அடுத்த தலைமுறை ஆதரவுடன் Apple TV 4K அறிமுகம்: ரூ.14,900 மட்டுமே.. தியேட்டர் தர அனுபவம் உறுதி

|

ஆப்பிள் நிறுவனம் ஐபேட்கள் உடன் அடுத்த தலைமுறை ஆதரவு கொண்ட Apple TV 4Kவை அறிமுகம் செய்துள்ளது. அளவில்லாத பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் நிரம்பி இருக்கிறது. இந்த ஆப்பிள் டிவி 4கே ஆனது யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. Siri Remote ஆதரவுடன் புதிய Apple TV 4K ஆனது வெளியாகி இருக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.14,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் டிவி 4கே அறிமுகம்

ஆப்பிள் டிவி 4கே அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் புதிய வடிவமைப்பு ஆதரவு கொண்ட iPad 2022, iPad ப்ரோ மாடலை எம்2 சிப்செட் உடன் அறிமுகம் செய்தது. நிறுவனம் ஐபேட்களுடன் அடுத்த தலைமுறை ஆதரவு கொண்ட ஆப்பிள் டிவி 4கே சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இது வேகமான செயல்திறன் மற்றும் முடிவில்லா பொழுதுபோக்கு விருப்பங்களை வழங்குகிறது.

ஏ15 பயோனிக் சிப்செட் உடன் புதிய ஆப்பிள் டிவி 4கே

ஏ15 பயோனிக் சிப்செட் உடன் புதிய ஆப்பிள் டிவி 4கே

Apple TV 4K என்பது டிடிஎச் பாக்ஸ் போன்ற சாதனம் ஆகும். இதில் கேபிள் டிவிகள் ஆதரவு கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இருப்பினும் சன் நெக்ஸ்ட், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு அணுகலை பெறலாம். கேம்களும் இதில் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 சீரிஸை இயக்கும் அதே ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் தான் Apple TV 4K சாதனமும் இயக்கப்படுகிறது. ஆப்பிள் டிவி டால்பி விஷனுடன் கூடிய HDR 10+ ஆதரவைக் கொண்டிருக்கிறது.

64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

புதிய Apple TV 4K ஆனது இரண்டு கட்டமைப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Apple TV 4K (Wi-Fi) ஆனது 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. Apple TV 4K இல் Wi-Fi + Ethernet, வேகமான நெட்வொர்க்கிங் மற்றும் ஸ்ட்ரீமிங்கிற்கான கிகாபிட் ஈதர்நெட்டிற்கான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஹோம் அக்சஸெரீஸ்கள் உடன் இந்த சாதனத்தை இணைக்க முடியும்.

4கே தர வீடியோ ஆதரவு

4கே தர வீடியோ ஆதரவு

ஆப்பிள் டிவி 4கே ஆனது பயனர்களுக்கு பிடித்தமான பல பொழுதுபோக்கு அம்சத்தை வீட்டில் இருந்தபடியே அணுகலாம். மிகப் பெரிய திரையில் 4கே தர வீடியோவை இதன்மூலம் பெற முடியும்.

பெரிய அளவு டிஸ்ப்ளே உள்ள டிவிகளை வாங்கிவிட்டு அதற்கு ஏற்ப செட்டாப் பாக்ஸ் கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்களுக்கு இந்த சாதனம் வரப்பிரசாதமாக இருக்கும்.

4கே தர வீடியோ ஆதரவுடன் டால்பி சவுண்ட் வெளியீடும் கிடைக்கும். உங்களிடம் யமஹா போன்ற சிறந்த ஆம்ப்ளிஃபயர்கள் இருந்தால் இந்த சாதனத்தின் மூலம் வேற லெவல் சவுண்ட் அவுட்புட்டை பெறலாம்.

அதிக சக்தி வாயந்த அம்சங்கள்

அதிக சக்தி வாயந்த அம்சங்கள்

முந்தைய மாடல் ஆப்பிள் டிவி 4கே சாதனத்தை விட பல மடங்கு அதிக சக்தி வாயந்த அம்சங்கள் உடன் இது வெளியாகி இருக்கிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பக்கூடிய பல பொழுதுபோக்கு அம்சங்களை ஆப்பிள் டிவி 4கே மூலம் அனுபவிக்கலாம்.

Apple TV 4K: விலை

Apple TV 4K: விலை

இதில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் இந்த சாதனமானது Siri Remote உடன் கிடைக்கிறது. Siri Remote உடன் புதிய Apple TV 4K ஆனது ரூ.14900 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும். apple.com/in/store இல் இருந்தும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்தும் ஆப்பிள் டிவி 4கேவை வாங்கலாம். ஆப்பிள் அங்கீகாரம் பெற்ற குறிப்பிட்ட விற்பனையாளர்களிடம் இருந்தும் இதை வாங்கலாம். Apple TV 4K இப்போது அமெரிக்கா உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது.

சிரி ரிமோட் ஆதரவு

சிரி ரிமோட் ஆதரவு

இந்த சிரி ரிமோட் ஆனது முந்தைய தலைமுறையின் அதே வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது. யூஎஸ்பி டைப்-சி போர்ட் மூலம் இதை சார்ஜ் செய்யலாம். இந்த Siri ரிமோட் ஆனது அனைத்து தலைமுறை Apple TV 4K மற்றும் Apple TV HD ஆகியவற்றுக்கும் இணக்கமானது. கேம்கள் போன்ற பயன்பாடுகளுக்கு இந்த ரிமோட் சிறந்த அனுபவத்தை அளிக்கும்.

Dolby Digital 7.1 சவுண்ட் ஆதரவு

Dolby Digital 7.1 சவுண்ட் ஆதரவு

முந்தைய தலைமுறை ஆப்பிள் டிவி 4கேவை விட இது 50 சதவீதம் அதிக செயல்திறன் வேகத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்னாப்பியர் யுஐ அனிமேஷன் ஆதரவு இதில் இருக்கிறது.

HDR10+ ஆதரவுடன் சிறந்த காட்சி தரத்தை வழங்குகிறது. துடிப்பான வண்ணங்கள், துல்லியமான காட்சிகள் என டிவியின் அனுபவம் மேம்பட்டு இருக்கும்.

Dolby Atmos, Dolby Digital 7.1 மற்றும் Dolby Digital 5.1 சரவுண்ட் சவுண்டுடன் கூடிய ஹோம் தியேட்டர் அனுபவத்தை இதில் பெறலாம்.

இந்த சாதனம் வாங்கும் பட்சத்தில் இதை டிவியுடன் இணைக்க எச்டிஎம்ஐ கேபிள் வாங்க வேண்டும். இந்த கேபிள் தரம் வாயந்ததாக இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அப்படி இருக்கும்பட்சத்தில் மட்டும் தான் இதன் துல்லியத் தன்மையை பெற முடியும்.

Best Mobiles in India

English summary
Apple TV 4K with Rich Visual Quality and Dolby Digital 7.1 Sound Launched at Rs.14,900

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X