காதலர் தின ஸ்பெஷல்.. லேட்டஸ்ட் iPhone முதல் AirPods வரை.. ஆபர்களை அள்ளி வீசும் Apple Valentines Day 2026 சேல்!
ஆப்பிள் (Apple) நிறுவனம் 2026 காதலர் தினத்தை முன்னிட்டு ஆப்பிள் வேலண்டைன்ஸ் டே 2026 என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதன் கீழ் பல வகையான ஆப்பிள் தயாரிப்புகளின் மீது ஆபர்கள் கிடைக்கிறது. மேலும் இந்த தள்ளுபடிகள் இப்போது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இந்திய வலைத்தளத்தில் நேரலையில் உள்ளன.
ஆப்பிள் லேப்டாப்கள் மீதான ஆபர்கள்: மேக்புக் ஏர் எம்4 தற்போது ரூ.10,000 வரை உடனடி கேஷ்பேக்குடன் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.99,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 13-இன்ச் மாடலை இப்போது ரூ.89,900 க்கு வாங்கலாம். செக் அவுட்டில் கேஷ்பேக் தானாகவே பயன்படுத்தப்படும் என்றும், இது ஆர்டர் செய்வதற்கு முன் வாங்குபவர்கள் இறுதி விலையை பார்ப்பதை எளிதாக்குகிறது என்றும் ஆப்பிள் கூறுகிறது. இந்த சலுகை ICICI, Axis மற்றும் American Express கார்டுகளில் செல்லுபடியாகும்.

இதேபோல தேர்ந்தெடுக்கப்பட்ட மேக்புக் ப்ரோ மாடல்களிலும் அதே ரூ.10,000 கேஷ்பேக் கிடைக்கிறது. முதலில் ரூ.1,69,900 க்கு வாங்க கிடைத்த எம்4 சிப் கொண்ட 14-இன்ச் மேக்புக் ப்ரோ, ஆப்பிள் சிறப்பு விற்பனையின் கீழ் ரூ.1,59,900 ஆக விலை குறைக்கப்படுகிறது. இதற்கிடையில், ரூ.2,49,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட எம்4 ப்ரோ சிப் கொண்ட 16-இன்ச் மேக்புக் ப்ரோவை, கேஷ்பேக் பயன்படுத்தப்பட்ட பிறகு இப்போது ரூ.2,39,900 க்கு வாங்கலாம்.
இருப்பினும் அதிக ஆபரை தேடுபவர்கள் விஜய் சேல்ஸ் வழியாக மேக்புக் ஏர் எம்4 மாடல் மீதான அதிக தள்ளுபடியை பெறலாம். கேஷ்பேக்கிற்கான காத்திருப்பு காலம் இல்லாமல் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய பேஸிக் மாறுபாடு ஏற்கனவே ரூ.89,990 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு மேல், ICICI மற்றும் Axis வங்கி கார்டு களுக்கு கூடுதலாக ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இறுதி விலை சுமார் ரூ.84,990 ஆக குறைகிறது.
ஆப்பிள் ஐபோன்கள் மீதான ஆபர்கள்: ஆப்பிள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஐபோன் 17 சீரிஸ் மாடல்களுக்கு ரூ.5,000 உடனடி கேஷ்பேக்கை வழங்குகிறது. ரூ.82,900 எம்ஆர்பி கொண்ட ஐபோன் 17 மாடலை இப்போது ரூ.77,900க்கு வாங்கலாம். ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகியவற்றுக்கு ரூ.4,000 கேஷ்பேக்கையும் வழங்குகிறது.
ஆப்பிள் டேப்லெட்கள் மீதான ஆபர்கள்: 11-இன்ச் மற்றும் 13-இன்ச் அளவுகளில் வரும் லேட்டஸ்ட் ஐபேட் ஏர் மாடல்கள் ரூ.4,000 கேஷ்பேக் சலுகைகளுடன் கிடைக்கின்றன. இதற்கிடையில், ஸ்டாண்டர்ட் ஐபேட் மற்றும் ஐபேட் மினி ரூ.3,000 வரை தள்ளுபடியுடன் விற்கப்படுகின்றன.
மற்ற ஆபர்கள்: ஐபோன்கள் மற்றும் மேக்குகளுக்கு அப்பால், ஆப்பிள் அதன் வாட்ச் மற்றும் ஆடியோ தயாரிப்புகளுக்கும் காதலர் தின சலுகைகளை நீட்டித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 ஆனது ரூ.4,000 வங்கி தள்ளுபடியுடன் கிடைக்கிறது, அதே நேரத்தில் ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 ஆனது ரூ.2,000 சலுகையுடன் வருகிறது. ஏர்போட்ஸ் ப்ரோ (3வது ஜெனரேஷன்) மற்றும் ஏர்போட்ஸ் 4 ஆகிய இரண்டும் ரூ.1,000 உடனடி கேஷ்பேக்குடன் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐபோன் 17இ அறிமுகம்: ஆப்பிள் நிறுவனமானது நாம் எதிர்பார்ப்பதை விட மிக விரைவில், அதன் 2026 பட்ஜெட்-விலை ஐபோன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது ஐபோன் 17இ (iPhone 17e) மாடல் ஆகும். ஆப்பிளின் ஐபோன் 16இ (iPhone 16e) ஆனது கிட்டத்தட்ட ஒரு வருடம் பழமையான மாடலாகி விட்டது
ஐபோன் 17இ எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? இது அடுத்த மாத தொடக்கத்தில் (பிப்ரவரி 2026) அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனமானது அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஐபோன் 17இ மாடலின் சில முக்கிய அம்சங்கள் லீக் ஆகி அதன் அறிமுகம் - மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்த்துகின்றன,


Click it and Unblock the Notifications








