Home
News

உலகிற்கே iPhone 16 தரப்போவது இந்தியா தானா? 'மேட் இன் இந்தியா' லோகோவுடன் iPhone-கள்.. இனி உலகம் முழுக்க சேல்ஸ்.

ஆப்பிள் (Apple) நிறுவனம் இன்று அதன் புதிய ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) ஸ்மார்ட்போன் மாடல்களை, அமெரிக்காவில் உள்ள அதன் சொந்த ஆப்பிள் பார்க்கில் (Apple Park) அமைந்துள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் (Steve Jobs Theater) இருந்து அறிமுகம் செய்யவுள்ளது. என்னதான் அமெரிக்காவில் இருந்து ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16 மாடல்களை அறிமுகம் செய்தாலும், இந்தியாவில் இருந்து தான் ஐபோன் 16 மாடல்களை மொத்தமாக தயாரிக்கப்பட்டு, உலகம் முழுக்க விற்பனைக்காக அனுப்பப்படவுள்ளது.

உலகளவில் தனது iPhone 16 தொடரை அறிமுகப்படுத்த தயாராகி வரும் ஆப்பிள், தனது உற்பத்தி திட்டத்தில் ஒரு மாபெரும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய தகவல்கள் படி, இந்த புதிய ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, அறிமுகமான சிறிது நேரத்திலேயே உலகளவில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம், இந்த முறை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை தான் உலக ஆப்பிள் ரசிகர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தப்போகிறார்கள்.

உலகிற்கே iPhone 16 தரப்போவது இந்தியா தானா? 'மேட் இன் இந்தியா' லோகோ..

உலகிற்கே iPhone 16 தரப்போவது இந்தியா தான்.. சூப்பர் ஸ்பீட் தயாரிப்பில் ஐபோன் 16:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் உலகளவில் மிக விரைவில் அனுப்பப்படுவதும் இதுவே முதல் முறையாகும். iPhone 16 தொடர் திங்களன்று ஆப்பிளின் "இட்ஸ் குளோடைம்" (Its Glowtine) நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். இந்த சாதனங்கள் அறிமுகமான 10 முதல் 12 நாட்களுக்குள் கடைகளில் விற்பனைக்கு வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியமான உற்பத்தி கூட்டாளியான ஃபாக்ஸ்கானின் உதவியுடன் இந்தியாவில் உற்பத்தி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி, ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு பெரிய படியாகும். ஏனெனில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் இனி விற்பனை தொடங்கும் முதல் நாளிலிருந்து உலகின் பல்வேறு நகரங்களில் கிடைக்கப்போகிறது. உற்பத்திக்கான சீனாவின் மீதான சார்பு குறைக்க ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முடிவை எடுத்துள்ளது. இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை விரிவுபடுத்துவதன் மூலம், உலகின் மிக வேகமாக வளரும் ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஒன்றாக இப்போது இந்தியா மாறியுள்ளது.

iPhone 16 தொடர் சாதனங்கள் பெரிய டிஸ்பிளேகள், மேம்படுத்தப்பட்ட AI திறன்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் மிகப் பெரிய டிஸ்பிளேக்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. iPhone 16 ப்ரோ மாடல் 6.3" இன்ச் அளவுடனும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.9" இன்ச் அளவுடனும் வெளிவரும்.

ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro):

இந்த ஸ்மார்ட்போன்கள் மெல்லிய பெசல்கள் உடன் அதிக டிஸ்பிளே இடத்தை வழங்கும். கூடுதலாக, அனைத்து மாடல்களும் புதிய A18 சிப் மூலம் இயக்கப்படும். இது வேகமான செயல்திறனையும் சிறந்த ஆற்றல் திறனையும் வழங்கும். கேமரா பற்றி பேசுகையில், ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் 5x டெலிகிராஃபிக் லென்ஸ் உடன் வெளிவரலாம் என்று கூறப்பட்டுள்ளது. சாம்சங்கின் சமீபத்திய தொழில்நுட்பத்தின் காரணமாக அனைத்து மாடல்களும் ஆற்றல் திறன்மிக்க டிஸ்பிளேவை நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் உலகளவில் விரைவாக கிடைப்பது இந்தியாவின் தொழில்நுட்ப உற்பத்தித் துறைக்கு ஒரு முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது. இந்த நகர்வு இந்தியாவின் பங்கு உலகளாவிய விநியோகச் சங்கிலியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஆப்பிளின் "மேக் இன் இந்தியா" திட்டத்தில் ஒரு முக்கிய சாதனையை எடுத்துக்காட்டுகிறது.

iPhone 16 தொடர் சந்தைக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உலகம் முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் விற்பனை செய்யப்படுவது பெருமையான விஷயமாக பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple to ship made-in-India iPhone 16 globally shortly after release on September 9 2024 its glowtime launch event
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X