Home
News

iPhone-களுக்கான PASSWORD-ல் புதிய மாற்றம்.. ஜூன் 10 முதல்.. Apple அறிமுகம் செய்யும் புதிய செயல்முறை!

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான நிகழ்வான டபுள்யூடபிள்யூடிசி 2024 (WWDC 2024) வருகிற ஜூன் 10 ஆம் தேதி முதல் நடக்க உள்ளது. அறியாதோர்களுக்கு டபுள்யூடபிள்யூடிசி என்றால் வேர்ல்ட்வைட் டெவெலப்பர்ஸ் கான்ஃப்ரென்ஸ் (Worldwide Developers Conference) என்பதன் சுருக்கமாகும். இந்நிகழ்வின் போது ஏஐ (AI) அம்சங்கள் உடனான அதன் லேட்டஸ்ட் ஐஓஎஸ் 18-ஐ (iOS 18) அறிமுகமம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் ஐபோன்களுக்கான (iPhone) பாஸ்வேர்ட் உட்பட அனைத்து ஐஓஎஸ் டிவைஸ்களுக்குமான பாஸ்வேர்ட் தொடர்பான புதிய மாற்றம் ஒன்றும் அறிவிக்கப்படும் என்பது போல் தெரிகிறது.

அதென்ன மாற்றம்? ஜூன் 10 நடக்கும் நிகழ்வில், ஆப்பிள் நிறுவனமானது ஐபோன்கள் உட்பட அனைத்து ஐஓஎஸ் டிவைஸ்களுக்கும் சேர்த்து பாஸ்வேர்ட்ஸ் என்கிற புதிய ஆப்பை (Passwords App) அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே, ஆப்பிளின் புதிய பாஸ்வேர்ட்ஸ் அப் ஆனது ஐஓஎஸ் டிவைஸ்களுக்கான லாக்இன் விவரங்களை நிர்வகிக்கும் ஒரு ஆப் ஆக இருக்கும்.

iPhone-களுக்கான PASSWORD-ல் புதிய மாற்றம்!

ப்ளூம்பெர்க்கின் சமீபத்திய அறிக்கையும் கூட, ஆப்பிள் நிறுவனம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள அதன் வருடாந்திர நிகழ்வில் பாஸ்வேர்ட்ஸ் என்கிற புதிய ஆப்பை அறிமுகம் செய்யலாம் என்கிற தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆப் எப்படி வேலை செய்யும்? ஆப்பிளின் டபுள்யூடபிள்யூடிசி 2024 நிகழ்வில் வேறு என்னென்ன அறிமுகங்கள், அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்? இதோ விவரங்கள்:

ஆப்பிளின் புதிய பாஸ்வேர்ட்ஸ் ஆப் எப்படி வேலை செய்யும்? ஆப்பிள் நிறுவனமானது, ஐக்ளவுட் கீசெயினை (iCloud Keychain) பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் ஐபோன்கள், ஐபாட் அல்லது விஷன் ப்ரோ ஆகியவைகளின் பாஸ்வேர்ட்களை சேமிக்க ஏற்கனவே அனுமதிக்கிறது. இதற்கிடையில் ஜூன் 10 அறிமுகமாகும் புதிய ஆப்பும் கூட இதே பாணியில் வேலைசெய்யும் என்று ஊகிக்கப்படுகிறது.

இருப்பினும் இது அக்கவுண்ட்கள், வைஃபை நெட்வொர்க்குகள் மற்றும் பாஸ் கீகள் போன்ற பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்ட லாக்-இன்களை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் எளிமையாக கூறவேண்டும் என்றால்.. சந்தையில் உள்ள மற்ற பிரபலமான பாஸ்வேர்ட் மேனேஜர்களான 1பாஸ்வேர்டு மற்றும் லாஸ்ட்பாஸ் போன்றே ஆப்களை போல ஆப்பிளின் புதிய பாஸ்வேர்ட்ஸ் ஆப்பும் செயல்படலாம்.

கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, இந்த புதிய ஆப் பயனர்கள் தங்கள் கடவுச்சொற்களை உருவாக்க மற்றும் கண்காணிக்க உதவும். மேலும் இந்த ஆப்பின் மூலம், சேவ்டு பாஸ்வேர்ட்களையும் அணுகலாம். ஆப்பிளின் இந்த புதிய ஆப் ஆனது ஒரு பாஸ்வேர்ட் ஆத்தென்டிகேட்டர் (Password Authenticator) ஆகவும் செயல்படலாம்.

அதாவது இது கூகுளின் ஆத்தென்டிகேட்டர் ஆப்பை (Google Authenticator App) போன்ற வெரிஃபிகேஷனை (Verification) ஆதரிக்கலாம். ஆப்பிளின் இந்த புதிய ஆப் ஐஓஎஸ் 18, ஐபாட்ஓஎஸ் 18 (iPadOS 18) மற்றும் மேக்ஓஎஸ் 15 (macOS 15) இல் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள்யூடபிள்யூடிசி 2024 நிகழ்வில் வேறு என்னென்ன அறிமுகங்கள், அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்? ஜூன் 10 ஆம் தேதியன்று ஐஓஎஸ் 18 உடன் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஏஐ மேம்பாடுகள் குறித்த பல அறிவிப்புகள் மற்றும் அறிமுகங்கள் நடக்கலாம். மேலும் இந்த புதிய ஓஎஸ் ஆனது ஏஐ-எனேபிள்டு போட்டோ ரீடச்சிங், வாய்ஸ் மெமோ டிரான்ஸ்கிரிப்ஷன்கள் மற்றும் மிஸ்டு நோட்டிபிக்கேஷன்களுக்கான ஸ்மார்ட் ரீகேப்ஸ் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவித்து சிரி வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆனது இயல்பான உரையாடல் திறன்கள் மற்றும் சிறந்த யூஸர் பெர்சனலைசேஷனுக்கான லார்ஜ் லேங்குவேஜ் மாடல்களை இணைத்து ஒரு பெரிய அப்பேட்டை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. கூடுதலாக ஏஐ-ஜெனரேட்டட் கஸ்டம் ஈமோஜிகள், செமெசேஜ்களில் பரிந்துரைக்கப்பட்ட ரிப்ளை கள் மற்றும் ஆப்பிள் மியூசிக்கில் ஆட்டோ-ஜெனரேட்டட் பிளேலிஸ்ட்கள் போன்றவைகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple to Launch New Password Manager App Called Passwords in WWDC 2024 Starting June 10 How it Works
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X