Home
News

பைக் விபத்தில் சுயநினைவை இழந்து மயங்கிய நபர்: கடவுள் மாதிரி உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்- எப்படி தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதற்கு தகுந்தபடி இந்நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாதனங்களை தயார் செய்கிறது. ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய மென்பொருள் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஸ்மார்ட்போன்களை போன்றே ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு உடல்நல பாதுகாப்பு கண்காணிப்புக்கும் சிறந்த பயன்பாடாக ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச பயன்பட்டு வருகிறது.

பல்வேறு உடல் ஆரோக்கிய தேவைக்கு ஆப்பிள் வாட்ச்

பல்வேறு உடல் ஆரோக்கிய தேவைக்கு ஆப்பிள் வாட்ச்

வரக்கூடிய அழைப்புகளை எடுத்து பேசுவது, துண்டிப்பது, சாலைகளில் பயணிக்கும் போது மேப் செக் செய்வது, ஸ்மார்ட் வாட்ச் கையில் இருக்கும் போது இதய துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு, நடை பயண தூரம், உடற்பயிற்சி நிலை, சைக்கிளிங் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கண்காணிப்புகள் ஸ்மாரட் வாட்ச் மூலம் மேற்கொள்ளலாம். இதன் ஒருபகுதியாக ஸ்மார்ட்வாட்ச் ஒரு நபரின் உயிரையே காப்பாற்றி உள்ளது என்றால் நம்ப முடிகிறதா, அதன் விவரத்தை விரிவாகப் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் பைக்கில் பயணம் செய்தபோது விபத்து

எலெக்ட்ரிக் பைக்கில் பயணம் செய்தபோது விபத்து

அமெரிக்காவில் நபர் ஒருவர் எலெக்ட்ரிக் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவர் பைக்கில் மயங்கி விழுந்ததை அறிந்த ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. மயங்கி விழுந்ததுக்கும் ஆம்புலன்ஸ் வந்ததுக்கும் நடுவில் நடந்த விஷயமே சுவாரஸ்மானதாகும், காரணம் எலெக்ட்ரிக் பைக்கில் பயணித்தப் போது மயங்கி விழுந்துள்ளார். அப்போது அவருக்கு பல்ஸ் குறைந்துள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சில் ஒரு தனித்துவ அம்சம் இருக்கிறது.

பல்ஸ் ரேட் குறையும் பட்சத்தில் அவசர எண்ணுக்கு அழைப்பு

பல்ஸ் ரேட் குறையும் பட்சத்தில் அவசர எண்ணுக்கு அழைப்பு

ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சை கட்டி இருப்பவர்களின் பல்ஸ் ரேட் குறையும் பட்சத்தில் தானாக அவசர எண்ணுக்கு அழைப்பு கொடுக்கப்படும். அதேபோல் எலெக்ட்ரிக் பைக்கில் பயணித்தவர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவருக்கு பல்ஸ் ரேட் குறைந்துள்ளது. அவர் ஆப்பிள் வாட்ச் கையில் அணிந்துள்ளார். பல்ஸ் ரேட் குறைந்ததையடுத்து அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் 911 என்ற எமெர்ஜென்சி எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ் உதவியோடு அவரை மீட்டு மருத்துவமனையில் உரிய நேரத்தில் அனுமதித்தனர்.

உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

அதேபோல் முன்னதாக சிங்கப்பூரை சேர்ந்தவர் முகமது ஃபிட்ரி. இவரு இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென அவர் மீது வேன் மோதி விபத்துக்கு உள்ளாகி கீழே விழுந்துள்ளார். விபத்துக்கு உள்ளாகி நிலை தடுமாறி கீழே விழுந்த முகமது ஃபிட்ரி சுயநினைவை மறந்து மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் அவரது உயிரை காப்பாற்றியது என்றால் ஆச்சரியமாக உள்ளத அல்லவா. விபத்துக்குள்ளாகி சுயநினைவை இழந்து மயக்க நிலைக்கு சென்ற முகமது கையில் ஆப்பிள் வாட்ச் இருந்துள்ளது. முகமது கீழே விழுந்த வேகத்தில் ஆப்பிள் வாட்ச் மூலம் அவசர உதவி எண்ணுக்கு தகவல் சென்றிருக்கிறது. அதே நேரத்தில் அவர் இருக்கும் இருப்பிட விவரமும் பகிரப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பவ இடத்துக்கு வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

அவசர எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்

அவசர எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்

ஆப்பிள் வாட்ச்சில் இருந்து எப்படி தாமாக அவசர உதவி எண்ணுக்கு தகவல் அனுப்பப்பட்டது என்ற கேள்வி வரலாம். அது அதில் இருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். இந்த அம்சத்தின் பெயர் SOS ஆகும். ஆப்பிள் வாட்ச் அணிந்திருப்பவர்கள் ஏதாவது பிரச்சனையை எதிர்கொள்ளும் போது இதில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் தாமாகவே அவசர உதவி எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். முகமது விழுந்த வேகத்தில் எப்படி இந்த தகவல் அனுப்பப்பட்டது என்ற கேள்விகள் இருக்கும் பட்சத்தில், பட்டனை அழுத்தாமல் அதிக அதிர்வுகள் இருக்கும்பட்சத்தில் இந்த அம்சம் ஆக்டிவேட் ஆகி அவசர எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.

File Images

Best Mobiles in India

English summary
Apple Watch saved the life of a man who lost consciousness in Bike Accident
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X