மெய்யாலுமா, ஒரே நாளில் 10 லட்சம் ஆப்பிள் வாட்ச்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன?
ஒரே நாளில் 10 லட்சம் ஆப்பிள் வாட்ச்கள் முன்பதிவு செய்யப்பட்டு விற்பனையை மிகவும் சிறப்பாக துவங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். அமெரிக்காவின் ஸ்லைஸ் இன்டெல்லிஜன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், முன்பதிவு செய்தவர்களில் பெரும்பாலானோர் அலுமினியம் ஸ்போர்ட் லைன் கொண்ட ஆப்பிள் வாட்ச் வகைகளையே முன்பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆப்பிள் வாட்ச் வகையினை மூன்றில் ஒருவர் முன்பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான முன்பதிவுகள் 42 எம்எம் கொண்ட பெரிய திரை கொண்ட வாட்ச் வகையை சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் தங்க நிற ஆப்பிள் கருவிகள் சந்தையில் பிரபலமாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆப்பிள் வாட்ச் முன்பதிவுகளில் இந்நிலை சற்று மாற்றம் கண்டுள்ளது என கூறும் அளவு ஸ்பேஸ் க்ரே மாடல் 40 சதவீத முன்பதிவும், 34 சதவீதம் ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் மாடல் பெற்றிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல்கள் அமெரிக்காவில் மட்டும் தான் என்பதோடு இவை இன்னும் ஆப்பிள் நிறுவனத்தின் மூலம் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை தவிற ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் காங், ஜப்பான் மற்றும் யு.கே போன்ற நாடுகளில் முன்பதிவுகள் துவங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications