இலவசமாக Apple Watch.. தினமும் 15,000 ஸ்டெப்ஸ் நடந்தா போதும்.. உடனே 'இப்படி' ரெஜிஸ்டர் பண்ணுங்க..
ஆப்பிள் (Apple) நிறுவனம் இந்திய மக்களை சுறுசுறுப்படைய செய்யும் ஒரு புதிய அறிவிப்பது வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 (Apple Watch Series 10) மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா (Apple Watch Ultra) ஸ்மார்ட்வாட்ச்களை இலவசமாக பெரும் வாய்ப்பை நிறுவனம் வழங்க துவங்கியுள்ளது. இந்த இலவச ஆப்பிள் வாட்சை (Free Apple Watch) பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த இலவச ஆப்பிள் வாட்சிற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேனீ போல சுறுசுறுப்பாக இயங்கும் இந்தியர்களை, இன்னும் சுறுசுறுப்பாகவும், ஆக்டிவாகவும் மாற்ற தூண்டும் 'இந்தியா கெட்ஸ் மூவிங்' (India Gets Moving) என்ற புதிய ப்ரோக்ராமை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜூப்பர் (Zooper) மற்றும் எச்டிஎப்சி எர்கோ (HDFC Ergo) உடன் கூட்டு சேர்ந்து ஆப்பிள் நிறுவனம் இந்த பிரத்தியேகமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இலவசமாக Apple Watch.. தினமும் 15,000 ஸ்டெப்ஸ் நடந்தா போதும்:
இந்த திட்டத்தின் கீழ் சேரும் ஒவ்வொரு ஆப்பிள் பயனருக்கும் இலவசமாக ஆப்பிள் வாட்ச் கிடைக்கும் வாய்ப்பு இதன் மூலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இலவசமாக ஆப்பிள் வாட்சை பெற, ஒவ்வொருவரும் தினசரி 15,000 ஸ்டெப்ஸ் நடையை நிறைவு செய்ய (complete 15,000 steps daily) வேண்டும். சரி, ஆப்பிள் அறிவித்துள்ளபடி, எப்படி ஒரு புதிய ஆப்பிள் வாட்ச் சாதனத்தை இலவசமாக பெறுவது என்ற விபரத்தை தெளிவாக பார்க்கலாம்.
1. ஆப்பிள் வாட்சை இலவசமாகப் பெற, பயனர்கள் 1 வருடத்திற்கு தினமும் 15,000 ஸ்டெப்ஸ் இலக்கை முடிக்க வேண்டும்.
2. இந்த இலவச ஆப்பிள் வாட்ச் ப்ரோக்ராமில் நீங்கள் பங்கேற்க, முதலில் ஒரு ஆப்பிள் வாட்ச் வாங்க வேண்டும்.
3. பிறகு, ஜூப்பர் வெல்னஸ் (Zopper Wellness) திட்டத்தில் உங்களை நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
4. இதுவொரு இலவச பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது.
5. உங்கள் விபரங்களை பதிவு செய்த பிறகு, பயனர்கள் HDFC Ergo இன் காப்பீட்டுத் திட்டத்தின் உறுப்பினர்களாக மாறுவார்கள்.
100% வரை பணத்தை திரும்ப பெரும் வாய்ப்பு.. ஆனால் தினமும் 15000 ஸ்டெப்ஸ் நடக்கணும்:
6. சால்வி டெக் சொலுஷன்ஸ் (Solvy Tech Solutions) முதன்மை பாலிசிதாரராக செயல்படும்.
7. பங்கேற்பாளர்கள் தங்கள் ஆப்பிள் ஹெல்த் கிட் (Apple Health Kit) டேட்டாவை எச்டிஎப்சி எர்கோ (HDFC Ergo) ஆப்ஸுடன் சிங்க் செய்ய வேண்டும்.
8. இதன் பிறகு, ஆப்பிள் வாட்சின் விலையில் 100 சதவிகிதம் வரை திரும்பப் பெற பயனர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
9. தினசரி நீங்கள் 15,000 ஸ்டெப் கவுண்ட் எண்ணிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும்.
10. நீங்கள் பூர்த்தி செய்யும் ஒவ்வொரு நாள் கணக்கின் அடிப்படையில் பணம் திரும்ப தரப்படும்.
1 வருடத்திற்கு மொத்தமாக நீங்கள் எவ்வளவு ஸ்டெப்ஸ் நடக்கணும் தெரியுமா?
இந்த விதியின் படி, எந்தவொரு பயனர் ஒரு முழு வருடத்திற்கு, தினமும் 15,000 ஸ்டெப்ஸ் நடக்கிறாரோ, அவருக்கு முழுப் பணத்தைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளது என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த இந்தியா கெட்ஸ் மூவிங் ப்ரோக்ராமில் இணைய, நீங்கள் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா உள்ளிட்ட பல மாடல்களில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். தினசரி 15,000 ஸ்டெப்ஸ் என்று கணக்கிடுகையில் ஒரு வருடத்திற்கு மொத்தமாக 54,75,000 ஸ்டேப் நடையை நீங்கள் நடக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








