசர உதவி எண் 112ஐ அழைத்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குரலில், ஒருவர் பலமாக கீழே விழுந்துவிட்டார் என தகவல் கொடுத்ததது.

வீட்டு முகவரியை மெஸ்சேஞ் அனுப்பியது:
மூதாட்டியின் வீட்டு முகவரியை ஆப்பிள் வாட்ச் 4 அனுப்பியது. பின் இதே முகவரிக்கு ஆம்புலன்ஸ் வந்தது. எனினும், கதவு உள்புறத்தில் தாழிடப்பட்டிருந்ததால் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் தீயணைப்பு துறை உதவியுடன் கதவு திறக்கப்பட்டு மூதாட்டி மீட்கப்பட்டார்.

குடும்பத்தினருக்கு மெஸ்சேஞ்:
மீட்கப்பட்ட மூதாட்டிக்கு முதலுதவி செய்யப்பட்ட வேளையில் ஆப்பிள் வாட்ச் 4-இல் பதிவு செய்யப்பட்டிருந்த அவரது மகனுக்கு ஆப்பிள் வாட்ச் தகவல் கொடுத்தது. ஆப்பிள் வாட்ச் கொண்டு பயனர்கள் அவசர காலத்தில் காப்பாற்றப்பட்டது ஏற்கனவே நடந்திருக்கிறது.

மற்றொருவரையும் காப்பறியது:
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 67 வயது முதியவர் குளியலறையில் கீழே விழுந்து, பின் ஆப்பிள் வாட்ச் கொடுத்த தகவலால் காப்பாற்றப்பட்டார். இந்தியாவில் வாட்ச் சீரிஸ் 4 மாடல் விலை ரூ.40,900 முதல் துவங்குகிறது.


Click it and Unblock the Notifications