Apple-ன் ஈயடிச்சான் காப்பி.. ஆனாலும் நல்லா இருக்கு.. Samsung போன்களில் உள்ள கேமரா அம்சம் iPhone-களில்!
எப்போதுமே ஒரு பொருளின் மீதான அல்லது ஒரு தயாரிப்பின் மீதான 'ஹைப்' என்பது அல்லது எதிர்பார்ப்பு என்பது.. இயல்பாக உண்டாக வேண்டும். அப்போது தான் அந்த தயாரிப்பின் விற்பனை நீண்ட காலத்திற்கு சமசீரான முறையில் நடக்கும். இல்லை என்றால் "ஒரு வேகத்துல வாங்கிட்டேன்!" என்கிற கமெண்ட்களை அதிகம் கேட்க வேண்டியிருக்கும்.
ஆப்பிள் பரிதாபங்கள்: ஆப்பிளின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஐபோன் ஆக அறிமுகமான ஐபோன் 16இ (iPhone 16e) மாடலின் விளம்பரம் நன்றாக இருக்கிறது. ஆனால் "ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாத விலையில் (ரூ.60,000" என்கிற விளம்பரம் மட்டுமே, அந்த மாடலை வாங்க போதுமான காரணமாக இருக்காது என்பதை வாடிக்கையாளர்கள் நன்கு அறிவார்கள்; ஆப்பிளும் (Apple) அதை புரிந்து கொண்டது போல் தெரிகிறது.

அப்படி என்ன புரிதல்? ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த ஐபோன் 17 சீரிஸ் (iPhone 17 Series) இல் "உண்மையாகவே எதிர்பார்ப்பை" கிளப்பும் ஒரு வேலையை பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு புதிய லீக்ஸ் வழியாக, ஐபோன் 17 சீரிஸில் உள்ள ப்ரோ மாடல்கள் ஆனது, அதாவது ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மாடல்களில் ஒரு பிரத்யேக கேமரா ஆப் அம்சம் (Exclusive Camera app feature) இடம்பெறவுள்ளது.
இது.. அது இல்ல! இந்த அம்சம் செல்பீ மற்றும் ரியர் கேமராக்களை (Selfie and Rear Camera) பயன்படுத்தி ஒரே நேரத்தில் வீடியோவை பதிவு செய்ய அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. "அட இது சாம்சங் கேலக்ஸி மாடல்களில் நீண்ட காலமாக கிடைக்கும் ஒரு டூயல் வீடியோ அம்சம் (Dual Video Feature) ஆச்சே!" என்று நீங்கள் இந்நேரம் யூகித்து இருந்தால்.. அது 100% கரெக்ட் தான். அதாவது ஆப்பிள் நிறுவனம் சாம்சங்-ஐ காப்பி அடிக்க உள்ளது!

புதிய வீடியோ ரெக்கார்டிங் அம்சம்: ஃப்ரண்ட் பேஜ் டெக் (Front Page Tech) வழியாக வெளியான வீடியோவில், ஐபோன் 17 ப்ரோ மற்றும் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 2 மாடல்களுக்கு மட்டும் பிரத்யேகமாக இருக்கக்கூடிய ஒரு புதிய ஐஓஎஸ் 19 அம்சத்தை (New iOS 19 Feature) வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது கேமரா ஆப்பில் புதிய வீடியோ ரெக்கார்டிங் அம்சத்தின் கீழ்,செல்பீ மற்றும் ரியர் கேமராவிலிருந்து ஒரே நேரத்தில் வீடியோக்களை பிடிக்க அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த அம்சம் ஐபோனின் வீடியோ ஆப் ஆன ஃபேஸ்டைம்-ஐ (Facetime) போன்ற இன்டர்பேஸை கொண்டுள்ளது. அதாவது ஸ்க்ரீனில் பெரிதாக காட்டப்படும் கட்சி ரியர் கேமராவில் படம்பிடிக்கப்படும் வீடியோவாகவும், சிறிய பகுதியில் காட்டப்படும் காட்சி செல்பீ கேமராவிலிருந்து வரும் வீடியோவாக இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக, மூன்றாம் தரப்பு ஆப்கள் வழியாக கிடைத்த இந்த அம்சம், இப்போது ஐபோனின் பில்ட்-இன் கேமரா அம்சமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஓஎஸ் 19 அப்டேட் தான் காரணம்: ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் வரும் இந்த மாற்றம் ஐஓஎஸ் 19 அப்டேட்டின் (iOS 19 Update) ஒரு பகுதியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஐஓஎஸ் 19 ஆனது ஐபோனின் யூசர் இன்டர்பேஸில் சில பெரிய மறுவடிவமைப்புகளை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆப் ஐகான் வடிவமைப்பிலிருந்து முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட கேமரா ஆப் வரை, ஐஓஎஸ் 19 இல் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிளின் ஐஓஎஸ் 19 எப்போது அறிமுகமாகும் (iOS 19 Release Date)? ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐஓஎஸ் 19 (iOS 19) அப்டேட் ஆனது வருகிற 2025 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகமாக உள்ளது. கூடவே எந்தெந்த ஐபோன்களுக்கு இந்த அப்டேட் கிடைக்காது மற்றும் கிடைக்கும் என்கிற பட்டியலும் வெளியாகி உள்ளது.

