Just In
- 10 min ago
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- 38 min ago
அடி தூள்: சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் 2 புதிய விவோ போன்கள்.!
- 1 hr ago
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
- 2 hrs ago
அடேங்கப்பா.. கூகுள் மேப்-க்கு மாற்றாக இத்தனை செயலிகள் இருக்குதா? வாங்க பார்ப்போம்.!
Don't Miss
- News
இரட்டை இலை சின்னம் கேட்டால் கையெழுத்து போடுவேன்..சசிகலாவை சந்திப்பேன்..ஓ.பன்னீர் செல்வம் உறுதி
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Movies
விஜய் சூப்பர் ஸ்டாரா? வில்லங்கமான கேள்வி கேட்ட செய்தியாளர்.. டென்ஷனான எஸ்.ஏ.சந்திரசேகர்!
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Finance
மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம், MIS, முத்த குடிமக்கள் சேமிப்பு பத்திரம்.. பட்ஜெட்டில் பலே அப்டேட்!
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பட்டப்பகலில் Apple ஸ்டோருக்குள் புகுந்த திருடர்கள்.! ஐபோன், ஐபாட் எல்லாமே அபேஸ்.! வைரல் வீடியோ!
பூட்டிய கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடப்பது சாதாரணமானவை.. ஆனால், பட்டப்பகலில் திறந்திருக்கும் கடைக்குள் புகுந்து, வாடிக்கையாளர்கள் மற்றும் கடையில் இருக்கும் பல ஊழியர்களுக்கு மத்தியில் சர்வ சாதாரணமாகத் திருட்டில் ஈடுபடும் திருடர்கள் நீங்கள் எங்காவது பார்த்தது உண்டா? இல்லையென்றால், இந்த வீடியோவை பாருங்கள்.!

திருட்டின் அடிப்படை ரூல்ஸை மீறிய திருடர்கள்.!
கொள்ளையர்கள் பொதுவாக ஆட்கள் இல்லாத கடைகளில் தான் அவர்களுடைய கைவரிசையைக் காண்பிக்கிறார்கள்.
கடைகளில் இருக்கும் பொருட்களை களவாடுவதில் அப்போது தான் எந்த தொந்தரவும் இருக்காது என்பதனாலேயே திருடர்கள் இரவு நேரங்களைத் தேர்வு செய்கிறார்கள்.
இதற்குப் பின் போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான விபரங்களை வைத்து இவர்களைத் தேடிப் பிடிப்பது வழக்கமாகிவிட்டது.

யாருக்கும் தெரியாமல் திருடினால் தானே திருட்டு.! இதை என்னனு சொல்றது?
யாருக்கும் தெரியாமல் பொருட்களை எடுப்பது, பின் அதை மறைப்பது போன்ற செயல்களைத் தான் நாம் திருட்டு என்று அழைக்கிறோம்.
ஆனால், அதெல்லாம் பழைய காலத்து விஷயம்.. இப்போது நாங்கள் ஆட்கள் இருக்கும் போதே யாருக்கும் அஞ்சாமல் சினிமா பணியில் கடைகளைச் சூறையாடுவது தான் எங்கள் புது திருட்டு முறை என்று கூறுவது போல 2 திருடர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இப்படி ஒரு லைவ் திருட்டை யாருமே பார்த்திருக்க முடியாது.!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் (Apple Store, California) நடந்த திருட்டைப் பற்றித் தான் நாம் இங்குப் பேசிக் கொண்டிருக்கிறோம்.
இதுவரை உலகளவில் நடத்தத் திருட்டுகளில் இருந்து இது முற்றிலும் நேர்மாறானது.
கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் வளாகத்திற்குள் பட்டப்பகலில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருக்கும் நேரத்தில் புகுந்த இரண்டு திருடர்கள், ஆப்பிள் ஸ்டோரில் இருந்த எல்லாவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த திருட்டின் வீடியோ.! இதோ.!
கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த சம்பவம் முழுவதையும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருடர்களை மிரட்டவோ அல்லது தடுக்கவோ அந்த ஆப்பிள் ஸ்டோரில் இருந்த யாரும் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.!
என்ன நடந்தது என்பதை அறிய இந்த திருட்டு சம்பவத்தின் வீடியோவைப் பாருங்கள்.

