லிக்விட் மெட்டல் டெக்னாலஜி உடன் Apple-ன் முதல் Foldable iPhone.. 20% அதிக விலை.. எப்போது அறிமுகம்?
வெயிட் பண்ணி வந்தாலும் வெயிட்-ஆ வருவோம்ல என்பதை மீண்டும் நிரூபிக்கும்படி ஆப்பிள் (Apple) நிறுவனம் ஒரு அட்டகாசமான வேலையை பார்த்துள்ளது. கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள பெரும்பாலான பெரிய பிராண்டுகள் தத்தம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டன. இருந்தாலும் கூட ஆப்பிள் நிறுவனம் அதை இன்னும் செய்யவில்லை.
ஏனென்றால் ஆப்பிள் நிறுவனம் அவசர அவசரமாக எதையும் செய்ய விரும்பவில்லை என்பது போல் தெரிகிறது. ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய கீல் வடிவமைப்புடன் போல்டபிள் ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைய தயாராகி வருவதாக கூறப்படுகிறது. புகழ்பெற்ற ஆய்வாளர் மிங்-சி குவோவின் கூற்றுப்படி, ஆப்பிள் அதன் மடிக்கக்கூடிய ஐபோனின் கீல் பொறிமுறைக்கு திரவ உலோக தொழில்நுட்பத்தை (Liquid metal technology) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

சீன உற்பத்தியாளரான டோங்குவான் இயோன்டெக் நிறுவனத்திடமிருந்து ஒரு யூனிட்டுக்கு $9 முதல் $14 வரை என்கிற விலைக்கு பெறப்பட்ட லிக்விட் மெட்டல் கீல் ஆனது வழக்கமான கீல் வடிவமைப்புகளை விட 2 முக்கிய நன்மைகளை உறுதியளிக்கிறது. ஒன்று - நீண்ட தயாரிப்பு ஆயுட்காலத்திற்கான (Longer product lifespan) மேம்பட்ட டூயுரபலிட்டி (Durability). இரண்டு - விசிபிள் கிரீஸ்-ஐ (visible crease) குறைக்க மேம்படுத்தப்பட்ட ஸ்க்ரீன் பிளாட்னஸ் (Improved screen flatness).
உண்மையில், ஃபோல்ட் என்பது இன்றுவரையிலாக மடிக்கக்கூடிய டிஸ்பிளேக்களை கொண்ட டிவைஸ்களில் உள்ள மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்றாகும். இது விலையுயர்ந்த மடிக்கக்கூடிய டிஸ்பிளே பேனலின் ஆயுட்காலத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் டிஸ்பிளேவின் அழகியலையும் குறைக்கிறது. ஆனால் 2026 இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஐபோன் ஆனது சாம்சங்கின் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8 உடன் நேரடியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆப்பிளின் போல்டபிள் ஐபோன் ஆனது சாம்சங்கின் போல்டபிள் மாடல்களை விட குறைந்தது 20% அதிக விலை நிர்ணயத்தை பெறவும் வாய்ப்புள்ளது என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாம்சங் VS ஆப்பிள் என்கிற இந்த உயர்நிலை போட்டியில் லிக்விட் மெட்டல் கீல் ஒரு முக்கிய வேறுபாடாக இருக்கும். இருப்பினும் ஆப்பிள் நிறுவனத்திற்கு எல்லாமே பாசிட்டிவ் ஆக இருக்கப்போவது இல்லை. இது குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொள்ளக்கூடும். முதலில் ஆப்பிள் அதன் முதல் தலைமுறை மடிக்கக்கூடிய ஐபோனின் நம்பகத்தன்மையை வாடிக்கையாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நிறுவ வேண்டும்.
