தல சுத்துது.. இறங்கி வர மனசே இல்ல போல! iPhone 15 அல்ட்ரா விலையை பாருங்க உங்களுக்கே புரியும்!

|

என்னதான் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்தினால் ஐபோன்கள் மீதான மோகம் என்பது அனைவருக்கும் இருக்கத் தான் செய்யும். நல்ல வேலைக்கு சென்று நல்லா சம்பாதித்து ஒரு ஐபோன் வாங்க வேண்டும் என பலரும் யோசிப்பது உண்டு. காரணம் அதன் விலை அப்படி.

யானையும் ஐபோனும்

யானையும் ஐபோனும்

ஆப்பிள் ஐபோனை வாங்குவது யானை வாங்குவதற்கு சமம் என்றே கூறலாம். நினைத்தால் சற்று சிரமப்பட்டு பணத்தை சேமித்து ஆசைக்காக யானையை வாங்கிவிடலாம் ஆனால் அதை பராமரிப்பது மற்றும் வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதேபோல் தான் ஐபோனும். ஐபோனை எப்படியாவது பணம் சேமித்தோ அல்லது மாத இஎம்ஐ மூலமாகவோ வாங்கிவிடலாம் ஆனால் அதை பராமரிப்பதும் பாதுகாப்பதும் அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதை நினைவில் கொள்க.

ஐபோன் 15 குறித்த முக்கிய தகவல்

ஐபோன் 15 குறித்த முக்கிய தகவல்

ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய ஐபோன் மாடல் அறிமுகமாவது வழக்கம். புதிய ஐபோன் என்னவோ செப்டம்பர் டூ நவம்பர் மாதத்திற்குள் தான் அறிமுகமாகும். ஆனால் இதுகுறித்த செய்தியும் தகவலும் வருடம் முழுவதும் வெளியாகும். அதன்படி அடுத்த வருடம் வெளியாக இருக்கும் ஐபோன் 15 குறித்த முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிக விலை என்பது இயல்பு தான்

அதிக விலை என்பது இயல்பு தான்

வருடந்தோறும் வெளியாகும் ஐபோன்களின் விலையானது அதன் முந்தைய மாடல் போன்களை விட அதிகமாக இருப்பது வழக்கமான விஷயம் தான். அதன்படி சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸ் வெளியானது, இதைவிட ஐபோன் 15 அதிகமாக இருக்கும் என்பது அறிந்ததே. இந்த நிலையில் இதன் விலை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐபோன் 15 அல்ட்ரா

ஐபோன் 15 அல்ட்ரா

ஐபோன் 15 அல்ட்ராவின் இந்திய விலையானது ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. அதற்கு முன்னதாகவே அடுத்த ஜென் ஐபோன் குறித்த தகவல் வெளியாகத் தொடங்கியது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. ஐபோன் நிறுவனம் ஐபோன் 15 இல் அல்ட்ரா மாறுபாட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ஐபோன் 15 அல்ட்ரா விலை

ஐபோன் 15 அல்ட்ரா விலை

ஐபோன் 15 அல்ட்ராவை விட ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் உற்பத்திக்கு தான் செலவு அதிகமாக இருப்பதாக தொழில்துறையின் உள் நிறுவனமான LeaksApplePro ட்வீட் செய்திருந்தது. எனவே இரண்டுக்குமான விலையில் அவ்வளவு மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் ஐபோன் 15 அல்ட்ராவின் விலை $1,099 அதாவது இந்திய விலை மதிப்புப்படி ரூ.1.5 லட்சத்திற்கும் மேலாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1.39 லட்சம் என தொடங்குகிறது. இதன் 1டிபி மாறுபாட்டின் விலை ரூ.1.89 லட்சமாக இருக்கிறது.

டைட்டானியம் கட்டமைப்பு

டைட்டானியம் கட்டமைப்பு

ஐபோன் 15 ஆனது அதிக ஆயுளுக்கென டைட்டானியம் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த போன் டைனமிக் ஐலேண்ட் நாட்ச் உடன் கூடிய 6.7 இன்ச் டிஸ்ப்ளே அளவை கொண்டிருக்கலாம். ஆப்டிகல் ஜூம் திறன்களை அதிகரிப்பதற்கு என்றே ஐபோன் 15 டெலிஃபோட்டோ கேமராவிற்கு பெரிஸ்கோப்-ஸ்டைல் லென்ஸை ஆப்பிள் சேர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிக செயல்திறன் மற்றும் கிராஃபிக்ஸ் கோர்கள்

அதிக செயல்திறன் மற்றும் கிராஃபிக்ஸ் கோர்கள்

ஆப்பிள் ஐபோன் 15 அல்ட்ராவில் அடுத்த தலைமுறை பயோனிக் சிப்செட் கொண்டிருக்கக்கூடும் எனவும் இது அதிக செயல்திறன் மற்றும் கிராஃபிக்ஸ் கோர்களை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இதுவரை வெளியான ஐபோன்களை விட அதீத பேட்டரி ஆயுளை இந்த மாடல் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஏ16 பயோனிக் சிப்செட்

ஏ16 பயோனிக் சிப்செட்

ஆப்பிள் அதன் ஐபோன் 14 சீரிஸை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதன் அடிப்படை மாடல்கள் ஏ15 பயோனிக் சிப்செட் மூலமாகவும் ப்ரீமியம் மாடலான ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஏ16 பயோனிக் சிப்செட் மூலமாகவும் இயக்கப்படுகிறது. அதே நுட்பத்தை ஆப்பிள் இதிலும் பின்பற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது. அதாவது ஐபோன் 15 இன் அடிப்படை மாறுபாடு ஏ16 பயோனிக் சிப் மூலமாகவும் ஐபோன் 15 அல்ட்ரா மாடல் அடுத்த தலைமுறை சிப் மூலமாகவும் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Apple Upcoming iPhone Details: iPhone 15 Ultra Might be Launching with Premium Price and Specs!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X