எந்த தயக்கமும் இல்லாமல் கூலாக iPhone மற்றும் iPad-களை திருடிய திருடர்கள்.!
ஆப்பிள் ஸ்டோரில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் சாதனங்களை இந்த இரண்டு திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ஆப்பிள் ஸ்டோரில் பட்டப்பகலில் நுழைந்து ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த சாதனங்களை இவர்கள் எந்த தயக்கமும் இல்லாமல், மிக கூலாக திருடிய துணிச்சல் வீடியோ இன்டர்நெட் (internet) முழுக்க வைரல் (viral video) ஆகியுள்ளது.
இந்த திருட்டின் போது ஊழியர்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்கள் அமைதியாக இருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.

பிளாக் ஃப்ரைடே விற்பனையை குறிவைத்த முகமூடி அணிந்த துணிகர திருடர்கள்.!
முகமூடி அணிந்த இரண்டு திருடர்கள், விலையுயர்ந்த சாதனங்களைத் திருடி பைகளில் வீசியதைக் கடையிலிருந்த ஊழியர்கள் கையாளத் தவறியதால், இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிள் ஸ்டோரில் பிளாக் ஃப்ரைடே விற்பனை நடந்துகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஸ்டோரில் இருந்து பொருட்களைத் திருடுவதற்கான சரியான வாய்ப்பாக இது இருந்துள்ளது.

யாரும் அவர்களை தடுக்கவில்லை.! ஏன் என்ன காரணம்?
கடைக்குள் இருந்த ஒரு வாடிக்கையாளரால் இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்டுள்ளது.
திருடர்கள் பொருட்களை திருடி பையில் போடும் போதும் கூட, யாரும் அவர்களை தடுக்கவில்லை - அதே நேரத்தில் அவர்களும் யாரையும் பொறுப்படுத்தாமல் திருடி இருக்கும் நிகழ்வு பிரமிக்க வைக்கிறது.
இரண்டு திருடர்களிடமும் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா என்பது தெரியவில்லை.

அவர்களைத் தடுக்க வேண்டுமா? - சந்தேகத்துடன் கேட்ட மக்கள்.!
வீடியோவில் வன்முறை எதுவும் பதிவாகவில்லை இல்லை. கடையில் வாடிக்கையாளர்கள் நிறைந்திருந்த நிலையில் பட்டப்பகலில் பொருட்களை திருடிச் சென்றது அதிர்ச்சியளிக்கிறது.
இதில் சிறப்பு என்னவென்றால், திருடர்கள் திருடிய பொருட்களுடன் வெளியேறும் போது, யாரோ ஒருவர் "நாம் அவர்களைத் தடுக்க வேண்டுமா?" என்று கேட்கிறார். மற்றொரு நபர் "அவர்களை போக விடுங்கள்" என்று கூறியிருப்பதும் பதிவாகியுள்ளது.

போலீசாரிடம் திருடர்கள் சிக்கினார்களா? இல்லையா?
திருடர்கள் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து தப்பி ஓடிய 20 வினாடிகளுக்குப் பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சந்தேகத்திற்குரிய இரண்டு பேர் வாகன நிறுத்துமிடத்திற்கு அடுத்துள்ள ஒரு சந்துக்குள் ஓடியதாகக் கூறப்படுகிறது.
போலீசார் அவர்களை விரட்டி சென்றும், அவர்களால் அந்த திருடர்களைப் பிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் திருடிய இரண்டு திருடர்களின் அடையாளம் தெரியவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470