தர்மம் தலை காக்கும்: 3000 முறை எச்சரிக்கை அனுப்பி ஒருவரின் உயிரை காப்பாற்றிய Apple Watch!

|

ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்தவரின் உயிரைக் காப்பாற்றியது என பல செய்திகளை முன்னதாக பார்த்திருக்கிறோம். அதன்படியான ஒரு நிகழ்வு மீண்டும் அரங்கேறி இருக்கிறது. 54 வயதான ஒருவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் துரிதமாக எச்சரிக்கை எழுப்பி காப்பாற்றியுள்ளது.

மனைவி பரிசாக அளித்த ஆப்பிள் வாட்ச்

மனைவி பரிசாக அளித்த ஆப்பிள் வாட்ச்

54 வயதான டேவிட் லாஸ்ட் என்பவர் தனது மனைவி பரிசாக அளித்த ஆப்பிள் வாட்ச்சை கையில் அணிந்துள்ளார். இந்த வாட்ச் தான் அவரை காப்பாற்றப் போகிறது என அவர் கண்டிப்பாக அப்போது அறிந்திருக்க மாட்டார்.

சரியான நேரத்தில் ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை அனுப்பி அவரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது.

ஈசிஜி சென்சார் ஆதரவு

ஈசிஜி சென்சார் ஆதரவு

பொதுவாக ஸ்மார்ட்வாட்ச் இல் பல்வேறு ஆரோக்கிய அம்சங்கள் இருக்கும் என்பது அறிந்ததே. அனைத்திலும் தனித்து நிற்கும் ஆப்பிள், இதிலும் மேம்பட்ட அம்சங்களோடு தனித்தே இருக்கிறது.

ஆப்பிள் வாட்சில் ஈசிஜி சென்சார் ஆதரவு இருக்கிறது. இந்த ஈசிஜி சென்சார் இதய துடிப்பை 24 மணிநேரமும் கண்காணிக்கிறது. இந்த அம்சம் தான் டேவிட் என்பவர் உயிரை காப்பாற்றி இருக்கிறது.

3000 முறை எச்சரிக்கை அனுப்பிய ஆப்பிள் வாட்ச்

3000 முறை எச்சரிக்கை அனுப்பிய ஆப்பிள் வாட்ச்

இங்கிலாந்தை சேர்ந்தவர் டேவிட் லாஸ்ட். 54 வயதான இவரின் இதயத்துடிப்பை கண்காணித்த ஆப்பிள் வாட்ச் அவருக்கு எச்சரிக்கை அனுப்பி இருக்கிறது.

அதுவும் ஒரு முறை இரண்டு முறை அல்ல, 3000 முறைக்கும் மேல் எச்சரிக்கை எழுப்பி இருக்கிறது.

வாட்ச் இல் உள்ள ஈசிஜி ஹார்ட் சென்சார் கிட்டத்தட்ட 3000 முறை குறைந்த இதயத் துடிப்புக்கான எச்சரிக்கைகளை அவருக்கு அனுப்பி உள்ளது. இதுவே அவரின் உயிரை காப்பாற்ற காரணமாக இருந்துள்ளது.

இதயத் துடிப்பை கண்காணித்து எச்சரிக்கை

இதயத் துடிப்பை கண்காணித்து எச்சரிக்கை

இதுகுறித்து இன்டிபென்டன்ட் இல் வெளியான அறிக்கையை பார்க்கலாம், 54 வயதான டேவிட் லாஸ்ட் தனது மனைவி அன்பளிப்பாக அளித்த ஆப்பிள் வாட்ச்சை கையில் அணிந்துள்ளார்.

இந்த வாட்ச் டேவிட்டின் இதயத் துடிப்பை கண்காணித்து எச்சரிக்கை அனுப்பி உள்ளது.

இதையடுத்து மருத்துவமனைக்கு செல்ல அவர் முடிவு செய்துள்ளார். மருத்துவ பரிசோதனையில், அவருக்கு இருந்த இதயப் பிரச்சனைகளின் எண்ணிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கையில் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச்

வெளியான தகவலின்படி, கையில் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் அவரது இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 30 என துடிக்கும் அளவு குறைந்ததை அவர் கண்டறிந்துள்ளார்.

சாதாரண இதயத் துடிப்பு 60-100 பிபிஎம் இடையே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

பலத்த இதயப் பிரச்சனை

பலத்த இதயப் பிரச்சனை

டேவிட் இதயத் துடிப்பு குறைந்ததை அறிந்த ஆப்பிள் வாட்ச் தொடர்ந்து எச்சரிக்கை அனுப்பி உள்ளது. இதை பார்த்த அவரது மனைவி உடனே மருத்துவமனைக்கு செல்லும்படி பரிந்துரைத்துள்ளார்.

மருத்துவமனையில் ECG, MRI உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் அவருக்கு பலத்த இதயப் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாதுகாப்பாக இருக்கும் டேவிட்

பாதுகாப்பாக இருக்கும் டேவிட்

டேவிட்டுக்கு தீவிர இதய அடைப்பு இருப்பதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.

பரிந்துரையின் பேரில், அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபர் இப்போது பாதுகாப்பாக இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிளுக்கும் அவளுக்கும் நன்றிக்கடன் உடன் இருப்பேன்

ஆப்பிளுக்கும் அவளுக்கும் நன்றிக்கடன் உடன் இருப்பேன்

உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்சை டேவிட் வெகுவாக பாராட்டி உள்ளார். மேலும் இதுகுறித்து டேவிட் கூறுகையில்,

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனக்கு பிறந்தநாள் வந்தது எனவும் இந்த பிறந்தநாளில் தான் அவரது மனைவி ஆப்பிள் வாட்சை பரிசாக அளித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் எனது பிறந்தநாளுக்கு எனக்கு ஆப்பிள் வாட்சை அவள் பரிசாக வழங்கவில்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். இதற்காக நான் எப்போதும் அவளுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். சார்ஜ் செய்யும் நேரத்தை தவிர இந்த வாட்ச் எப்போதும் என்னிடம் இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
Apple Watch Saved Life by Sends 3000 Alerts about Low Heart Rate

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X