எந்தெந்த ஐபோன் மாடல்களுக்கு ஐஓஎஸ் 19 அப்டேட் கிடைக்கும்? ஐபோன் 11 சீரீஸ் (iPhone 11 series), ஐபோன் 12 சீரீஸ் (iPhone 12 series), ஐபோன் 13 சீரீஸ் (iPhone 13 series), ஐபோன் 14 சீரீஸ் (iPhone 14 series), ஐபோன் 15 சீரீஸ் (iPhone 15 series) மாடல்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும்
மேலும் ஐபோன் 16 (iPhone 16) ஐபோன் 16இ (iPhone 16e), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max), ஐபோன் எஸ்இ 2 (iPhone SE 2), ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 3) ஆகிய மாடல்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும்
எந்தெந்த ஐபோன் மாடல்களுக்கு ஐஓஎஸ் 19 அப்டேட் கிடைக்காது? என்னென்ன மாடல்கள்? ஐபோன் எக்ஸ்எஸ் (iPhone XS), ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் (iPhone XS Max) மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் (iPhone XR) ஆகிய 3 மாடல்களும் ஐஓஎஸ் 19 அப்டேட்டை பெறாது. ஐஓஎஸ் 19 அப்டேட் ஒருபக்கம் இருக்க ஆப்பிள் நிறுவனம், ஏப்ரல் மாத ரிலீஸ் டைம்லைனுக்கு முன்பாகவே ஐஓஎஸ் 18.4 அப்டேட்டை (iOS 18.4 Update) இந்தியாவில் வெளியிட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் எந்தெந்த ஐபோன் மாடல்களுக்கு ஐஓஎஸ் 18.4 அப்டேட் கிடைக்கும்? ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro), ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max), ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16இ (iPhone 16e), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro), ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max)

ஐஓஎஸ் 18.4 அப்டேட்டில் உள்ளூர் மொழிகள்: முன்னதாக இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்கள் - டீபால்ட் லேங்குவேஜ் ஆக யுஎஸ் இங்கிலீஷ்-ஐ செட் செய்வதன் மூலம் ஏஐ அம்சங்களை பயன்படுத்த ஆப்பிள் அனுமதித்து. தற்போது ஐஓஎஸ் 18.4 அப்டேட் வழியாக உள்ளூர் மொழிகளுக்கு (Local Languages) மாறுகிறது.
தற்போது ஆப்பிள் ஏஐ-க்கான ட்ராப்-டவுன் மெனுவிலிருந்து இந்தியன் இங்கிலீஷ் விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும் சிரி உடனான புதிய உரையாடல் - இந்தி, தமிழ், மராத்தி, பங்களா, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளில், ஆங்கிலத்துடனும் கலந்து பேசலாம். இந்த மாற்றம் கால் செய்ய, ஆப்பிள் மேப்ஸ்-ல் இடங்களை கண்டறிய மற்றும் உங்களுக்குப் பிடித்த பாடல்களை பிளே செய்ய பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications