சைலன்ட் ஆக Apple பார்க்கும் வேலை.. அவசரப்பட்டு iPhone 16e வாங்கிடாதீங்க.. iPhone 17e வருது.. எப்போது?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஐபோன் ஆக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16இ (iPhone 16e) மாடல் ஆனது உண்மையில் கஸ்டமர்களால் ஏற்றுக்கொள்ளபட்டதா என்பது குறித்த எந்த துல்லியமான விவரங்களும் (அதாவது ஐபோன் 16இ விற்பனை தொடர்பான சரியான புள்ளி விவரங்கள்) வெளியாகவில்லை
பெரும்பாலான ரிவ்யூக்கள் இது "ஈர்க்ககும்படி இல்லை" என்றே குறிப்பிட்டன. ஆனால் சில சமீபத்திய அறிக்கைகள், ஐபோன் 16இ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இது ஐபோன் எஸ்இ 2022 (iPhone SE 2022) மாடலை விட அதிகமாக விற்பனையாகி உள்ளதாக கூறுகின்றன. இதற்கிடையில் தான் "ஐபோன் 16இ வெற்றி அடைந்து விட்டது தான்" என்பதை குறிக்கும் வகையிலான ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அது என்னவென்றால் - ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16இ மாடலின் தொடர்ச்சியான ஐபோன் 17இ (iPhone 17e) மாடலை ஏற்கனவே உருவாக்கி வருவதாகவும், இது கூடிய விரைவில் ட்ரையல் ப்ரொடெக்ஷனுக்குள் (Trial Production) நுழையும் என்றும், இது 2026 இல் அறிமுகமாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
ஃபிக்ஸட் ஃபோகஸ் டிஜிட்டல் (Fixed Focus Digital) என்கிற சீன டிப்ஸ்டரின் பதிவின்படி, ஆப்பிள் அதன் புதிய இ சீரிஸ் மாடலுக்கான வருடாந்திர வெளியீட்டு அட்டவணையை கொண்டிருக்கும்.. அதாவது இனி ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் அதன் இ சீரீஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் என்று அர்த்தம். மேலும் ஐபோன் 17இ மாடலுக்கான சோதனை தயாரிப்பு தற்போது ஆப்பிளின் அஜெண்டாவில் இருப்பதாக இந்த பதிவு கூறுகிறது.
ஐபோன் 16இ ப்ரொடெக்ஷன் லைன்ஸ்களின் மறுவடிவமைப்பு ஏற்கனவே நடந்து வருவதாகவும் இந்த டிப்ஸ்டர் கூறியுள்ளார். இதற்கிடையில், ஐபோன் 17இ அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும், இது எஸ்இ பிராண்டிங் இல்லாத ஆப்பிளின் இரண்டாவது என்ட்ரி லெவல் ஐபோன் மாடலாக இருக்கும் என்றும் அந்த பதிவு வெளிப்படுத்துகிறது. நினைவூட்டும் வண்ணம் ஆப்பிளின் ஐபோன் 16இ தற்போது இந்தியாவில் ரூ.59,900 க்கு வாங்க கிடைக்கிறது.
ஐபோன் 16இ விரிவான அம்சங்கள்: இது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஐபோன் எஸ்இ சீரீஸில் காணப்படும் பாரம்பரிய ம்யூட் சுவிட்சுக்கு பதிலாக ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது. கேமராவை ஸ்டார்ட் செய்வது அல்லது டிஎன்டி மோட்-ஐ ஆன் செய்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளை விரைவாக அணுக, இந்த ஆக்ஷன் பட்டன் உதவும்.
கூடுதலாக, ஆப்பிள் ஐபோன் 16இ ஆனது யூஎஸ்பி-சி போர்ட்டுடன் வருகிறது. இது விரைவான டேட்டா பரிமாற்றம் மற்றும் சார்ஜிங்கிற்காக லைட்னிங் போர்ட்டை மாற்றுகிறது. இது ஆsப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் ஐபோன் 16இ மாடலில் 4-கோர் ஜிபியு மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவை மெஷின் லேர்னிங் பணிகளை மிகவும் திறமையாக கையாளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை இது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. இயல்பாக ஐபோன் 16இ ஆனது 24எம்பி புகைப்படங்களை தான் எடுக்கும், ஆனால் அதிக தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளுக்கு 48எம்பி மோட்-க்கு மாறலாம்.
பேட்டரியை பொறுத்தவரை இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் சேட்டிலைட் வழியாக மெசேஜ்கள் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ்-களை அனுப்ப உதவும் செயற்கைக்கோள் இணைப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இதன்மூலம் குறைந்த செல்லுலார் கவரேஜ் உள்ள பகுதிகளில் கூட தகவல்தொடர்புக்கான விருப்பங்கள் கிடைக்கும். சுவாரஸ்யமாக இதில் க்ராஷ் டிடெக்ஷனும் உள்ளது.


Click it and Unblock the Notifications








