Home
News

ஐபோனில், யூடியூப் அப்ளிக்கேஷனை அகற்றும் ஆப்பிள்!

By Super
ஐபோனில், யூடியூப் அப்ளிக்கேஷனை அகற்றும் ஆப்பிள்!

புதிய ஐபோன் மற்றும் ஐபேட் எலக்ட்ரானிக் சாதனங்களில் யூடியூப் அப்ளிக்கேஷன் அகற்றபட்டுவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வீடியோ என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வரும் அடுத்த வார்த்தை யூடியூப் என்று சொல்லலாம். அந்த அளவு வீடியோவிற்கு பெயர் போன யூடியூப் அப்ளிக்கேஷன், ஐபோன் மற்றும் ஐபேடில் அகற்றப்படும் என்று புதிய செய்திகள் வெளியாகி உள்ளன.

புதிய ஐஓஎஸ்-6 இயங்குதளத்திற்காக, டெவலப்பர்களுக்கு டெஸ்டிங் வெர்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்டிங் வெர்ஷனில் யூடியூப் அப்ளிக்கேஷன் அகற்றப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு ஆப்பிள் நிறுவனத்திற்கும், கூகுளிற்கும் இடையே நிறைய உரசல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் ஆப்பிள் நிறுவனம் தனது எலக்ட்ரானிக் சாதனங்களில் யூடியூப் அப்ளிக்கேஷன் அகற்றப்பட்டதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

ஆனால் ஆப்பிள் நிறுவனத்திடன், தொழில் நுட்பம் சார்ந்த நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருவதாக யூடியூப் தெரிவித்திருக்கிறது. ஆப்பிள் ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில், யூடியூபின் புதிய அப்ளிக்கேஷனை உருவாக்க இருப்பதாகவும், இதன் காரணமாக தான் யூடியூபின் அப்ளிக்கேஷன் தற்சமயம் அகற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருப்பினும் இந்த யூடியூப் அப்ளிக்கேஷனை, ஆப்பிளின் சஃபாரி பிரவுசர் மூலம் பயன்படுத்த முடியும். வருகிற செப்டம்பர் மாதம் ஆப்பிளின் புதிய ஐபோன் அறிமுகமான பிறகு தெரிந்துவிடும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X