Home
News

அடிச்சான் பாரு Apple.. 200MP கேமரா கொண்ட முதல் iPhone.. எந்த மாடலில்?

ஆப்பிள் (Apple) நிறுவனம் - மிகவும் விரைவாக மாற்றங்களை ஏற்றுக்கொண்டதாக சரித்திரமே இல்லை. அது எவ்வளவு பெரிய "டிரெண்ட்" ஆக இருந்தாலும் சரி அல்லது சின்னச்சிரிய மாற்றமாக இருந்தாலும் சரி.. "போதுமான" நேரத்தை எடுத்துக்கொள்ளும். குறிப்பாக "போதுமான" அளவு முதிர்ச்சியடைந்ததாக உணரும்போது மட்டுமே ஒரு புதிய தொழில்நுட்பத்தை அல்லது மாற்றத்தை கையில் எடுக்கும்; பயன்படுத்தும்!

அப்படியாக இப்போது ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய கேமரா சென்சாரைச் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது 200எம்பி கேமராக்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் கூடுதல் தகவல்கள் எதுவும் இல்லை, ஆகவே உண்மையிலேயே இது 200எம்பி சென்சார் தான என்பதை உறுதியாக கூற முடியாது. இருப்பினும் இது ஒரு சுவாரஸ்யமான வளர்ச்சியாகும். ஆப்பிள் நிறுவனம் அதன் முக்கிய போட்டியாளர் ஆன சாம்சங் உடன் நேரடியாக மோத முயற்சிக்கிறது; கூடவே சீன நிறுவனங்களுடன்!

அடிச்சான் பாரு Apple.. 200MP கேமரா கொண்ட முதல் iPhone.. எந்த மாடலில்?

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் நிறுவனம் அதன் அல்ட்ராவின் ப்ரைமரி கேமராவில் (இந்த பட்டியலில் எஸ்25 எட்ஜ் மாடலும் சேர்ந்துள்ளது) 200எம்பி சென்சாரை பயன்படுகிறது. மறுபுறம், 200எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா கடந்த சில மாதங்களாக உயர்நிலை சீன ஸ்மார்ட்போன்களின் பிரதான அம்சமாக மாறியுள்ளது. ஆக ஆப்பிள் சோதிப்பது நிச்சயம் ஒரு ப்ரைமரி கேமராவாக இருக்க வாய்ப்புள்ளது!.

2025 ஆம் ஆண்டில் அறிமுகம் ஆகும் ஐபோன் 17 சீரிஸின் பின்புறத்தில் பெரிய மாற்றங்கள் இருக்கும், பெரிய கேமரா பம்ப் இருக்கும் என்கிற தகவல்கள் பல நாட்களாகவே உலவுகிறது. 2026 ஆண்டு அறிமுகம் ஆகும் ஐபோன்களின் முன்பக்கத்தில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்றும், ஃபேஸ் ஐடி ஸ்க்ரீனின் கீழ் செல்லும், அதாவது செல்பீ கேமராவிற்கு ஒரே ஒரு ஹோல்-பஞ்ச் மட்டுமே இருக்கும் என்றும் கூறப்படுகிறது

ஆக 200எம்பி ப்ரைமரி கேமராவானது 2027 ஆம் ஆண்டில் அறிமுகமாகும் ஆப்பிளின் ஐபோன் மாடல்களில் இடம்பெறலாம். அதாவது ஐபோன் 19 சீரிஸில் இடம்பெறலாம். பெரும்பாலும் இது ப்ரோ மாடல்களில் பேக் செய்யப்படலாம். ஆனால் இதை எந்த அளவிற்கு நம்பலாம் என்கிற கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஆப்பிள் நிறுவனம் போன் 18 (iPhone 18) மற்றும் ஐபோன் 18இ (iPhone 18e) மாடல்ககளை தனியாகவும், ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) மாடல்களை தனியாகவும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஐபோன் 17 சீரீஸில் புதிய ஐபோன் 17 ஏர் மாடல் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது

இது 5.5 மிமீ அளவீட்டில் உள்ள "சூப்பர் ஸ்லிம் ஐபோன்" மாடலாக இருக்கும் என்று ஏற்கனவே எங்களுக்கு தெரியும். இப்போது, ​​ஆப்பிள் நிறுவனம் இந்த மாடலில் அதன் ஸ்மார்ட் பேட்டரி கேஸ்-ஐ (Smart Battery Case) மீண்டும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. தி இன்ஃபர்மேஷன் வழியாக கிடைத்த அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 ஏர் மாடலுக்காக ஸ்மார்ட் பேட்டரி கேஸை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு பேட்டரி பேக் கொண்ட ஐபோன் கேஸ் ஆகும். இது பயணத்தின்போது அல்லது சார்ஜிங் பாயிண்ட் இல்லாத சூழ்நிலைகளில் டிவைஸை சார்ஜ் செய்ய அனுமதிக்கும். ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது மிகவும் மெலிதாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டால், நிச்சயம் இதன் பேட்டரி பெரும்பாலும் சிறியதாகவே இருக்கும். பெரும்பாலும் இது 3,000mAh முதல் 4,000mAh க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆப்பிள் நடத்திய இன்டர்னல் டெஸ்ட்டிங்கில் - 60 சதவீதம் முதல் 70 சதவீதம் பயனர்கள் மட்டுமே ஐபோன் 17 ஏர்-ஐ சார்ஜ் செய்யாமல் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த முடிவது கண்டறியப்பட்டுள்ளது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Testing 200MP Camera To Compete Samsung and Chinese smartphones Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X