பெங்களூரு ஆப்பிள் நிறுவனத்தில் 10,500 வேலைவாய்ப்பு: ரூ.3000 கோடி முதலீடு.!
பின்பு இதுதொடர்பாக பேசிய வருவாய் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, விஸ்டிரான் நிறுவனத்துடன் 7 நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் சொல்லவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது. மேலும் விஸ்டிரான் எனும் மொபைல் தொழிற்சலை நிறுவனம் பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது.

அதன்படி விஸ்டிரான் நிறுவனத்தின் தொழிற்சாலையை கட்டமைக்க தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, குறிப்பாக ஆப்பிள்-ன் தைவானிய தயாரிப்பு நிறுவனமாக விஸ்டிரான் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.3000 கோடி முதலீடு:
பெங்களூருவில் இருக்கும் நரஸபுரா தொழிற்பேட்டையில் ரூ.3000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
மேலும் இதுகுறித்து கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமியை விஸ்டிரான் குழுவினர் சந்தித்து பேசினர் என்று தகவல் வெளிவந்துள்ளது.

43-ஏக்கரில்
குறிப்பாக 43-ஏக்கரில் இந்த ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று விஸ்டிரான் குழவின் தலைவர் குருராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கண்டிப்பாக 10,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று குருராஜ் கூறியுள்ளார்.

7 நாட்களில் ஒப்பந்தம்
பின்பு இதுதொடர்பாக பேசிய வருவாய் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, விஸ்டிரான் நிறுவனத்துடன் 7 நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவித்துள்ளார், அதன்பின்பு கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு இதில் வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் எஸ்6
தற்சமயம் விஸ்டிரான் நிறுவனத்தில் 1000-க்கு மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர், பின்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன் எஸ்ஐ சாதனங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது ஐபோன் எஸ்6 சாதனத்தின் தயாரிப்பை துவங்கியுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

ஆப்பிள் மேப் :
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் மேப் தற்போது மேலும் ஆறு நாடுகளின் போக்குவரத்து குறித்த முழு விபரங்களையும் தெரிந்து
கொள்ளும் வகையில் ஒரு நல்ல செயலியாக உள்ளது. 70 நாடுகளுக்கும் மேல் இந்த செயலி செயல்பட்டு வரும் நிலையில் தற்போது
புரூனே, கென்யா, மொசாம்பிக், நைஜீரியா , பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய ஆறு நாடுகளின் டிராபிக் டேட்டாக்களின்
முழு விபரங்களை இந்த செயலியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த செயலி மூலம்தற்போது இந்தியாவில் உள்ள ரியல் டைம் டிராபிக்கையும் தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications