தங்க முட்டையிடும் Apple ஸ்டோர்கள்.. ஒரே மாதத்தில் ரூ.47 கோடி.. மேலும் 3 ஸ்டோர்கள் வருதாம்.. எங்கு தெரியுமா?
இந்தியாவில் அண்மையில் திறக்கப்பட்ட ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஆஃப் லைன் ஸ்டோர்களில் (Apple Offline Stores) ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட ரூ.50 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது. இதனால், ஆப்பிள் நிறுவனம் மேலும் 3 புதிய ஆஃப் லைன் ஸ்டோர்களை திறக்க முடிவு செய்யதுள்ளது. இந்த ஸ்டோர்கள் எங்கு, எப்போது திறக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இதோ.
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், ஆசிய-பசிபிக் நாடுகளில் 15 விற்பனை நிலையங்களை திறக்க முடிவு செய்தது. ஆசிய நாடுகளில் மிகப்பெரும் வர்த்தகத்தை கொண்ட இந்தியாவிலும் விற்பனை நிலையங்களை திறக்கப்போவதாக அறிவித்தது. அந்த வகையில், கடந்த மாதம் மும்பை மற்றும் டெல்லியில் ஆப்பிள் ஆஃப் லைன் ஸ்டோர்கள் திறக்கப்பட்டன.

இந்த ஸ்டோர்களை ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் திறந்து வைத்தார். இவரது வருகையால், ஆப்பிள் பிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் அந்த ஸ்டோர்களில் குவித்து பிரம்மாண்ட வரவேற்பை அவருக்கு கொடுத்தனர். அதோடு, பல மணி நேரம் காத்திருந்து, ஆப்பிள் போன்களை வாங்கி சென்றனர். இப்படி முதல் நாளிலேயே 2 கடைகளிலும் கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டது.
இன்றளவும் விற்பனை குறையவில்லை என்பதே உண்மை. வெறும் ஒரே மாதத்தில் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள ஸ்டோர்களில் முறையே ரூ.22, ரூ.25 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. இவ்வளவு கோடிகளுக்கு விற்பனையிருக்கும் என்று ஆப்பிள் நிறுவனமே, எதிர்பார்த்திருக்காது, என்றே சொல்லலாம். ஏனென்றால், இவ்வளவு லாபத்தை பார்த்த பின்பு ஆப்பிள் நிறுவனம், மேலும் மூன்று ஆஃப் லைன் ஸ்டோர்களை இந்தியாவில் திறக்க முடிவு செய்துள்ளது.
இந்த ஸ்டோர்கள் பிற முக்கிய நகரங்களில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மும்பை மற்றும் டெல்லியிலேயே திறக்க ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில், மும்பையின் போரிவலி (Borivali) பகுதியில் 2025ஆம் ஆண்டு மூன்றாவது ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும். அதன்பின் நான்காவது ஆப்பிள் ஸ்டோர் 2026ஆம் ஆண்டு டெல்லியின் டிஎல்எஃப் ப்ரோமெனேட் மாலில் (DLF Promenade Mall) திறக்கப்படும்.
அதேபோல, ஐந்தாவது ஆப்பிள் ஸ்டோர் 2027ஆம் ஆண்டு மும்பையில் உள்ள வோர்லி (Worli) பகுதியில் திறப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் வசிக்கும் ஆப்பிள் பிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த முடிவை மாற்றி வேறு முக்கிய நகரங்களில் திறக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கு ஆப்பிள் நிறுவனம் என்ன முடிவெடுக்கும் என்பது வரும் காலங்களில் தெரியவரும். எங்கு திறந்தாலும் ஆப்பிள் நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications