விரைவில் வெளிவரவுள்ள ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

செல்லுலார் கனெக்டிவிட்டியுடன் வெளிவந்திருக்கும் இந்த ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 உபகரணம் மிகுந்த பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

By Siva
|

ஆப்பிள் நிறுவனம் புதியதாக வாட்ச் சீரிஸ் 3ஐ சமீபத்தில் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் அறிமுகம் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே

விரைவில் வெளிவரவுள்ள ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 பற்றி தெரிந்து கொள்ளுங்கள

செல்லுலார் கனெக்டிவிட்டியுடன் வெளிவந்திருக்கும் இந்த ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 உபகரணம் மிகுந்த பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் ஐபோன் நம்பரிலேயே இதையும் செயல்படுத்த முடியும்.

மேலும் இந்த ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 என்னென்ன வசதிகளை பெற்றுள்ளது என்பதை பார்த்தால் சிறி மற்றும் மெசேஜ் அனுப்பும் வசதி உள்ளது. மேலும் உங்கள் கைகளில் இருந்தே மேப் உள்ளிட்டவைகளை ஜிபிஎஸ் மூலம் பார்த்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஐபாட்களை போலவே இசையை ஸ்ட்ரீம் செய்தும் கேட்கலாம்

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

மூன்றாம் தலைமுறையினர்களுக்காக வெளிவந்துள்ள இந்த ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3 ஸ்மார்ட்வாட்ச், சீரிஸ் 2 போலவே வடிவத்தில் இருக்கும்.

மேலும் இதில் சிகப்பு பட்டன், மற்றும் டபுள் டிஸ்ப்ளே பட்டன்கள் ஆண்டென்னாக்களுடன் இருக்கும். மேலும் இதில் இணைக்கப்பட்டுள்ள மைக்ரோபோன் மூலம் அழைப்புகளுக்கு பதில் அளிக்கவும் இனிமையான இசையை கேட்கவும் உதவும்

மேலும் இந்த ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 3-இல் டூயல் கோர் பிராஸசர் இருப்பதால் முந்தைய சீரீஸைவிட இது 70% உயர்ந்ததாக செயல்படும். மேலும் முதல்முறையாக சிறி செயலியுடன் வெளிவந்துள்ள ஸ்மார்ட்வாட்ச் இதுதான். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்சில் புளூடூத், ஆப்பிள் W2 சிப் மற்றும் செல்லுலார் கனெக்டிவிட்டி இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்

வாட்ச் ஓஎஸ் 4:

வாட்ச் ஓஎஸ் 4:

இந்த வாட்ச் ஓஎஸ் 4 என்பது செப்டம்பர் 19 முதல் அனைத்து ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். இந்த புதிய வாட்ச் நீச்சல் வீரர்களுக்கும், ஜிம் உபயோகிப்பாளர்களுக்கும் என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி உங்களது இதயத்துடிப்பின் அளவை இனி உங்கள் கைகளில் உள்ள இந்த வாட்ச்சின் மூலமே தெரிந்து கொள்ளலாம். இதயத்துடிப்பில் பிரச்சனை, தீர்வு ஆகியவைகளும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த வாட்சின் மூலம் உங்களுக்கு அதிகளவில் இதயத்துடிப்பு இருந்தாலோ, அல்லது இதயத்துடிப்பு சுத்தமாக இல்லாமல் இருந்தாலோ அதனை உங்களுக்கு சைகை மூலம் தெரிவிக்கும்

மேலும் சீரில்லாமல் இருக்கும் இதயத்துடிப்பையும், மாரடைப்பு வரப்போக்கும் அறிகுறியையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் ஹார்ட் ஸ்டடி என்ற செயலியையும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்

அக்டோபர் 5 : அட்காசமான நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!அக்டோபர் 5 : அட்காசமான நோக்கியா 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எங்கு கிடைக்கும், விலை எவ்வளவு?

எங்கு கிடைக்கும், விலை எவ்வளவு?

இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் மற்றும் கோல்ட் நிறங்களில் பல வகைகளில் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு வண்ணங்களில் மட்டுமின்றி செராமிக் ஃபினிஷிங்கிலும் ஒரு மாடல் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சுகள் ஷோரூம்களில் செப்டம்பர் 22 முதல் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும்

மேலும் ஸ்மார்ட்வாட்சில் உள்ள பேட்டரி 18 மணி நேரத்திற்கு செயல்படும் என்று உறுதியளித்துள்ளது. இரண்டு வகையாக வெளிவரவுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், செல்லுலார் கனெக்டிவிட்டி உள்ள மாடல் $399 என்ற விலைக்கும், செல்லுலார் கனெக்டிவிட்டி இல்லாத மாடல் $329 என்ற விலைக்கும் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
The Apple Watch Series 3 smartwatch has been announced today at the event held in California. The device comes with in-built GPS and LTE connectivity.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X