ஆப்பிளுக்கும், மோட்டோரோலாவுக்கும் குடுமி புடி!

Posted By: Staff
ஆப்பிளுக்கும், மோட்டோரோலாவுக்கும் குடுமி புடி!
மின்னணு சாதனங்களை வாங்க வேண்டும் என்றால், அதில் உள்ள தொழில் நுட்பங்கள் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தால் எதை பற்றியும் கவலை இல்லாமல் தாராளமாக வாங்கலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு இடையே உறுதியான கருத்து நிலவி வருகிறது. அப்படிப்பட்ட ஆப்பிள் நிறுவனம், மோட்டோரோலா நிறுவனத்தின் மீது சேன் டைய்கோ ஃபெட்ரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எலக்ட்ரானிக் சாதன தயாரிப்பில் தனி இடத்தை பிடித்து இருக்கும் ஆப்பிள் நிறுவனம் கியூவள்காம் போன்ற தொழில் நுட்பத்திற்கும் உரிமம் பெற்றுள்ளது.

இது போல் ஆப்பிள் நிறுவனம் உரிமம் பெற்ற தொழில் நுட்பத்தினை பயன்படுத்தியதற்காக மோட்டோரோலா நிறுவனத்தின் மீது ஆப்பிள் நிறுவனம் கடந்த வெள்ளிகிழமை அன்று, அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்