Home
News

மெடிக்கல் மிராக்கிள்: உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்- வாகன விபத்தில் சுயநினைவே போச்சு: ஒரு நொடி அதிசயம்!

சிங்கப்பூரை சேர்ந்தவர் முகமது ஃபிட்ரி. இவரு இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென அவர் மீது வேன் மோதி விபத்துக்கு உள்ளாகி கீழே விழுந்துள்ளார். விபத்துக்கு உள்ளாகி நிலை தடுமாறி கீழே விழுந்த முகமது ஃபிட்ரி சுயநினைவை மறந்து மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் அவரது உயிரை காப்பாற்றியது என்றால் ஆச்சரியமாக உள்ளத அல்லவா. அதற்கான முழு விளக்கத்தை பார்க்கலாம்.

ஆப்பிள் வாட்ச் மூலம் தகவல்

ஆப்பிள் வாட்ச் மூலம் தகவல்

விபத்துக்குள்ளாகி சுயநினைவை இழந்து மயக்க நிலைக்கு சென்ற முகமது கையில் ஆப்பிள் வாட்ச் இருந்துள்ளது. முகமது கீழே விழுந்த வேகத்தில் ஆப்பிள் வாட்ச் மூலம் அவசர உதவி எண்ணுக்கு தகவல் சென்றிருக்கிறது. அதே நேரத்தில் அவர் இருக்கும் இருப்பிட விவரமும் பகிரப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பவ இடத்துக்கு வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

சிறந்த எஸ்ஓஎஸ் அம்சம்

சிறந்த எஸ்ஓஎஸ் அம்சம்

ஆப்பிள் வாட்ச்சில் இருந்து எப்படி தாமாக அவசர உதவி எண்ணுக்கு தகவல் அனுப்பப்பட்டது என்ற கேள்வி வரலாம். அது அதில் இருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். இந்த அம்சத்தின் பெயர் SOS ஆகும். ஆப்பிள் வாட்ச் அணிந்திருப்பவர்கள் ஏதாவது பிரச்சனையை எதிர்கொள்ளும் போது இதில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் தாமாகவே அவசர உதவி எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். முகமது விழுந்த வேகத்தில் எப்படி இந்த தகவல் அனுப்பப்பட்டது என்ற கேள்விகள் இருக்கும் பட்சத்தில், பட்டனை அழுத்தாமல் அதிக அதிர்வுகள் இருக்கும்பட்சத்தில் இந்த அம்சம் ஆக்டிவேட் ஆகி அவசர எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள்

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள்

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதற்கு தகுந்தபடி இந்நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாதனங்களை தயார் செய்கிறது. ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய மென்பொருள் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது.

ஏணைய புதிய வசதிகள்

ஏணைய புதிய வசதிகள்

ஆப்பிள் வாட்ச் அதன் பயனர்களின் வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 புதிய அம்சங்களை பெறுகிறது. புதிய ஆப்பிள் வாட்ச் ஆனது அடுத்த தலைமுறை அம்சத்தோடு புதிய மற்றும் சிறந்த அணுகலோடு வருகிறது. கலிபோர்னியா ஸ்ட்ரீமிங் நிகழ்வில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 வெளியிட்டுள்ளது மற்றும் புதிய பெரிய வடிவமைப்பு, மெல்லிய உளிச்சாயுமோரம், வேகமான சார்ஜிங், புதிய ரெடினா டிஸ்ப்ளே, சிறந்த ஆயுள் மற்றும் பலவற்றோடு வருகிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 முழு பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட வசதியோடு வருகிறது. இது வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, இசிஜி வசதியோடு சிறந்த மற்றும் உறுதியான வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இது ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சத்தோடு வருகிறது. இதன் விலை 399 டாலர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வளைந்த டிஸ்ப்ளேவுடன் புதிய வசதி

வளைந்த டிஸ்ப்ளேவுடன் புதிய வசதி

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 போன்றே இரண்டு வகைகளில் வருகிறது. 41 மிமீ மற்றும் 45 மிமீ என்ற இரண்டு அளவில் வருகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒரு மென்மையான உறை வடிவமைப்பு மற்றும் நல்ல வளைந்த டிஸ்ப்ளேவுடன் புதிய வசதியோடு வருகிறது. இதில் பல்வேறு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய சார்ந்த சேனல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

 இதுவரை கண்டிராத மிகப் பெரிய டிஸ்ப்ளே

இதுவரை கண்டிராத மிகப் பெரிய டிஸ்ப்ளே

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 இதுவரை கண்டிராத மிகப் பெரிய டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதேபோல் கடிகாரத்தின் வடிவமும் மறுவரையறை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் பெரிய காட்சிகளுடன் இணைந்து பயன்படுத்தும் வகையிலான பெரிய அளவிலான பட்டன்கள் இடம்பெறுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 சில்வர், கிராஃபைட், கோல்ட், டைட்டானியம் மற்றும் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ஆகிய வண்ண விருப்பத்தில் வருகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Apple Watch has saved the life of a man who lost consciousness in an accident
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X