பின்னர் ஆப்பிள் நிறுவனமானது போல்டபிள் டிவைஸ் விஷயத்தில், சில இடங்களில் ஆண்ட்ராய்டு OEM-களை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படும். கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்டு போல்டபிள் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் டூயுரபலிட்டி (Durability) கவலைகளை நிவர்த்தி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் இன்னும் போல்ட் சிக்கலை தீர்க்க முடியவில்லை. ஆப்பிள் நிறுவனம் புதிய கீல் மூலம் இதை சரிசெய்யுமா? காத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் போல்டபிள் ஐபோன் மாடலையே இன்னும் அறிமுகம் செய்யாத நிலையில், சீன நிறுவனமான ஒப்போ ஃபோல்டிங் டெக்னாலஜியை டேப்லெட் பிரிவுக்கு கொண்டு செல்லும் வேலையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒப்போ நிறுவனம் போல்டபிள் டேப்லெட்டை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
டபுள்யூஐபிஓ (WIPO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பில் (World Intellectual Property Organisation) ஒப்போ நிறுவனம் அதன் ஃபோல்டபிள் டேப்லெட்டிற்கான (Foldable Tablet) காப்புரிமை விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்போவின் இந்த மடிக்கக்கூடிய டேப்லெட்டை பற்றி தகவல் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.
ஆனால் கடந்த காலங்களில் வெளியான சில அறிக்கைகள் - ஆப்பிள் நிறுவனம் தான் ஒரு மடிக்கக்கூடிய ஐபேட் மாடலை உருவாக்குவதாக கூறின. முன்னரே குறிப்பிட்டபடி ஆப்பிள் நிறுவனம் அதன் ஃபோல்டபிள் ஐபோனையே இன்னும் தயார் செய்யவில்லை. ஆக ஃபோல்டபிள் டேப்லெட் விஷயத்தில் ஒப்போ முந்திக்கொள்ளும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஒப்போவின் ஃபோல்டபிள் டேப்லெட் ஆனது நடுவில் ஒரு கீலை கொண்டுள்ளது, அங்கு தான் அது இரண்டு பகுதிகளாக மடிகிறது. இது சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6), கூகுள் பிக்சல் 9 ப்ரோ போல்ட் (Google Pixel 9 Pro Fold), ஒப்போ பைண்ட் என்5 (OPPO Find N5) போன்ற புக் ஸ்டைல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களில் பார்த்ததை போலவே உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் முக்கியமான வருடாந்திர நிகழ்வான - டபுள்யூடபுள்யூடிசி 2025 (WWDC 2025) அதாவது வேர்ல்ட்வைட் டெவெலப்பர்ஸ் கான்ஃபிரென்ஸ் (Worldwide Developers Conference 2025) நிகழ்வானது ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 13 வரை நடைபெறும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதில் பெரும்பாலும் எந்த ஹார்வேர் அறிமுகங்களும் இருக்காது. ஆனால் 2025 இல் ஆப்பிள் நிறுவனம் என்னென்ன தயாரிப்புகளை அறிமுகம் செய்யலாம்? 2025 ஆம் ஆண்டு முடிவதற்குள் ஆப்பிள் நிறுவனம் 15 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் மாடல்களும் அடங்கும்: ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max)
மேலும் ஆப்பிள் நிறுவனம் எம்5 சிப் உடனான மேக்புக் மற்றும் ஐபேட் மாடல்களையும் அறிமுகம் செய்யலாம்: எம்5 சிப் உடனான மேக்புக் ப்ரோ (Apple M5 MacBook Pro) மற்றும் எம்5 சிப் உடனான ஐபேட் ப்ரோ (Apple M5 iPad Pro). கூடவே புதிய ஏர்பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களையும் அறிவிக்கலாம்: ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 (Apple AirPods Pro 3), ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 (Apple Watch Ultra 3), ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 11 (Apple Watch Series 11) மற்றும் ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 (Apple Watch SE 3).
ஆப்பிளின் புதிய ஹோம் ப்ராடெக்ட்களும் (Apple New Home Products) 2025 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம். ஆப்பிள் ஹோம்பேட் (Apple HomePad), புதிய ஆப்பிள் டிவி 4கே (New Apple TV 4K) மற்றும் ஆப்பிள் ஹோம்பேட் மினி 2 (Apple HomePod mini 2). கடைசியாக ஆப்பிள் ஏர்டேக் 2 (Apple AirTag 2), ஆப்பிள் ஸ்டூடியோ டிஸ்பிளே 2 (Studio Display 2), ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) மற்றும் ப்ரோ டிஸ்பிளே எக்ஸ்டிஆர் (Pro Display XDR) போன்ற தயாரிப்புகளும் அறிமுகம் செய்யப்படலாம். Photo Courtesy: YouTuber ConceptsiPhone / www.cnet.com


Click it and Unblock the Notifications








