Just In
- 1 hr ago
டிஜிட்டல் கேமராக்களுக்கு வேலை இருக்காது போலயே: சோனி கேமராவுடன் அறிமுகமான 2 புதிய Vivo போன்கள்.!
- 1 hr ago
iPhone எதுக்கு? அதைவிட கம்மி விலைக்கு இந்த பிரீமியம் போனை தர்றோம்.. Apple க்கு Samsung வைத்த வேட்டு!
- 2 hrs ago
இப்படி ஒரு அம்சம் நம்ம Mobile போன்ல இருக்கா? WhatsApp யூசர்ஸ் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
- 2 hrs ago
5ஜி போன் இல்லையா? அப்போ உங்க காட்டில் மழைதான்! அறிமுகமானது Infinix Zero 5G 2023 சீரிஸ்!
Don't Miss
- News
ஹையோ ஹையோ.. ஓபிஎஸ் நிலையை பார்த்தீங்களா.. வேறு வழியில்லை.. எடப்பாடி தரப்பு அட்டாக்
- Finance
மோடி அரசின் அறிவிப்பால் 1 கோடி பேருக்கு லாபம்.. யாருக்கு இந்த ஜாக்பாட்..!
- Movies
விடுதலை ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்: உங்கிட்ட இருந்து எதாவது வாங்கணும்ல... தனுஷை வம்பிழுத்த இளையராஜா
- Automobiles
இப்படியொரு சூப்பரான ஆடி கார் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கவே இல்ல!! ரூ.2 லட்சத்தில் புக் பண்ணிடலாம்!
- Lifestyle
குரு-சனி உருவாக்கும் அகண்ட சாம்ராஜ்ய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Sports
தரமான செய்கை இருக்கு.. ஹர்பஜனின் முக்கிய சாதனையை உடைக்கும் அஸ்வின்.. ஆஸி, தொடரில் பெரும் வாய்ப்பு!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
2023 தொடக்கத்திலேயே முக்கிய சேவைக்கு விலையை உயர்த்தி ஆப்பு வைத்த Apple: ஐபோன் பயனர்களின் கவனத்திற்கு.!
ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் தரமான போன்களை அறிமுகம் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது என்றே கூறலாம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் 14 மாடல்களுக்கு இப்போது வரை இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு தொடக்கத்திலேயே ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

பிப்ரவரி 2023..
அதாவது ஆப்பிள் நிறுவனம் வாரன்டி முடிந்த ஐபோன் பேட்டரியை மாற்றுவதற்கான விலை அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக பிப்ரவரி 2023-ம் ஆண்டு வரையில் வாரன்டி முடிந்த ஐபோன்களுக்கான பேட்டரியை மாற்றப் பழைய விலையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1-ம் தேதி முதல்..
ஆனால் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்ட விலை அமலுக்கு வரும் என்று ஆப்பிள் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது இதுவரை பேட்டரி மாற்றுவதற்கான விலை 69 அமெரிக்க டாலராக இருந்த நிலையில் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் 20 டாலர் அதிகப்படுத்துவதாகவும், இது ஐபோன் 14 மாடல்களுக்கு முந்தைய அனைத்து ஐபோன்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் கேர் பிளஸ்
குறிப்பாக இதில் ஆப்பிள் கேர் (applecare)அல்லது ஆப்பிள் கேர் பிளஸ் (applecare plus) போன்ற திட்டங்களை மேற்கொள்ளதாவர்களே இந்த விலையேற்றத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரும்பாலான ஆப்பிள் ஐபோன் வாடிக்கையாளர்கள் இந்த புதிய விலை ஏற்றத்தால் பாதிப்படையப்போவது உறுதிதான்.

80% கீழ் பேட்டரி ஹெல்த்
அதேபோல் ஆப்பிள் கேர் (applecare) அல்லது ஆப்பிள் கேர் பிளஸ் ((applecare plus) பிளான்களை வைத்திருப்போர் 80% கீழ் பேட்டரி ஹெல்த் இருந்து அதனை மாற்ற வேண்டுமென்றால் எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஐபோன் 14
அதேபோல் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடல்களுக்கு அவ்வப்போது சில சிறப்புச் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக உலகம் முழுவதும் இந்த ஐபோன் 14 மாடலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஐபோன் 14 மாடலின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே
ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் அளவிலான சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது FHD+ ரெசல்யூஷன் உடன் வருகிறது. மேலும் இந்த டிஸ்பிளே, 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் ஆப்பிளின் செராமிக் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷனையும் வழங்குகிறது.

டூயல் ரியர் கேமரா செட்டப்
ஐபோன் 14 கேமராக்களை பொறுத்தவரை, இதில் 12எம்பி மெயின் லென்ஸ் + 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 12எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. மேலும் ஐபோன் 14 மாடலின் ரியர் கேமராவானது 60fps என்கிற வேகத்தின் கீழ் 4K வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 12MP செல்பீ கேமரா உள்ளது.

A15 பயோனிக் சிப்செட்
ஐபோன் 14 ஆனது ஆப்பிள் நிறுவனத்தின் A15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதாவது iPhone 13-ல் இருக்கும் அதே சிப்செட் தான் ஆனால் இது கூடுதல் GPU கோர்-ஐ கொண்டுள்ளது, அதாவது 5-core GPU-வைக் கொண்டுள்ளது. ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 6ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 3279mAh அளவிலான பேட்டரியை பேக் செய்கிறது மற்றும் சமீபத்திய iOS 16 கொண்டு இயங்குகிறது. பயனர்களுக்கான கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தின் கீழ் ஐபோன் 14 மாடலில் ஃபேஸ் ஐடி-க்கான (Face ID) ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக, இதுவொரு டூயல் சிம் ஆதரவை வழங்கும் ஒரு 5ஜி போன் (5G Phone) ஆகும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470