என்ன Apple.. சீன கம்பெனியா மாறிடுச்சா.. 2025-க்குள் 15 புதிய தயாரிப்புகள் அறிமுகம்.. இதோ லிஸ்ட்!
2025 ஆம் ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் முடிவடைய போகிறது. அதற்குள் ஆப்பிள் (Apple) நிறுவனம் ஏற்கனவே 5 புதிய தயாரிப்புகளை (ஐபோன் 16இ மற்றும் ஐபேட் 2025 மாடல்கள் உட்பட) அறிமுகப்படுத்தி விட்டது. ஆனால் ஆப்பிளின் "உண்மையான ஆட்டமே" இனிதான் ஆரம்பிக்கிறது.
2025 ஆம் ஆண்டு முடிவதற்குள் ஆப்பிள் நிறுவனம் 15 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதில் நிச்சயம் ஐபோன் 17 சீரீஸ் (Apple iPhone 17 Series) மாடல்கள் இருக்கும். இது தவிர்த்து வேறு என்னென்ன தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படலாம்? இதோ விவரங்கள்:

ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் மாடல்கள்:
- ஐபோன் 17 (iPhone 17)
- ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air)
- ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro)
- ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max)
எம்5 சிப் இதனான் மேக்புக் மற்றும் ஐபேட் மாடல்கள்:
- புதிய மேக் ப்ரோ (New Mac Pro)
- எம்5 சிப் உடனான மேக்புக் ப்ரோ (Apple M5 MacBook Pro)
- எம்5 சிப் உடனான ஐபேட் ப்ரோ (Apple M5 iPad Pro)
புதிய ஏர்பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்கள்:
- ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 (Apple AirPods Pro 3)
- ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 (Apple Watch Ultra 3)
- ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 11 (Apple Watch Series 11)
- ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 (Apple Watch SE 3)
ஆப்பிளின் புதிய ஹோம் ப்ராடெக்ட்ஸ் (Apple New Home Products):
- ஆப்பிள் ஹோம்பேட் (Apple HomePad)
- புதிய ஆப்பிள் டிவி 4கே (New Apple TV 4K)
- ஆப்பிள் ஹோம்பேட் மினி 2 (Apple HomePod mini 2)
வேறு என்னென்ன ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படலாம்?
- ஆப்பிள் ஏர்டேக் 2 (Apple AirTag 2)
- ஆப்பிள் ஸ்டூடியோ டிஸ்பிளே 2 (Studio Display 2)
- ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro)
- ப்ரோ டிஸ்பிளே எக்ஸ்டிஆர் (Pro Display XDR)
ஆப்பிள் அதன் டபுள்யூடபுள்யூடிசி 2025 (Apple WWDC 2025) நிகழ்வு எப்போது தொடங்கும் என்கிற தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆப்பிளின் 2025 ஆம் ஆண்டுக்கான வேர்ல்ட்வைட் டெவெலப்பர்ஸ் கான்ஃபிரென்ஸ் (Worldwide Developers Conference 2025) நிகழ்வானது ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 13 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டபுள்யூடபுள்யூடிசி 2025 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் 4 முக்கியமான அறிவிப்புகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக ஐஓஎஸ் 19 (iOS 19) அறிவிக்கப்படலாம். ஐபோன்கள், ஐபேட்கள் மற்றும் மேக்புக்கள் உள்ளிட்ட ஆப்பிளின் சுற்றுச்சூழல் அமைப்பு முழுவதும் ஒருங்கிணைந்த தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் ஐஓஎஸ் 19 புதுப்பிக்கப்பட்ட இன்டர்பேஸ்-ஐ அறிமுகப்படுத்தும் என்று ஆரம்பகால தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாவதாக ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்- ன் (Apple Intelligence) புதிய ஏஐ அம்சங்கள் (New AI Features) அறிவிக்கப்படலாம். மூன்றாவதாக ஐபோன் மற்றும் ஐபேட்-க்கு வரும் இன்டர்பேஸ் அப்டேட்கள் மேக்ஓஎஸ் 16 வெளியீட்டுடன் மேக்-க்கும் நீட்டிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) பற்றிய சில அதிகாரப்பூர்வ விவரங்கள் பகிரப்படலாம்.


Click it and Unblock the Notifications








