Home
News

என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீயேப்பா.. விரட்டி விட்ட Google.. OpenAI கிட்ட தஞ்சம் புகுந்த Apple நிறுவனம்!

இந்த ஆண்டின் பிற்பகுதியில்.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 2024 செப்டம்பர் மாதத்தில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 16 சீரீஸ் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. வழக்கம் போல இந்த சீரிஸின் கீழும் 4 புதிய ஐபோன் மாடல்கள் வெளியாகும்!

அதாவது "வழக்கம் போல" இந்தாண்டும் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகமாக உள்ளன. ஆனால் ஐபோன் 16 சீரிஸில் வழக்கத்திற்கு மாறாக ஒரு விஷயமும் நடக்கப்போகிறது.

விரட்டி விட்ட Google.. OpenAI கிட்ட தஞ்சம் புகுந்த Apple நிறுவனம்!

அதென்ன விஷயம்? ஆப்பிள் நிறுவனமானது அதன் ஐபோன் 16 சீரிஸில் ஏஐ அம்சங்களை (AI Features) சேர்க்கவுள்ளது. ரூ.10,000 க்கு கிடைக்கும் பட்ஜெட்-விலை போனில் கூட சில அட்டகாசமான ஏஐ அம்சங்கள் கிடைக்கும் நிலைப்பாட்டில், உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோன்களில் ஏஐ அம்சங்களை கொண்டுவர நினைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஓப்பன்ஏஐ உடன் கூட்டணி! இதற்காக ஆப்பிள் நிறுவனமானது ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்ப நிறுவனமான ஓப்பன்ஏஐ உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ப்ளூம்பெர்க் நியூஸின் கூற்றுப்படி, இவ்விரு நிறுவனங்களும் ஒரு சாத்தியமான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை பற்றி விவாதிக்க தொடங்கியுள்ளன. இதன்மூலம் ஆப்பிளின் அடுத்த ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 18-ல் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சில ஏஐ அம்சங்கள் ஒருங்கிணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரட்டி விட்ட Google.. OpenAI கிட்ட தஞ்சம் புகுந்த Apple நிறுவனம்!

கூகுள் உடனான கூட்டணி என்னஆகிற்று? கடந்த மாதம், ஆப்பிள் நிறுவனமானது தனது புதிய ஐபோன்களில் ஏஐ அம்சங்களை கொண்டு வருவதற்காக.. கூகுள் நிறுவனத்தின் ஜெமினி சாட்பாட்-ஐ பயன்படுத்துவதற்கான உரிமம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் தற்போது அதே பேச்சுவார்த்தை ஓப்பன்ஏஐ-க்கு மாறியுள்ளதால்.. கூகுள் நிறுவனமானது ஆப்பிளுடன் ஒற்றுபோகவில்லை என்பது போல் தெரிகிறது.

செப்டம்பர் மாதத்திற்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலைப்பாட்டில் கூட.. எந்த நிறுவனத்துடன் கூட்டு சேர வேண்டும் என்கிற முடிவை.. சாட்ஜிபிடி-ஆ அல்லது கூகுள் ஜெமினி-ஆ? எதை ஐபோன் 16 சீரீஸில் கொண்டுவர வேண்டும் என்பது குறித்து ஆப்பிள் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்பது போல் தெரிகிறது.

விரட்டி விட்ட Google.. OpenAI கிட்ட தஞ்சம் புகுந்த Apple நிறுவனம்!

மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் போன்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, ஜெனரேட்டிவ் ஏஐ விஷயத்தில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே மிகவும் மெதுவாக செயல்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக், கடந்த பிப்ரவரியில், தனது நிறுவனம் ஏஐ-ல் "குறிப்பிடத்தக்க வகையில்" முதலீடு செய்வதாகவும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான திட்டங்களை வெளிப்படுத்தும் என்றும் கூறி இருந்தார்.

சமீபத்தில் கூகுள் நிறுவனமானது, ஜெமினி ஏஐ-யின் வெப் வெர்ஷனிற்கு (Gemini AI Web Version).. அதாவது இணையத்தளம் வழியாக ஜெமினி ஏஐ அணுகும் பயனர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இருந்த ஒரு முக்கிய அம்சத்தை, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான கூகுள் ஜெமினி ஆப்பிற்கு (Google Gemin App) வர உள்ளதாகவும் அறிவித்திருந்தது.

அது பயனர்களின் கேள்விக்கு நிகழ்நேர பதில்களை வழங்கும் ரியல்-டைம் ரெஸ்பான்சஸ் (Real-time responses) அம்சமாகும். இதன் மூலம் ஜெமினி ஆப் ஆனது ஒரு உள்ளுணர்வு மிக்க ஏஐ சாட்பாட் ஆக மேம்படுதத்பப்படும். மேலும் பயனர்களால் உடனடி பதில்களை பார்க்க முடியும். அதாவது கேள்விக்கான முழு பதிலும் உருவாக்கப்பட்டு, அது லோட் ஆகும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஜெமினி ஆப்பிற்கு வரும் இந்த ரியல்-டைம் ரெஸ்பான்சஸ் ஆனது கேட்கப்படும் கேள்வியின் வகையை பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். மேலும் இந்த அம்சமானது ஜெமினி ஆப்பில் உள்ள செட்டிங்ஸ் மெனுவிலிருந்து (Gemini App Settings Menu) இயக்கப்படும்படி இருக்கும்.

Best Mobiles in India

English summary
Apple To team up With OpenAI For New AI Features in iPhone 16 Series then What about Google Gemini
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X