இனி iPhone-லாம் வேஸ்ட்.. கண்ணுக்குள் படம்காட்டும் Apple.. மிக்ஸ்டு ரியாலிட்டிக்கு நீங்கள் ரெடியா? என்ன விலை?
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் அடுத்த பியூச்சர்ஸ்டிக் டிவைஸான ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் (Apple Vision Pro Headset) சாதனத்தை எப்போது அறிமுகம் செய்யுமென்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இந்த புதிய ஹெட்செட் பற்றிய சுவாரசியமான கூடுதல் விபரங்கள் இதோ.
WWDC 2023 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் அதன் விஷன் ப்ரோ ஹெட்செட் (Vision Pro Headset) மாடலை அறிமுகம் செய்தது. இதுவொரு மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் (mixed-reality headset) சாதனமாகும். விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த டிவைஸில் நிறுவனம் பல சுவாரசியமான ஹார்டுவேர் (hardware) மற்றும் விஷன் ஓஎஸ் (visionOS software) என்ற பிரத்தியேக சாப்ட்வேரை பயன்படுத்தியுள்ளது.

இதன் அறிமுகம் பற்றி ஆப்பிள் நிறுவனம் இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், மிகவும் பிரபலமான ஆப்பிள் அனாலிஸ்ட் மார்க் குர்மன் (Apple analyst Mark Gurman) வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் சாதனம் (Apple Vision Pro Headset Launch February 2024) பிப்ரவரி 2024 இல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் (Apple Vision Pro Headset):
இந்த ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் சாதனத்தின் தயாரிப்பு (Vision Pro Headset Production) இப்போது முழுவீச்சில் சீனாவில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024 ஆம் மாதத்திற்குள் ஆப்பிள் நிறுவனம் அதன் தயாரிப்பை முடிக்க முடிவு செய்துள்ளதாக லீக் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த சாதனத்தின் வருகையை உறுதி செய்யும் விதமாக, ஆப்பிள் நிறுவனம் சாப்ட்வேர் டெவெலப்பர்களுக்கு (software developers) "கெட் ரெடி (Get Ready)" அழைப்பை அனுப்பியுள்ளது.
இந்த சாதனம் முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும். அதனை தொடர்ந்து உலக சந்தைகளில் அணைத்து இடங்களிலும் இந்த புதிய ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த சாதனத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக நிறுவனம் அதன் விற்பனை அங்காடி மற்றும் விற்பனையாளர் நபர்களுக்கு இந்த சாதனம் பற்றிய புரிதலை வழங்க முடிவு செய்துள்ளது.

அதேபோல், ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ ஹெட்செட் வாங்க விரும்பும் பயனர்களுக்காக ஒரு பிரத்தியேகமான மொபைல் ஆப்ஸையும் (Mobile apps) அறிமுகம் செய்யவுள்ளதக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த மொபைல் ஆப்ஸ், வாடிக்கையாளர்களின் தலையை ஸ்கேன் செய்கிறது. வாடிக்கையாளர்களின் தலைக்கு ஏற்ற பேண்ட் (band) மாற்று லைட் சீல்களை (light seal) தேர்வு செய்ய அனுமதிக்கும் விதத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க எப்படி ஆப்பிள் ஐபோன் (Apple iPhone) சாதனங்கள் மிகவும் பிரபலமாக இருக்கிறதோ, அதைபோல், அடுத்த ஆண்டு முதல் உலகத்தில் பல மூலைமுடுக்குகளில் இந்த ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் சாதனம் விற்பனையாக போகிறது. வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் சந்தையாக விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual reality) சந்தை திகழ்கிறது.
ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் விலை (Apple Vision Pro Headset Price):
இதனால், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் கேட்ஜெட் (smart gadgets) சாதனம், உலகளவில் நல்ல வரவேற்பை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் சாதனம் 3499 டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.2,91,307 விலையை நெருங்கக்கூடும்.


Click it and Unblock the Notifications








