Home
News

2.8 லட்சத்தை திருப்பி கொடுங்கடா.. Apple Vision Pro-வை ரிட்டர்ன் செய்யும் ஆப்பிள் பயனர்கள்.. என்ன காரணம்?

இந்த ஆண்டின் ஹை-டெக் சாதனமாக வெளிவந்த டிவைஸ் தான் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் (Apple Vision Pro) சாதனம். போட்டி போட்டு ஆர்டர் செய்யவார்களில் பாதி-பேர் இப்போது இதை ரிட்டர்ன் செய்து முழு பணத்தையும் தருமாறு ஆப்பிளிடம் முறையிட்டு வருகின்றனர்.

ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro): ஆம், ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) சாதனத்தை அறிமுகம் செய்து வெறும் 2 வாரங்களே ஆன நிலையில், பல ஆப்பிள் விஷன் ப்ரோ பயனர்கள் இப்போது இந்த அதிநவீன ஹெட்செட் சாதனத்தை ரிட்டர்ன் செய்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 2.8 லட்சமாகும்.

2.8 லட்சத்தை திருப்பி கொடுங்கடா.. ஆப்பிள் பயனர்கள் காட்டம்..

2.8 லட்சத்தை திருப்பி கேட்கும் பயனர்கள்: ஆப்பிள் விஷன் ப்ரோவை 2.8 லட்சம் கொடுத்து வாங்கிய தீவிரமான ஆப்பிள் ரசிகர்களில் பலர் இப்போது இந்த சாதனத்தை, ரிட்டர்ன் பாலிசியின் கீழ் திருப்பி கொடுத்து வருகின்றனர். ஆனால், இன்னும் பல ஆப்பிள் விஷன் ப்ரோ பயனர்கள் இதை விரும்பி தினம்தினம் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். உண்மையை சொல்ல போனால், ஆப்பிள் விஷன் ப்ரோ சாதனம் கலவையான பயனர் விருப்பத்தை பெற்றுள்ளது.

14 நாள் யூசேஜ் பாலிசி: ஆரம்பத்தில் இதை எல்லோரும் ஒரு கண்முடித்தனமான ஆர்வத்தில் வாங்கி இருந்தாலும், இந்த சாதனத்தின் 14 நாள் யூசேஜ் பாலிசி காலம் நிறைவடைவதற்குள் பலர் இதை ரிட்டர்ன் செய்ய துவங்கியுள்ளதாக சமீபத்தில் வெளியான ப்ளூம்பெர்க் (Bloomberg) அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதன் விகிதம் சராசரி மற்றும் சராசரிக்கு மேல் உள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சராசரி அளவு என்பது எவ்வளவு: தினசரி ஒன்றல்ல, இரண்டு ஆப்பிள் விஷன் ப்ரோ சாதனங்களை பயனர்கள் சிறிய நகரங்களில் ரிட்டர்ன் செய்வதாக அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. பெரிய நகரங்களில் ஒரு நாளுக்கு 7 அல்லது 8 ஆப்பிள் விஷன் ப்ரோ சாதனங்களை ஆப்பிள் பயனர்கள் 14 நாட்களுக்குள் திருப்பி கொடுத்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

2.8 லட்சத்தை திருப்பி கொடுங்கடா.. ஆப்பிள் பயனர்கள் காட்டம்..

இது சமமான பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ரெவ்யூக்களை பெற்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. பாசிட்டிவாக இதுவரை ஆப்பிள் விஷன் ப்ரோ சாதனத்தை பற்றி பல தகவல்கள் வெளியாகியுள்ளதால், இப்போது என்ன காரணத்தினால், ஆப்பிள் விஷன் ப்ரோ பயனர்கள் இந்த சாதனத்தை ரிட்டர்ன் செய்துள்ளனர் என்பதை பார்க்கலாம்.

உடல் அசௌகரியம்: பயனர்கள் ஹெட்செட் கனமாகவும், பயன்படுத்த சிரமமாகவும், அசௌகரியமாகவும் இருப்பதால் தலைவலி மற்றும் அதை நிர்வகிப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்று கூறியுள்ளனர்.

மதிப்பிற்கு ஏற்ற நியாயமில்லை: வரையறுக்கப்பட்ட பயன்பாடுகள் மற்றும் உள்ளடக்கம் மட்டுமே பயன்படுத்த கிடைக்கிறது. அதிக விலைக் குறியீட்டை நியாயப்படுத்தத் தவறிவிட்டது என்று கூறி ரிட்டர்ன் செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தித்திறன் தாக்கம்: வழக்கமான அமைப்புகளுடன் ஒப்பிடும்போது பணி அம்சங்கள் உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்கவில்லை, மேலும் நீடித்த பயன்பாடு சவாலானது என்பதை நிரூபிக்கிறது என்று கூறி ரிட்டர்ன் செய்யப்பட்டுள்ளது.

காட்சி சிக்கல்கள்: கண்ணை கூசும் பார்வை, குறுகிய பார்வை, கண் சோர்வு மற்றும் பார்வை சிக்கல்கள் அனுபவத்தை இதில் அதிகம் சந்தித்ததாக கூறி ஆப்பிள் விஷன் ப்ரோ ரிட்டர்ன் செய்யப்பட்டுள்ளது.

சமூகத் துண்டிப்பு: இந்த சாதனமானது சமூக தொடர்புகளிலிருந்து பயனர்களைத் தனிமைப்படுத்துகிறது என்று கூறியும் ரிட்டர்ன் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு தைரியமாக ஆப்பிள் பயனர்கள் ஆப்பிள் விஷன் ப்ரோ சாத்தந்தை ரிட்டர்ன் செய்ய மற்றொரு காரணமும் இருக்கிறது. காரணம், ஆப்பிள் நிறுவனத்தின் தகவல் படி, 14 நாட்களுக்குள் சாதனத்தை ரிட்டர்ன் செய்தால் முழு பணம் திரும்ப கிடைக்கும் என்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Apple Vision Pro sees high return rate after 14 days users asking for full refund from Apple
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X