Home
News

6 வருஷமா செய்யாத ஒரு காரியத்தை செய்யப்போகும் Apple நிறுவனம்.. iPhone 17 Air மாடலுக்காக.. என்னது?

ஆப்பிள் (Apple) நிறுவனம் ஒரு முடிவோடு தான் இருக்கிறது போல! ஐபோன் 18 (iPhone 18) மற்றும் ஐபோன் 18இ (iPhone 18e) மாடல்ககளை தனியாகவும், ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) மாடல்களை தனியாகவும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் இன்னொரு புதிய விஷயத்தையும் செய்யவுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் இது புதிய விஷயம் அல்ல. 2015 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே செய்த ஒரு விஷயம் தான். தற்போது அதை மீண்டும் செய்ய உள்ளது - அதுவும் ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) மாடலில்! இது வருகிற செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐபோன் 17 சீரீஸில் இடம்பெறவுள்ள 'புத்தம் புது" மாடலாகும்.

6 வருஷமா செய்யாத ஒரு காரியத்தை செய்யப்போகும் Apple நிறுவனம்!

ஐபோன் 17 ஏர் மாடலில் ஆப்பிள் அப்படி என்ன செய்யவுள்ளது? இது 5.5 மிமீ அளவீட்டில் உள்ள "சூப்பர் ஸ்லிம் ஐபோன்" மாடலாக இருக்கும் என்று ஏற்கனவே எங்களுக்கு தெரியும். இப்போது, ​​ஆப்பிள் நிறுவனம் இந்த மாடலில் அதன் ஸ்மார்ட் பேட்டரி கேஸ்-ஐ (Smart Battery Case) மீண்டும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

தி இன்ஃபர்மேஷன் வழியாக கிடைத்த அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 ஏர் மாடலுக்காக ஸ்மார்ட் பேட்டரி கேஸை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு பேட்டரி பேக் கொண்ட ஐபோன் கேஸ் ஆகும். இது பயணத்தின்போது அல்லது சார்ஜிங் பாயிண்ட் இல்லாத சூழ்நிலைகளில் டிவைஸை சார்ஜ் செய்ய அனுமதிக்கும்.

ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது மிகவும் மெலிதாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டால், நிச்சயம் இதன் பேட்டரி பெரும்பாலும் சிறியதாகவே இருக்கும். பெரும்பாலும் இது 3,000mAh முதல் 4,000mAh க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆப்பிள் நடத்திய இன்டர்னல் டெஸ்ட்டிங்கில் - 60 சதவீதம் முதல் 70 சதவீதம் பயனர்கள் மட்டுமே ஐபோன் 17 ஏர்-ஐ சார்ஜ் செய்யாமல் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த முடிவது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே "வெளிப்படையாக" ஐபோன் 17 ஏர் மாடலை வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு எக்ஸ்ட்ரா பேட்டரி கேஸ் கண்டிப்பாக தேவைப்படும் என்கிற முடிவுக்கு ஆப்பிள் வந்துள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, ஆப்பிள் நிறுவனம் இதை முதல்முறையாக செய்யவில்லை. இது கடந்த 2015 ஆம் ஆண்டில் அறிமுகமா ஐபோன் 6எஸ் உடன் அறிமுகமானது மற்றும் 2019 வரை ஐபோன் 11 வரை தொடர்ந்தது; பின் காணாமல் போனது; தற்போது மீண்டும் வருகிறது.

ஐபோன் 17 ஏர் மாடல் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? முன்னரே குறிப்பிட்டபடி இது ஐபோன் 17 சீரீஸின் கீழ் முற்றிலும் புதிய மாடல் ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் மற்ற ஐபோன் சீரீஸ்களின் அறிமுகத்தை கருத்தில் கொண்டால், இந்த சீரிஸ் செப்டம்பர் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்.

ஐபோன் 17 ஏர் இதுவரை இல்லாத அளவுக்கு மெலிதான ஐபோன் மாடலாக இருக்கும் என்றும், இது 5 மிமீ முதல் 6.25 மிமீ வரை தடிமன் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது 6.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஸ்க்ரீன் சைஸ்-ன் அடிப்படையில் இந்த மாடல் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு இடையில் வைக்கப்படும்.

ஐபோன் 17 ஏர் மாடலானது ஹாரிசாண்டல் மாட்யூலில் சிங்கிள்-லென்ஸ் கேமராவுடன் வரக்கூடும். சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 17 ஏர் ஆனது ஆப்பிளின் வரவிருக்கும் ஏ19 சிப்பால் இயக்கப்படலாம் ஐபோன் 17 ஏர் மாடலின் விலை குறித்து எந்த சரியான விவரங்களும் இல்லை. இது ரூ.99,900 க்கு அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple to Bring back Its Smart Battery Case For iPhone 17 Air How It works and helps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X