வெறும் ரூ.99-க்கு ஆப்பிள் டிவி+ சந்தா: கடுப்பில் மற்ற நிறுவனங்கள்.!

|

நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கிவருகிறது. குறிப்பாக இந்நிறுவனங்கள் மலிவு விலையில் பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் டிவி பிளஸ்-ன் இந்திய விலை நிர்ணயம் மற்றும் அதிகாரப்பூர்வ வெளீயிட்டு தேதியை அறிவித்துள்ளது.

நவம்பர் 1-ம் தேதி

நவம்பர் 1-ம் தேதி

ஆப்பிள் ஐபோன் தயாரிப்பாளரின் இந்த ஸ்ட்ரீமிங் சேவை ஒரு வார இலவச சோதனைக்குப் பிறகு மாதத்திற்குரூ.99 என்கிற விரை நிர்ணயத்தின் கீழ் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், பின்பு நவம்பர் 1-ம் தேதிஅன்று இது செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருட சந்தா இலவம்

ஒரு வருட சந்தா இலவம்

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் ஐபோன், ஐபாட், ஆப்பிள் டிவி,மேக், ஐபாட் டச் உள்ளிட்ட புதிய சாதனங்களை வாங்குபவர்களுக்கு ஒரு வருடம் இலவச ஆப்பிள் டிவி பிளஸ் சந்தா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவாய் சோற்றுக்கே கஷ்டப்பட்ட சிவன் குடும்பம்- இஸ்ரோ வரை எப்படி சாதித்தார்?ஒருவாய் சோற்றுக்கே கஷ்டப்பட்ட சிவன் குடும்பம்- இஸ்ரோ வரை எப்படி சாதித்தார்?

ஆப்பிள் டிவி பிளஸ் சிறப்பம்சம்

ஆப்பிள் டிவி பிளஸ் சிறப்பம்சம்

குறிப்பாக ஆப்பிள் டிவி பிளஸ் சிறப்பம்சம் என்னவென்றால் எவ்வித கூடுதல் கட்டணம் இன்றி ‘Family Sharing' உடன் இணக்கமாகதாக இருக்கும். உதரணமாக சொல்லவேண்டும் என்றால் மொத்தம் ஆறு நபர்கள்அனைத்து ஒரிஜினல் சீரிஸ் தொடர்களையும் படங்களையும் பார்க்க வழிவகை செய்கிறது.

ரூ.43,040-கோடி முதலீடு

ரூ.43,040-கோடி முதலீடு

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆனது அதன் சேவையை வழங்க ஒரு ஆண்டுக்கு 15பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது, அதேபோல் அமேசான் பிரைம் வீடியோ அதன் சேவையை வழங்க ஒரு ஆண்டுக்கு 7பில்லியன் டாலர் வரை முதலீடு செய்கிறது. இப்போது ஆப்பிள் நிறுவனம் கொண்டு வரும் ஆப்பிள் டிவி பிளஸ் உள்ளடக்கத்தின் மீது 6பில்லியன் டாலர் அதாவது ரூ.43,040-கோடி முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த சேவை வெற்று பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வான்டட்' குற்றவாளிகளின் தகவல் மதுரை போலீஸ் தரவுத்தளத்திலிருந்து கசிந்துள்ளதா?'வான்டட்' குற்றவாளிகளின் தகவல் மதுரை போலீஸ் தரவுத்தளத்திலிருந்து கசிந்துள்ளதா?

3 புதிய ஐபோன் 11

3 புதிய ஐபோன் 11

மேலும் நேற்று கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரை அரங்கில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவன நிகழ்ச்சியில் 3 புதிய ஐபோன் 11 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக ஆப்பிள் ஆர்க்காடு கேமிங்,ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மற்றும் புதிய 7ம் ஜெனெரேஷன் ஐபாட் சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 செப்டம்பர் 27

செப்டம்பர் 27

ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நேற்று, ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என்ற மூன்று அட்டகாசமான ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட இந்த மூன்று புதிய ஐபோன் 11 சீரிஸ் போன்கள் வரும் செப்டம்பர் 27, 2019 முதல் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple TV Plus Launched at Rs 99 per month in india: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X