1 இல்ல மொத்தம் 7 இருக்கு: 2022 இல் Apple செய்ய இருக்கும் சம்பவம்- உங்க காட்டில் மழை தான்!

|

Apple, செப்டம்பர் 7 வெளியீட்டு நிகழ்வில் 7 டிவைஸ்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் iPhone சீரிஸ், 3 iPad டேப்லெட்டுகள் என பல முக்கிய சாதனங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

7 டிவைஸ்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதியில் ஆப்பிள் ரசிகர்களுக்கு ஒரு விருந்தே இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. அது என்ன 7 டிவைஸ்கள், எப்போது அறிமுகம் என்று பார்க்கலாம்.

7 ஆம் தேதி அறிமுகமாகும் 7 டிவைஸ்கள்

7 ஆம் தேதி அறிமுகமாகும் 7 டிவைஸ்கள்

ஐபோன் 14 சீரிஸ் இன்னும் மூன்று வாரங்களில் அறிமுகம் செய்யப்படுவது ஏரத்தாள முடிவு செய்யப்பட்டு விட்டது.

தெரிவிக்கும்படி செப்டம்பர் 7 ஆம் தேதி ஆப்பிள் அறிமுக நிகழ்வு நடைபெறும் பட்சத்தில் இதில் 7 டிவைஸ்கள் அறிமுகம் செய்யப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதில் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபாட் டேப்லெட்கள் உட்பட ஏழு சாதனங்கள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 14 மேக்ஸ் அறிமுகமாகுமா இல்லையா?

ஐபோன் 14 மேக்ஸ் அறிமுகமாகுமா இல்லையா?

Evan Blass பகிர்ந்த தகவலின்படி, குபெர்டினோவை தளமாகக் கொண்ட ஆப்பிளின் ஐபோன் 14 இல் iPhone 14 mini இடம்பெறும் என குறிப்பிட்டார்.

iPhone 14 mini இடம்பெறும் பட்சத்தில் ஐபோன் 14 மேக்ஸ் அறிமுகமாகுமா இல்லையா என்பதை சந்தேகம் தான்.

டேப்லெட் பிரிவை பொறுத்தவரை, வழக்கம் போல் ஒரு சாதாரண மாடல் மற்றும் இரண்டு ப்ரோ மாடல்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 டிவைஸ்கள் என்னென்ன?

7 டிவைஸ்கள் என்னென்ன?

ஆப்பிள் அறிமுகம் செய்யும் 7 டிவைஸ்கள் குறித்து டிப்ஸ்டர் தளத்தில் வெளியான தகவலின்படி, ஐபோன் 14, ஐபோன் 14 மினி, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ், ஐபாட் 10.2 (10-வது ஜென்), ஐபாட் ப்ரோ 12.9 (6-வது ஜென்) மற்றும் ஐபாட் ப்ரோ 11(4-வது ஜென்) உள்ளிட்டவை இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளது.

டிப்ஸ்டர் தகவல் சாத்தியமாக வாய்ப்பு இருக்கு...

டிப்ஸ்டர் தகவல் சாத்தியமாக வாய்ப்பு இருக்கு...

டிப்ஸ்டர் தகவலில் மிகவும் உறுதியாக இருக்கிறோம் எனவும் இதற்கு சாத்தியம் இருக்கிறது எனவும் Evan Blass குறிப்பிட்டுள்ளார்.

டிப்ஸ்டர் தகவலில் ஐபோன் 14 மேக்ஸ் குறிப்பிடப்படவில்லை, நேரடியாக ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் தான் பட்டியலிடப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

எப்போது அறிமுகம்? எப்போது விற்பனை?

எப்போது அறிமுகம்? எப்போது விற்பனை?

இது உறுதியாகும் பட்சத்தில் iPhone 14 மாடல்கள் மற்றும் மூன்று iPad டேப்லெட்கள் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த அனைத்து சாதனங்களும் செப்டம்பர் 16 ஆம் தேதி விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

மறுபுறம் ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மனின் தகவலில், உயர்நிலை iPad டேப்லெட்டுகள் மற்றும் மூன்று ஆப்பிள் வாட்ச் மாடல்கள் இதில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7 அறிமுகமா?

செப்டம்பர் 7 அறிமுகமா?

மேலும் ப்ளூம்பெர்க் தளத்தின் மார்க் குர்மன் வெளியிட்ட தகவலில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸை செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் செப்டம்பர் 5 (திங்கட்கிழமை) தொழிலாளர் தினம் (Labor Day) என்றும் செப்டம்பர் 6 (செவ்வாய்கிழமை) பயண நாளாகவும் (travel day) இருக்கும் காரணத்தால் செப்டம்பர் 7 (புதன்கிழமை) அன்று ஐபோன் 14 வெளியிடப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரத்தாள உறுதி

2022 இல் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாதனங்களில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் பிரதான ஒன்று. செப்டம்பர் மாதம் நடப்பதாக கூறப்படும் ஆப்பிள் அறிமுக நிகழ்வில் ஐபோன் 14 சீரிஸ் அறிமுகமாகும் என்பது ஏரத்தாள உறுதி செய்யப்பட்டு விட்டது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவலின்படி, ஐபோன் 14, டேப்லெட், வாட்ச் என அனைத்தும் அறிமுகமாகும் பட்சத்தில் ஆப்பிள் பிரியர்கள் காட்டில் தான் மழை என்பது உறுதி.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Tipped to Launch 7 Devices at September 7 Launch Event

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X