ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையில் 10ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.! சால்காம்ப் அதிரடி.!

|

சென்னை ஸ்ரீபெரும்புதூர் இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜப்பானின் முன்னணி செல்போன் நிறுவனமான நோக்கியா தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொலைற்சாலையில் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வந்தனர்.

 2014-ம் ஆண்டு

2014-ம் ஆண்டு

ஆனால் மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய பல கோடி ரூபாயை பாக்கி வைத்திருந்தது இந்நிறுவனம். பின்பு அந்த பணத்தை வசூலிக்க அரசு தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் 2014-ம் ஆண்டு நோக்கியா ஆலையை மூடி விட்டு வெளியேறினார்கள்.

சால்காம்ப் என்ற நிறுவனம்

சால்காம்ப் என்ற நிறுவனம்

மூடிய ஆலையை மீண்டும் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தன. இந்நிலையில்பின்லாந்து நாட்டை சேர்ந்த சால்காம்ப் என்ற நிறுவனம் நோக்கியா வளாகத்தை கையகப்டுத்தி உள்ளது.

இந்த சால்காம்ப் என்ற நிறுவனம் மொபைல்போன்கள் உதிரபாகங்களை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக செயல்படுகிறது. குறிப்பாக செல்போன் சார்ஜர்கள், அடாப்டர்கள் மற்றும் பல்வேறு போன் உதிரிபாகங்கள் ஆகியவற்றை இந்த நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்த்ககது.

பட்ஜெட் விலையில் அசத்தலான கூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்.! சிறப்பம்சங்கள்.!பட்ஜெட் விலையில் அசத்தலான கூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்.! சிறப்பம்சங்கள்.!

ஆப்பிள்

ஆப்பிள்

மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு தேவையான உதிரிப்பாகங்களை சால்காம்ப் நிறுவனம்தான் தயாரித்து வழங்குகிறது. இந்த நிறுவனம் சென்னையில் ஏற்கனவே இரண்டு இடங்களிலும், டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஒரு இடத்திலும் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. இப்போது நோக்கியா ஆலையை வாங்கி உள்ள சால்ம்காம்ப் செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிலை அங்கு தொடங்க உள்ளது.

நோக்கியா ஆலை

நோக்கியா ஆலை

குறிப்பாக நோக்கியா ஆலை மற்றும் அதன் அருகே உள்ள லைட் ஆன் மொபைல் ஆகிய நிறுவனங்களையும் சால்காம்ப் வாங்கி இருக்கிறது. அதுவும் இவை ரூ.350கோடியில் வாங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நோக்கியா ஆலையில் 55 சதவீத இடத்தை சால்காம்ப் நிறுவனம் வாங்கி இருப்பதாக அந்த நிறுவனத்தின் இந்திய மேலாண்மை இயக்குனர் சசிகுமார் தெரிவித்தார்.

10,000பேருக்கு வேலை வாய்ப்பு

10,000பேருக்கு வேலை வாய்ப்பு

இந்நிறுவனம் அடுத்த ஆண்டு இதன் உற்பத்தியை துவங்க இருக்கிறது, அப்போது ரூ.2000கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளது,மேலும் ஆலை தொடங்கியது சால்காம்ப் நிறுவனம் 7000பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எனவும் பின்னர் மேலும் விரிவுபடுத்தப்பட்ட 10,000பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ரூ.2000கோடி முதலீடு

ரூ.2000கோடி முதலீடு

இது சம்பந்தமாக மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திர ரவிசங்கர் பிரசாத் கூறியது என்னவென்றால், சால்காம்ப் நிறுவனம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து செயல்படதுங்கும், அதன்பிறகு படிப்படியாக 5ஆண்டுகளில் ரூ.2000கோடி முதலீடு செய்ய உள்ளனர். இதன் மூலம் 10,000பேருக்கும் நேரடியாகவும், 50,பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Apple Supplier Salcomp To Invest Rs 2,000 Crore In New Indian Plant : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X