உலகமே வியக்கும் இந்திய மாணவி! ஆடிப்போன Apple நிறுவனம்! கருணையால் கிடைத்த மகுடம்
உலகம் முழுவதும் 30 நாடுகளில் ஆப்பிள் நிறுவனமே நேரடியாக நடத்திய "ஆப்பிள் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச்" என்னும் ஆப் உருவாக்கும் போட்டியில், இந்திய மாணவி அஸ்மி ஜெயின் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். இவ்வளவு பெரிய போட்டியில் வெற்றி பெற்றதற்கு, அவரது திறமை மட்டுமே காரணமல்ல, அவரது நல்ல உள்ளமும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பார்வை குறைபாடு அடைந்த தனது தோழியின் மாமாவுக்கு உதவும் நோக்கத்தில் அவர் அந்த ஆப்பை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் அனைத்து புராடக்ட்களிலும் ஐஓஎஸ் (iOS), ஐபாட்ஓஎஸ் ( iPadOS), மேக்ஓஎஸ் (macOS), டிவிஓஎஸ் (tvOS), வாட்ச்ஓஎஸ் (watchOS) மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த ஓஎஸ் (OS) ஸ்விஃப்ட் (Swift) புரோகிராமிங் லாங்குவேஜ் (Programming Language) கோடிங் கொண்டு உருவாக்கப்படுகிறது.

இந்த ஸ்விஃப்ட் கோடிங் லாங்குவேஜ் (Swift Coding Language) மூலம் மாணவர்களுக்கென பிரத்யேகமாக ஆப்ஸ் உருவாக்கும் போட்டி ஆப்பிள் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு ஆப்பிள் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் (Apple Swift Student Challenge) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆப்பிள் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் போட்டி 30 நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழங்கள் மற்றும் கல்லூரிகள் நடத்தப்படும். மொத்தமாக 375 மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். கணினி அறிவியல் துறையில் சிறந்த விளங்கும் மாணவர்கள் அதில் பங்கேற்று ஆப்களை உருவாக்குவார்கள்.
இந்த ஆப்கள் (Apps), சுகாதாரம் (Healthcare), விளையாட்டு (Sports), பொழுதுபோக்கு (Entertainment), சுற்றுச்சூழல் (Environment) ஆகிய தலைப்புகளின் கீழ் உருவாக்கப்பட வேண்டும். இந்த போட்டியில் டாப் 3 மாணவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அந்த வகையில், 2023ஆம் ஆண்டுக்கான ஆப்பிள் ஸ்விஃப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் போட்டி உலகம் முழுவதும் நடந்தது.
இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த மாணவி அஸ்மி ஜெயின் (Asmi Jain), ஜார்ஜியாவை சேர்ந்த மாணவி மார்த்தா மிட்செல் காலியண்டோ (Marta Michelle Caliendo), இத்தாலியை சேர்ந்த யெமி அஜெசின் (Yemi Agesin) ஆகிய மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர். அஸ்மி ஜெயின் உருவாக்கிய ஆப் மூலம் பார்வை குறைபாடு ஏற்பட்டவரின் கண் செயல்பாட்டை கண்காணிக்க முடியும். அதற்கேற்ப சிகிச்சை அளித்து பார்வையை மீட்க உதவ முடியும்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மெடி கேப்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் மாணவி அஸ்மி ஜெயின், இப்படி தனது நல்ல உள்ளத்தால் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளார். இதுகுறித்து அஸ்மி ஜெயின் கூறுகையில், "இந்த ஆப் மூலமாக எனது தோழியின் மாமாவின் வாழ்க்கையில் நம்பிக்கை பிறந்தது போல அவரைப்போன்று பாதிக்கப்பட்ட அனைவரது வாழ்க்கையிலும் நம்பிக்கை பிறக்க வேண்டும்.
இதை ஆப்பை ஆப் ஸ்டோரில் (App Store) வெளியிட ஆசைப்படுகிறேன். இந்த ஆசை விரைவில் நிறைவேறும்" என்று தெரிவித்தார். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








