நான் உயிருடன் இருக்க காரணமே Apple Watch தான்! பள்ளத்தாக்கில் விழுந்த இந்தியரின் வாக்குமூலம்..

|

Apple Watch ஆனது அசாதாரண இதயத் துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்டவைகளை கண்டறிந்து பயனர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது வழக்கம். ஆப்பிள் வாட்ச் உயிரை காப்பாற்றியது என்ற நிகழ்வை பலமுறை கேள்விப்பட்டிருப்போம். ஆப்பிள் சாதனங்கள் விலை உயர்ந்ததாக இருக்கிறது என்பது அறிந்ததே. ஆனால் விலை மதிப்பில்லா உயிரை அதிக விலை கொண்ட ஆப்பிள் வாட்ச்கள் காப்பாற்றுகிறது என்றால் அது பாராட்டத்தக்க விஷயம் தானே.

பள்ளத்தில் விழுந்த சிறுவன்

பள்ளத்தில் விழுந்த சிறுவன்

மகாராஷ்டிராவில் 17 வயது சிறுவன் ஒரு மலையேற்றத்தின் போது ஆழமான பள்ளத்தாக்கில் தவறி கீழே விழுந்துள்ளான். அப்போது தனது கையில் இருந்த ஆப்பிள் வாட்ச்சை சாதுர்யமாக பயன்படுத்தி உயிர் பிழைந்துள்ளான். இந்த நிகழ்வு குறித்த தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது.

பல உயிர்களை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

பல உயிர்களை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

இசிஜி போன்ற பல்வேறு சுகாதார அம்சங்களைக் கொண்ட ஆப்பிள் வாட்ச் பல உயிர்களை காப்பாற்றிய நிகழ்வுகள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். அதன்படி தற்போது இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன்.

பள்ளத்தில் இருந்து எப்படி வெளியேறினார்?

பள்ளத்தில் இருந்து எப்படி வெளியேறினார்?

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டைச் சேர்ந்த 17 வயது மருத்துவ மாணவர், லோனாவாலாவுக்கு அருகில் உள்ள விசாபூர் கோட்டையில் தனது நண்பர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது தவறுதலாக ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்திருக்கிறார். என்ன செய்வது என்று அறியாத அந்த இளைஞர் எப்படி அந்த பள்ளத்தில் இருந்து வெளியே வந்தார் என்பது தான் இங்கே சுவாரஸ்யம்.

வாக்குமூலம் அளித்த இளைஞர்

வாக்குமூலம் அளித்த இளைஞர்

தனக்கு சொந்தமான ஆப்பிள் வாட்ச் மூலமாக தான் நான் உயிருடன் இருக்கிறேன் என அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். பள்ளத்தில் விழுந்த போது சரியான நேரத்தில் ஆப்பிள் வாட்ச் தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் தொடர்பு கொள்ள உதவியதாகவும் இந்தியா டுடே டெக் தளத்ததுக்கு அளித்த பேட்டியில் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

கனமழையில் மலையேற்றம்

கனமழையில் மலையேற்றம்

பள்ளத்தாக்கில் விழுந்த அந்த 17 வயது சிறுவனின் பெயர் ஸ்மித் நிலேஷ் மேத்தா ஆகும். ஜூலை 11 2022 அன்று மேத்தா தனது மூன்று நண்பர்களுடன் லோனாவாலா அருகே மலையேற்றத்துக்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து திரும்பி வரும் போது தவறுதலாக பள்ளத்தாக்கில் விழுந்துள்ளான்.

அன்றைய தினம் பலத்த மழை பெய்திருக்கிறது. மலை மேல் உள்ள கோட்டையை அடைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு திரும்பும் வழியில் பள்ளத்தில் விழுந்துள்ளான். கனமழை பெய்ததன் காரணமாக தவறி பள்ளத்தில் விழுந்துவிட்டேன் என மேத்தா தெரிவித்துள்ளார்.

தவறி விழுந்த இளைஞர் அளித்த வாக்குமூலம்

தவறி விழுந்த இளைஞர் அளித்த வாக்குமூலம்

130 - 150 மீட்டர்கள் கீழே உள்ள பள்ளத்தாக்கில் தவறி விழுந்ததாக அந்த வாலிபர் தெரிவித்துள்ளார். பள்ளத்தாக்கு முழுவதும் மரங்கள் சூழ்ந்திருந்ததாகவும் எனவே அவரது நண்பர்களால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார். அந்த சமயத்தில் கல் மற்றும் மரம் தடுத்து நின்றதால் அவர் மேலும் பள்ளத்துக்குள் விழாமல் தடுத்து நின்றிருக்கிறார். காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

நிராயுதபாணியின் கையில் இருந்த ஒரே ஒரு ஆயுதம்

நிராயுதபாணியின் கையில் இருந்த ஒரே ஒரு ஆயுதம்

அதிர்ஷ்டவசமாக மேத்தாவுக்கு வேறு எந்த தீவிர காயங்களும் ஏற்படவில்லை. முழுமையாக சுயநினைவுடன் இருந்திருக்கிறார். மலையேற்றத்தின் போது மேத்தாவும் அவரது நண்பர்களும் ஒரே ஒரு பையை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளனர். அந்த பையில் தான் மொத்த நபரின் போனும் இருந்திருக்கிறது. எனவே பள்ளத்தில் விழுந்த மேத்தாவிடம் போன் எதுவும் இல்லை. ஆனால் இங்கு சுவாரஸ்யம் என்னவென்றால் மேத்தாவின் கையில் ஆப்பிள் வாட்ச் இருந்திருக்கிறது. அதாவதுநிராயுதபாணியின் கையில் இருந்த ஒரே ஒரு ஆயுதம் போல் அந்த ஆப்பிள் வாட்ச் இருந்திருக்கிறது.

கைக்கொடுத்த ஆப்பிள் வாட்ச்

கைக்கொடுத்த ஆப்பிள் வாட்ச்

கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் குறித்து மேத்தாவிற்கு நியாபகம் வந்திருக்கிறது. அப்போது ஆப்பிள் வாட்ச் ஜியோ நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தார். எனவே அவர் அழைப்பு செயல்பாட்டை பயன்படுத்தினார். ஆப்பிள் வாட்ச் தங்களிடம் மொபைல் இல்லாதபோதும் அழைப்புகளை செய்ய அனுமதிக்கிறது. இதன்மூலம் மேத்தா தனது நண்பர்களையும் குடும்பத்தினரையும் அழைத்துள்ளார். அவர்கள் மீட்புக் குழுக்களைத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறி இருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் அவரை பள்ளத்தில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple Watch is the only reason I'm alive! Confessions of an Indian who fell in the valley of Mountain..

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X