Home
News

ஓடும் காரில் மயக்கம்.. ஆக்சிலேட்டரை அழுத்திய கால்.. Apple வாட்ச் செய்த காரியம்.. 55 வயது நபருக்கு திக் திக்!

காரை ஓட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென்று சுயநினைவை இழந்த 55 வயது மதிக்கத்தக்க நபர் அவருக்கு தெரியாமலேயே ஆக்சிலேட்டரை அழுத்தி இருக்கிறார். இதனால் அதிவேகமாக சென்ற கார் அருகில் இருந்த வீட்டின் கராஜை உடைத்து ஸ்விம்மிங் பூல் மீது பாய்ந்தது. வெறும் சில நொடிகளில் ஏற்பட்ட இந்த விபத்தில் இருந்து ஆப்பிள் வாட்ச் (Apple Watch) அந்த நபரின் உயிரை காப்பாற்றி இருக்கிறது. இது எப்படி நடந்தது? ஆப்பிள் வாட்ச் மூலம் எப்படி இது சாத்தியமானது? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் வாட்ச் மூலம் பல்வேறு அலெர்ட்களை பெற்று கொள்ள முடியும். அதாவது, சென்சார்கள் மூலம் ஃபால் டிடெக்சன் (Fall Detection), கிராஷ் டிடெக்சன் (Crash Detection) அலெர்ட்கள் அனுப்பப்படுகிறது. நீங்கள் கீழே விழுந்தாலோ, உங்களது ஹார்ட் ரேட் ஆபத்தான நிலைக்கு சென்றாலோ, எதுவும் செய்யாமலேயே உதவிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும்.

ஓடும் காரில் மயக்கம்.. ஆக்சிலேட்டரை அழுத்திய கால்.. Apple வாட்ச்!

அதேபோல விபத்து ஏற்படும்போதும் டிடெக்சன் செய்யப்பட்டு உதவிக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இந்த எமர்ஜென்சி அலெர்ட்கள் மூலம் அமெரிக்காவில் பலரது உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், அது பெரும்பாலும் ஹார்ட் ரேட் குறைதல், மயக்கம் அடைதல் போன்ற உடல் நிலை தொடர்பானதாகவே இருக்கும். ஆனால், இப்போது சினிமா லெவலில் சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் இருக்கும் ஈஸ்ட்ஹாம்ப்டன் பகுதியை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க நபர் பிரெண்ட் ஹில் பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. சில நொடிகளில் முற்றிலும் மயக்கமடைந்துள்ளார். அவருக்கு தெரியாமல் ஆக்சிலேட்டரை கால் அழுத்தி இருக்கிறது.

இதனால், அதிவேகமாக சென்ற அவரது கார் அருகில் இருந்த ஒரு வீட்டினுடைய கராஜை உடைத்து கொண்டு அங்கே இருந்த ஸ்விம்மிங் பூல் மீது பாய்ந்தது. இதனிடை அவருக்கு சுயநினைவும் வந்தது. ஆனால், என்ன நடந்தது என்று அவருக்கு தெரியவில்லை. அந்த நேரத்தில் அவரது ஆப்பிள் வாட்ச்சில் இருந்து ஒருவரது குரல் கேட்டுள்ளது. உடனே விபத்தில் சிக்கியதை அவர் தெரிவித்தார்.

அடுத்த சில நிமிடங்களில் அவர் மீட்கப்பட்டார். இதுகுறித்த அவர் கூறுகையில், கார் விபத்தில் சிக்கிய உடனேயே ஃபால் டிடெக்சன் மூலம் 911 எண்ணுக்கு கால் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், நான் இருக்கும் இடத்தையும், எனக்கு விபத்து ஏற்பட்டிருப்பதையும் போலீஸ் உறுதி செய்தனர். உடனே, இங்கு வந்து என்னை மீட்டு இருக்கின்றனர். ஆப்பிள் வாட்ச் இல்லாமல் இது நடந்திருக்காது.

ஃபால் டிடெக்சன் சேவைக்கு நன்றி என்றார். இதனிடையே அந்த விபத்து நடந்த வீட்டின் உரிமையாளரான எலிசபெத் லாப்ரேட் கூறுகையில், எங்களது வீட்டில் விபத்து ஏற்பட்ட உடனேயே எனது கணவர் 911 எண்ணுக்கு அழைத்தாார். ஆனால், அவர்களுக்கு ஏற்கனவே தகவல் வந்துவிட்டதாகவும், விபத்து நடந்த பகுதிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

இதை என்னால் நம்ப முடியவில்லை என்றார். டெக்னாலஜிகள் மூலம் சில பாதகங்கள் இருந்தாலும், இறுதியில் அது எப்படி பயன்படுகிறது என்பதிலேயே கவனம் இருக்க வேண்டும். எந்தவொரு டெக்னாலஜியும் அதனுடைய பலன்களை பொதுவாகவும் முழுமையாகவும் கொடுக்கின்றன. அதை நாம் பயன்படுத்தப்படும் விதத்தின் அடிப்படையிலேயே நல்லது கெட்டது அமைகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Watch Saves 55 Year Old Man Life Who Lost consciousness while Driving To Car in Easthampton
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X