எல்லாம் நமக்கு நன்மைதான்- இந்தியாவில் தொடங்கிய ஐபோன் 13 உற்பத்தி: அவுங்களுக்கு செலவு மிச்சம், நமக்கு லாபம்!
ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் 13 உற்பத்தியை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் இந்தியாவில் இதுவரை எந்த விதமான ப்ரோ மாடல்களையும் தயாரிக்கவில்லை. ஐபோன் 13 தொடரில் மட்டுமல்ல ஐபோன் 12 மற்றும் ஐபோன் 11 தொடர்களிலும் ப்ரோ தயாரிப்பு இடம்பெறவில்லை. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டில் நிறுவனம் அதன் ஏற்றுமதிகளில் 5 மில்லியன் யூனிட்கள் அதிகரித்தது.

ஐபோன் 13 தொடர் இந்தியாவில் உற்பத்தி
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 சீரிஸ்களை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. குபெர்டினோ தொழில்நுட்ப நிறுவனமான ஐபோன் 13 தொடர் சாதனங்கள் சென்னைக்கு அருகிலுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஃபாக்ஸ்கான் இந்தியாவில் உற்பத்தி பங்குதாரர் ஆகும். உலகின் இரண்டாவது பெரிய ஸ்மாரட்போன் சந்தையாக இந்தியா திகழ்கிறது. தற்போது ஆப்பிள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் ஆப்பிள் இந்தியாவில் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. ஐபோன் 13 சீரிஸ் என்பது ஆப்பிளின் முதன்மை சாதன தொடராகும்.

ஐபோன் 13 மாடல்கள் மட்டுமே உற்பத்தி
இதுகுறித்த தனியார் செய்தித் தளத்தில் வெளியான அறிக்கைப்படி, ஆப்பிள் இந்தியாவில் வழக்கமான ஐபோன் 13 மாடல்களை மட்டுமே உற்பத்தி செய்கிறது எனவும் ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கிறது. சில காரணங்களால் ஆப்பிள் இந்தியாவில் எந்த ப்ரோ மாடல்களை உற்பத்தி செய்யவில்லை என கூறப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 13 தொடரில் மட்டுமல்ல ஐபோன் 12 மற்றும் ஐபோன் 11 தொடர்களிலும் ப்ரோ தயாரிப்பு இடம்பெறவில்லை.

முக்கிய சந்தைகளில் இடம்பெற்ற இந்தியா
கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் கவனம் கணிசமாக வளர்ந்து வருகிறது என்றே கூறலாம். ஐபோன் 13 சாதனம் முதன்முறையாக அமெரிக்கா மற்றும் நிறுவனத்தின் முக்கிய சந்தைகளில் வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் சந்தையில் தயாரிக்கப்படுவதால் பல்வேறு நன்மைகள்
ஐபோன் 13 சாதனம் உள்ளூர் சந்தையில் தயாரிக்கப்படுவதால் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. ஐபோன் 13 தொடர் இந்தியாவில் தள்ளுபடியைப் பெறுகிறது. ஐபோன் 13 மினி சாதனம் ரூ.69,990 என விற்கப்பட்ட நிலையில் க்ரோமாவில் ரூ.64,990 என விற்கப்படுகிறது. அதேபோல் ஐபோன் 13 ரூ.79,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.73,990 என தொடங்குகிறது. ஆப்பிள் தனது முதன்மையான ஐபோன்களை இந்தியாவில் பெரியளவு சந்தைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு செலவுகள் இந்தியாவில் விற்பனை செய்வதில் குறைந்திருக்கிறது.

ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம் தயாரிப்பு
ஆப்பிள் சாதனங்கள் அதன் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் விஸ்ட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இரண்டு நிறுவனங்கள் மூலமாக ஆப்பிள் இலக்கை அடைந்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களில் விஸ்ட்ரான் பெற்றிருக்கிறது. குறிப்பிட்ட காரணங்களால் விஸ்ட்ரான் நிறுவனம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் மூடும் நிலை ஏற்பட்டது இதன் காரணமாக விஸ்ட்ரான் அதிக பங்கை பெற்றிருக்கிறது. ஆப்பிளின் மூன்றாவது ஒப்பந்த உற்பத்தியாளராக பெகாட்ரான் இருக்கிறது. இந்த நிறுவனம் ஏப்ரல் 1 முதல் உற்பத்தியை தொடங்கும். எனவே வரும் ஆண்டுகளின் செயல்பாட்டில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்ட்ரான் நிறுவனம் கர்நாடகாவிலும், ஃபாக்ஸ்கான் தமிழகத்திலும் அமைந்திருக்கிறது.

ஐபோன் 13 சாதனம் இந்தியாவில் தயாரிப்பு
அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட மாடல்களில் ஐபோன் எஸ்இ 2020-க்கு முக்கிய பங்கு இருக்கிறது. இது விஸ்ட்ரான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. மேலும் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 ஆகிய சாதனங்கள் ஃபாக்ஸ்கானால் தயாரிக்கப்படுகின்றன. ஃபாக்ஸ்கான் விரைவில் ஐபோன் 13 சாதனத்தை இந்தியாவில் தயாரிக்க தொடங்கும் என ஆதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய உற்பத்தி தளத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது, போன்களுக்கான ஏற்றுமதி மையமாக இந்தியாவை உருவாக்குவது மற்றும் உள்நாட்டு தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்தல் போன்ற பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஆப்பிள் அதன் முதலாண்டு செயல்திறனிலேயே அடைந்துள்ளது.
File Images


Click it and Unblock the Notifications