Home
News

ஹோட்டலில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்.. நொடியில் கடவுளாக மாறிய Apple வாட்ச்

ஆப்பிள் வாட்ச் (Apple Watch) அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், அதில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் பயன்படுத்துவோருக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கிறது. ஆனால், உயிரையே காப்பாற்றும் அளவுக்கு, அதிவிரைவாக ஆப்பிள் வாட்ச் செயல்படும் என்பது, சில சம்வங்கள் மூலமே தெரியவருகிறது. அப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அதுகுறித்த விவரங்கள் இதோ.

நம்மிடையே ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வெறும் பந்தாவுக்காக மட்டும் ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுவது கிடையாது. நமது உடல்நலத்தை கண்காணிக்கும் பல்வேறு அம்சங்கள் காரணமாக மக்களை வாங்க தூண்டுகிறது. ஒரு ஸ்மார்ட்வாட்ச்சை நீங்கள் கட்டியிருந்தால், உங்கள் உடலை எளிதாக கவனித்துக் கொள்ளலாம். முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்.

நொடியில் கடவுளாக மாறிய Apple வாட்ச்.. வியந்துபோன மருத்துவர்கள்!

அதாவது, ஸ்மார்ட்வாட்ச்களில் உள்ள பிளட் பிரஷர் மானிட்டர் (Blood Pressure Monitor), பாடி டெம்பரேச்சர் மானிட்டர் ( Body Temperature Monitor), ஹாட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்டெப்ஸ் & காலோரிஸ் டிராக்கிங் (Step and Calorie Tracking), ஆக்சிஜன் லெவல் மானிட்டர் (Oxygen Level Monitor), ஸ்லீப்பிங் டைம் டிராக்கிங் (Sleeping Time Tracking), மென்ஸ்சுரல் டிராக்கர் (Menstrual Tracker) உள்ளிட்டவை சென்சார்கள் மூலம் உலை கண்காணிக்கும்.

இதன்மூலம் உங்கள் இதயத்துடிப்பு குறைந்தாலோ, காய்ச்சல் ஏற்பட்டு உடல் வெப்பநிலை அதிகரித்தாலோ உங்களது ஸ்மார்ட்போனுக்கு நோட்டிபிக்கேஷன்கள் வந்துவிடும். இதைவைத்து நீங்கள் மருத்துவரை அனுகிவிடலாம். இப்படிப்பட்ட அம்சங்களை கூட தூக்கி சாப்பிடும் அம்சம் ஆப்பிள் வாட்ச்களில் உள்ளது.

நீங்கள் ஆப்பிள் வாட்ச்சை வைத்திருந்தால், ஆபத்தான நேரங்களில் அந்த வாட்ச் மூலம் போலீசாருக்கும், ஆம்புலன்ஸூக்கும் தகவல் கொடுக்க முடியும். அப்படியொரு சம்பவம் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்துள்ளது. சாண்டர்பி (Xanderpy) என்னும் இளம்பெண் அவரது சமூக வலைதளபக்கத்தில் அவரது தாயாருக்கு ஏற்பட்ட அசாதரணமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், "சில நாள்களுக்கு முன்பு எனது தாயாரும் அவரது தோழியும் பக்கத்து மாகாணத்துக்கு பணி நிமிர்த்தமாக சென்றிருந்தனர். அப்போது ஹோட்டல் அறையில் எனது தாயாருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே, எனது தாயார் மற்றொரு அறையில் இருக்கும், அவரது தோழிக்கு "சீக்கிரம் எனது அறைக்கு வருமாறு" மெசேஜ் அனுப்பினார்.

அதில், நெஞ்சு வலியை பற்றி குறிப்பிடாததால், தோழி உடனடியாக அங்கு வரவில்லை. சிறிது நேரம் கழித்து சென்றுள்ளார். அப்போது, எனது தாயார் சுயநினைவை இழந்து தரையில் விழுந்து கிடந்துள்ளார். இதையடுத்து, தோழி ஆம்புலன்ஸூக்கு போன் செய்தபோது, ஏற்கனவே ஒரு ஆம்புலன்ஸ் அங்கு வந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சில நிமிடங்களில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றினர். அப்போது மருத்துவர்கள் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸூக்கு கால் செய்து உயிரை காப்பாற்றியுள்ளீர்கள் என்று தோழிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஆனால், நான் கால் செய்யவில்லை. ஏற்கனவே ஆம்புலன்ஸூக்கு யாரோ தகவல் கொடுத்துள்ளனர் என்று அவர் பதிலளித்துள்ளார். அதன்பின் என் தாயாரிடம் கேட்டுள்ளனர். அவரும் நான் கால் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். இறுதியில் தனது வாட்ச்சை எனது தாயார் சோதித்து பார்த்துள்ளார்.

அப்போதுதான் தெரிந்தது, இவரது இதயத்துடிப்பு மிகவும் குறைந்ததை சுதாரித்து ஆப்பிள் வாட்ச் ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்திருப்பது. இப்படியே சரியான நேரத்தில் எனது தாயின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியது" என்று குறிப்பிட்டுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Watch saves Woman's Life by calling 911 after she falls due to Aorta Ruptured
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X