ஒருவழியாக Apple இதை செய்கிறது! பல ஆண்டுகளாக Android போன்களில் உள்ள ஒரு நல்ல அம்சம் iPhone-க்கு வருது.. என்னது?
ஒருவழியாக.. ஆப்பிள் (Apple) நிறுவனம், கடந்த பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களில் உள்ள.. ஆண்ட்ராய்டு போன்களின் பெர்பார்மென்ஸ்-க்கு பக்கபலமாக உள்ள.. ஒரு அம்சத்தை அதன் ஐபோன்களில் கொண்டுவர முடிவு செய்துள்ளது போல் தெரிகிறது. அது என்ன அம்சம்? விரிவாக பார்க்கலாம்!
ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டு அறிமுகம் செய்யும் ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மாடலின் வழியாக அதன் கூலிங் டிபார்ட்மென்ட்டில் (Cooling Department) மிகவும் தேவையான ஒரு மேம்படுத்தல் சேர்க்கும் என்பது போல் தெரிகிறது. லீக்கர் மஜின் பு (Leaker Majin Bu) பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்தின்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 ப்ரோ மாடலில் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டமை (Vapor chamber cooling system) சேர்க்கத் திட்டமிட்டுள்ளது!

முன்னரே குறிப்பிட்டபடி இது அனைத்து ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களிலும், பெரும்பாலான மிட்-ரேன்ஜ் போன்களிலும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் தெர்மல் சொல்யூஷன் (Thermal Solution) ஆகும். இது கேமிங் (Gaming), ஏஐ (AI) மற்றும் இதே போன்ற ரிசோர்ஸ்-இன்டென்சிவ் பணிகளின் (Resource-intensive tasks) வளர்ந்து வரும் தேவைகளை , மிகவும் திறமையான முறையில் கையாள உதவுகிறது.
இந்த வகையான தெர்மல் சொல்யூஷன் ஆனது - ப்லுயிட் எவாப்பரேஷன் (Fluid evaporation) மற்றும் கண்டென்ஸேஷனை (Condensation) பயன்படுத்தி முக்கிய கூறுகளிலிருந்து சேஸுக்கு வெப்பத்தை விரைவாக நகர்த்துகிறது. ஆப்பிளின் தற்போதைய ஐபோன்களில் உள்ள காப்பர் ஹீட் ஸ்ப்ரெடர்கள் (Copper heat spreaders) மற்றும் கிராஃபைட் ஷீட்களை (Graphite sheets) விட இது கணிசமாக திறமையானது.
இதுதவிர்த்து ஆப்பிளின் இந்த மாற்றம் பெர்பார்மென்ஸிலும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக ஐபோன் 16 ப்ரோ மாடல் ஆனது தொடர்ச்சியான பணிச்சுமைகளின் (Sustained workloads) போது 40% ஜிபியு செயல்திறன் வீழ்ச்சியை (GPU performance drop) சந்தித்ததாக கூறப்படுகிறது.
ஐபோன் 17 ப்ரோ ஆனது புதிய ஏ19 ப்ரோ சிப்பை (New A19 Chip) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால்.. ஆப்பிளின் இந்த புதிய மாற்றாதால் ஒரு சிறந்த குளிரூட்டும் அமைப்போடு சேர்த்து நல்ல செயல்திறனையும் வழங்கலாம். வேப்பர் சேம்பர் ஆனது மெமரி, மோடம் மற்றும் ரியர் கேமரா யூனிட் வரை நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. நீண்ட 4கே அல்லது 8கே வீடியோ பதிவுகள் அல்லது டிவைஸில் ஏஐ அடிப்படையிலான பணிகளின் போது வெப்பம் தொடர்பான சிக்கல்களைக் குறைக்க இது உதவும்.

இருப்பினும் ஐபோன் 17 சீரிஸில் உள்ள நான்-ப்ரோ மாடல்களில் விசி கூலிங்கை எதிர்பார்க்க முடியாது. அதாவது ஐபோன் 17, ஐபோன் 17 பிளஸ் அல்லது புதிய ஐபோன் 17 ஏர் ஆகிய மாடல்கள் தொடர்ந்து காப்பர் ஹீட் ஸ்ப்ரெடர்கள் மற்றும் கிராஃபைட் ஷீட்களை தான் நம்பியிருக்கும். இந்த லீக் உண்மையா அல்லது வெறும் யூகம்தானா என்பதை செப்டம்பர் 2025 வாக்கில் நடக்கும் ஐபோன் 17 சீரிஸின் அறிமுகத்தின் போது தெரிந்து கொள்வோம்.
ஆப்பிள் அதன் ஐபோன் 17 சீரீஸில் 4 மாடல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro), ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மற்றும் புத்தம் புதிய ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air). புதிய ஏர் மாடல் ஆனது பிளஸ் (Plus) மாடலுக்கு பதிலாக அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்லிம் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge) மாடலுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் சரியான பதிலடி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!


Click it and Unblock the Notifications







