ஐபோன் பயனர்களுக்கு ஆப்பிள் கொடுத்த வார்னிங்.. இதை தெரியாம செஞ்சா கண்டிப்பா டேன்ஜர்..
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் பயனர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இத்தகைய அக்கறையான நிறுவனம், இப்போது அதன் ஐபோன் பயனர்களுக்கு ஒரு வார்னிங் செய்தியை வெளியிட்டுள்ளது. ஐபோன் பயனர்கள் தெரியாமல் கூட சில செயல்களை செய்ய கூடாதென்று எச்சரித்துள்ளது.
ஐபோன் (iPhone) பயன்படுத்துபவர்களுக்கு ஆப்பிள் பொதுவான ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. ஐபோன் பயனர்கள் அவர்களின் சாதனங்களை சார்ஜ் (iPhone charging) செய்யும் போது, போனுக்கு அருகில் தூங்க வேண்டாம் (don't sleep near a charging phone) என்று எச்சரித்துள்ளது. சார்ஜ் செய்யப்படும் போனுக்கு அருகில் தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்பிள் (Apple) வெளியிட்ட ஒரு சேவை அறிவிப்பில், நிறுவனம் சரியான மொபைல் சார்ஜிங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சார்ஜிங் கேபிளுடன் இணைக்கப்பட்ட ஐபோன் சாதனத்துடன் தூங்குவதால் ஏற்படும் அபாயங்களை நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது. சரியான சார்ஜிங் பழக்கம் இல்லாமல், போனை உறங்கும் போது அருகில் வைத்துக்கொண்டே சார்ஜ் செய்தால், தீ, மின்சார அதிர்ச்சி, தீ காயங்கள் அல்லது போனுக்கு சேதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளது.
இது ஐபோன் பயனர்களை பல வகையான அபாயங்களை சந்திக்க செய்யுமென்று கூறியுள்ளது. இந்த அபாயங்களைத் தவிர்க்க, நல்ல காற்றோட்டம் (ventilation) உள்ள பகுதியில் தான் ஐபோன்களை கேபிளுடன் இணைத்து சார்ஜ் செய்ய வேண்டும் என்று நிறுவனம் கூறியுள்ளது. உங்கள் போன்கள் சரியான காற்றோட்டத்துடன் சார்ஜ் ஆவதை உறுதி செய்யுமாறு ஆப்பிள் கடுமையாக பயனர்களுக்கு அறிவுறுத்துகிறது.
போர்வை அல்லது தலையணைக்கு அடியில் போனை சார்ஜ் செய்வதும், சாதனம் அதிக வெப்பமடைவதால் ஏற்படும் அபாயங்கள் பற்றி நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆப்பிளின் முக்கிய எச்சரிக்கை செய்தி தெளிவாக உள்ளது. "ஐபோன் சாதனம் அல்லது பவர் அடாப்டர் (power adapter) அல்லது வயர்லெஸ் சார்ஜர் போன்றவற்றின் மீது தூங்காதீர்கள், மின்சக்தி ஆதாரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் போது அவற்றை போர்வை, தலையணை அல்லது உங்கள் உடலின் கீழ் வைப்பதைத் தவிர்க்கவும்." என்று நிறுவனம் கூறியுள்ளது.

ஐபோன்கள், பவர் அடாப்டர்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜர்களை (wireless charger) எப்போதும் நன்கு காற்றோட்டமான இடங்களில் பயன்படுத்த வேண்டும் அல்லது சார்ஜ் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. மூன்றாம் தரப்பு சார்ஜர்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஆபத்தை ஆப்பிள் மேலும் எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக ஆப்பிளின் அதிகாரப்பூர்வ தயாரிப்புகளால் ஆதரிக்கப்படும் பாதுகாப்புத் தரங்கள் இல்லாத மலிவான மாற்றுகள் உங்களை ஆபத்தான இடத்திற்கு அழைத்து செல்லும் என்றும் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தக் கவலையை நிவர்த்தி செய்ய, சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கும் படி ஆப்பிள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. குறிப்பாக, ஐபோனுக்காக தயாரிக்கப்பட்ட கேபிள்களைத் தேர்வு செய்யுமாறு ஆப்பிள் அதன் பயனர்களுக்கு அறிவுறுத்துகிறது. மூன்றாம் தரப்பு கேபிள்கள் மற்றும் பவர் அடாப்டர்களைப் பயன்படுத்தி ஐபோனை சார்ஜ் செய்வது USB 2.0 அல்லது அதற்குப் பிந்தைய தரநிலைகள் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கும்போது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

மற்ற அடாப்டர்கள் இந்தப் பாதுகாப்புத் தரங்களைச் சந்திக்காமல், தீங்கு விளைவிக்கும் அல்லது கூட ஆபத்துகளை ஏற்படுத்தலாம் என்று நிறுவனம் விளக்குகிறது. ஆப்பிளின் எச்சரிக்கை சார்ஜ் செய்யும் போது அருகில் தூங்குவதைத் தாண்டி நீண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரவங்கள் (liquid) அல்லது தண்ணீருக்கு (water) அருகில் ஃபோன்களை சார்ஜ் செய்வதைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.
சேதமடைந்த சார்ஜர்களை உடனடியாக நிராகரிக்க வேண்டியதன் (discard damaged chargers) அவசியத்தையும் நிறுவனம் வலியுறுத்துகிறது. பழுதடைந்த கேபிள்கள் அல்லது சார்ஜர்களைப் பயன்படுத்துதல் அல்லது ஈரப்பதத்தின் முன்னிலையில் சார்ஜ் செய்தல் ஆபத்தை விளைவிக்கும் என்று ஆப்பிள் கூறியுள்ளது. முடிவில், இந்த பரிந்துரைகளை கடைபிடிப்பதன் மூலம், பயனர்கள் தங்களையும், தங்கள் ஐபோன் சாதனங்களையும் மற்றும் தங்கள் சுற்றுப்புறங்களை சாத்தியமான அபாயங்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்று கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








