மார்ச் மாதம் வெளியாகிறதா ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் வகைகள் இந்தாண்டு மார்ச் மாதம் வெளியாகலாம் என்று 9to5mac என்ற இணையத்தில் கூறப்பட்டுள்ளது. மார்ச் வெளியீட்டிற்கான கடைசி நிமிட பணிகளில் அந்நிறுவனம் ஈடுப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சில மாதங்களுக்கு முன் ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கும் போது ஆப்பிள் வாட்ச் 2015 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் எம்மாதம் வெளியாகும் என்பதில் எந்த அறிவிப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்சமயம் வெளியான தகவல்களின் படி ஆப்பிள் வாட்ச் மென்பொருள்களை சோதனை செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் முழு சோதனைகளும் நிறைவடைந்த பின் பிப்ரவரி 9 முதல் 16 ஆம் தேதி வரை ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்களிடம் பரிசோதனைக்காக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் வாட்ச் இயங்குதளம் மற்றும் பேட்டரி ஆகியவற்றை தொடர்ந்து சோதித்து வரும் நிலையில் ஆப்பிள் வாட்ச் வெற்றி பெறாது என்றும் கூறப்படுகின்றது.
சந்தையில் வெளியாகும் தேதியே இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் இந்த கருத்துக்கள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விட ஆப்பிள் பொருட்களுக்கு இவை சாதரணம் என்றே கூற வேண்டும்.
ஆப்பிள் வாட்ச் வகைகளின் ஆரம்ப விலை $349 இருக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications