உச்சகட்டத்திற்கு செல்லும் ஆப்பிள் சாம்சங் போர்

Posted By: Karthikeyan
உச்சகட்டத்திற்கு செல்லும் ஆப்பிள் சாம்சங் போர்

சில வாரங்களுக்கு முன்புதான் ஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேடுகளில் உள்ள 26 தொழில் நுட்பங்களை ஒத்த தொழில் நுட்பங்களை தனது சாதனங்களில் பயன்படுத்தியதற்காக சாம்சங், ஆப்பிளுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அமெரிக்க நீதமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் இந்த நீதிமன்ற உத்தரவு இந்த இரண்டு நிறுவனங்களையும் திருப்திபடுத்தியதாக தெரியவில்லை. அதனால் சாம்சங் இந்த தீர்ப்பை ஒருபட்சமானது என்றும் மேலும் புதிய விசாரனை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

மறுபுறமோ ஆப்பிள் இன்னும் ஒரு படி மேலே போய், சாம்சங் தங்களது தொழில் நுட்பங்களை காப்பி அடித்து அளவுக்கு அதிகமாக சம்பாதித்துவிட்டனர் என்றும், அதன் மூலம் தங்களது பெயருக்கு களங்கம் விளைவித்துவிட்டனர் என்றும் புகார் தெரிவிக்கின்றனர். அதற்காக சாம்சங் மேலும் 707 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வரும் டிசம்பர் 6 அன்று இரண்டு நிறுவனங்களையும் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். என்ன நடக்கப்ப போகிறது என்பது போகப்போகத்தான் தெரியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot