Apple Time Flies நிகழ்வை இன்று எப்படி லைவ் பார்ப்பது! ஐபோன் 12 அறிமுகமாகுமா?

|

Apple நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஆப்பிள் ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஐபாட் மற்றும் ஆப்பிள் ஐபேட் போன்ற புதிய சாதனங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்துவருகிறது. அதேபோல், இன்று செப்டம்பர் 15 ஆம் தேதி ஆப்பிள் 'டைம் ஃப்ளைஸ்' என்ற பெயரில் முழுமையான டிஜிட்டல் வெளியீட்டு நிகழ்வை ஆப்பிள் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை எப்படி லைவ் பார்ப்பது என்று பார்க்கலாம்.

ஆப்பிள் 'டைம் ஃப்ளைஸ்' நிகழ்வு

ஆப்பிள் 'டைம் ஃப்ளைஸ்' நிகழ்வு

ஆப்பிள் 'டைம் ஃப்ளைஸ்' நிகழ்வு செப்டம்பர் 15 ஆம் தேதி, இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம்ஸ் நேரத்தின்படி இரவு 10:30 மணிக்கு யூடியூ வழியாகவும், ஆப்பிள் வலைத்தளம் வழியாகவும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 12 அறிமுகமா?

ஆப்பிள் ஐபோன் 12 அறிமுகமா?

இதில் இரண்டு விலை பிரிவின் கீழ் புதிய ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஐபாட் ஏர் அறிமுகம் செய்யப்படும். அதேபோல், ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் மாடலின் கீழ் நான்கு மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரத்தில் புதிதாக அறிமுகமாக உள்ள ஐபோன் 12 பற்றிய சில எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம் மற்றும்தகவல்களும் வலைத்தளத்தில் வெளியாகியது.

மனித இனத்திற்கு இப்படியொரு சோதனை வருமா? பதற வைக்கும் ஆய்வு முடிவு.!!மனித இனத்திற்கு இப்படியொரு சோதனை வருமா? பதற வைக்கும் ஆய்வு முடிவு.!!

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6

புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, சிறந்த இரத்த ஆக்ஸிஜன் மானிட்டர், வேகமான வைஃபை இணைப்பு மற்றும் சிறந்த செயலி மற்றும் மேம்பட்ட ஸ்லீப் கண்காணிப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் இம்முறையும் அதன் வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் விலை

ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் விலை

இந்த ஆண்டு ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சின் மலிவான மாடலையும் அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் 6 தொடரில் ரூ.15,000 என்ற விலையில் ஒரு மாடலும் ரூ.30,000 விலையில் ஒரு மாடலும் அறிமுகம் செய்யப்படும்.

ஆப்பிள் ஐபாட் ஏர் 4

ஆப்பிள் ஐபாட் ஏர் 4

புதிய ஐபாட் ஏர் 4 கடந்த சில வாரங்களில் பல முறை வலைத்தளத்தில் வலம்வந்துள்ளது. இந்த நிகழ்வின் போது ஐபாட் ஏர் 4 சாதனம் முழு திரை டிஸ்பிளேயுடன், வேகமான செயலி மற்றும் யூ.எஸ்.பி-சி இணைப்பு ஆகியவற்றுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, ஐபாட் ஏர் 4 முதல் முறையாகப் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பவர் பட்டனுடன் கூட டச்ஐடி பட்டனை ஒருங்கிணைத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1940-ல் காணாமல் போன போர்க்கப்பல் கண்டுபிடிப்பு! கப்பலுக்குள் மறைக்கப்பட்டுள்ள உண்மை என்ன?1940-ல் காணாமல் போன போர்க்கப்பல் கண்டுபிடிப்பு! கப்பலுக்குள் மறைக்கப்பட்டுள்ள உண்மை என்ன?

ஆப்பிள் ஐபோன் 12

ஆப்பிள் ஐபோன் 12

ஆப்பிள் நிறுவனம் இந்த நிகழ்வில் ஆப்பிள் ஐபோன் 12, ஆப்பிள் ஐபோன் 12 மேக்ஸ், ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என்ற நான்கு மாடல்களை அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் டிஸ்பிளே விபரம்

ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் டிஸ்பிளே விபரம்

ஆப்பிள் ஐபோன் 12 சாதனம் 5.4 இன்ச் OLED டிஸ்ப்ளேயுடன் வெளிவரும். ஆப்பிள் ஐபோன் 12 மேக்ஸ் மாடல் 6.1 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளிவரும் என்றும், ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.7 இன்ச் ஓஎல்இடி பேனலுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆப்பிள் A14 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் கேமரா விபரம்

ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் கேமரா விபரம்

ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மேக்ஸ் இரட்டை கேமரா கொண்ட டூயல் கேமரா அமைப்பைக் கொண்டதாகக் கூறப்படுகிறது, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் ஆகியவை மூன்று கேமரா கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஐபோனில் 3D கேமரா

ஐபோனில் 3D கேமரா

ஐபோன் 12 ப்ரோ சீரிஸ் 3D கேமராவுடன் லிடார் ஸ்கேனருடன் வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்முறையே ஐபோன் 12 மாடல்கள் இன்-பாக்ஸ் சார்ஜருடன் வராது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple 'Time Flies' Event: How to Watch Live Stream and What to Expect : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X