Home
News

கதிகலங்க வைக்கும் காம்போ ஆஃபர்.. முழுசா 50% தள்ளுபடி.. iPhone 14.. கூடவே AirPods வாங்க செம்ம சான்ஸ்!

2023 தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு பல முன்னணி நிறுவனங்கள் தத்தம் தயாரிப்புகள் மீது அதிரடி தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளன. அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனமானது அனைத்து பயனர்களுக்குமான ஒரு சிறப்பு தீபாவளி சலுகையை (Apple Special Diwali Offer) அறிவித்துள்ளது.

ஆப்பிள் ஏர்பாட்ஸ் மீதான ஒரு அற்புதமான சலுகைக்காக நீங்கள் காத்திருந்தால்.. இதுவே அதற்கான நேரமாக இருக்கலாம். ஏனென்றால் ஆப்பிள் நிறுவனம் அதன் ஏர்பாட்ஸை (Apple Airpods) பாதி விலைக்கு விற்பனை செய்கிறது, இருப்பினும் இந்த சலுகையை பெற ஒரு நிபந்தனை உள்ளது.

50% தள்ளுபடி.. iPhone 14.. கூடவே AirPods வாங்க செம்ம சான்ஸ்!

அதென்ன நிபந்தனை? அது என்னவென்றால்.. ஓராண்டு பழைய மாடல்களான ஐபோன் 14 (iPhone 14) அல்லது ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடல்களை வாங்க விரும்பும் நபர்களுக்கு மட்டுமே ஆப்பிள் நிறுவனத்தின் இந்த சிறப்பு தீபாவளி சலுகை கிடைக்கும்.

அதாவது நீங்கள் ஐபோன் 14 அல்லது ஐபோன் 14 பிளஸ் உடன் சேர்த்து ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஆகிய இரண்டையுமே வாங்க விரும்பும் வாடிக்கையாளராக இருந்தால் மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும். ஆப்பிளின் இந்த சிறப்பு தீபாவளி சலுகையானது 3 வகையான ஏர்பாட்ஸ் மாடல்கள் மீது கிடைக்கிறது.

50% தள்ளுபடி.. iPhone 14.. கூடவே AirPods வாங்க செம்ம சான்ஸ்!

அதென்ன மாடல்கள்? இந்த சலுகை லைட்னிங் சார்ஜிங் கேஸுடன் (Lightning Charging Case) கூடிய ஏர்பாட்ஸ் ப்ரோ மூன்றாவது ஜெனரேஷன் (AirPods Pro 3rd generation) மீது கிடைக்கிறது. கூடவே மெக்சேஃப் சார்ஜிங் கேஸுடன் (MagSafe Charging Case) வரும் ஏர்பாட்ஸ் ப்ரோ மூன்றாவது ஜெனரேஷன் (AirPods Pro 2nd generation) மீதும் கிடைக்கிறது.

கடைசியாக, யூஎஸ்பி டைப்-சி மெக்சேஃப் சார்ஜிங் கேஸுடன் (MagSafe Charging Case USB Type-C) கூடிய ஏர்பாட்ஸ் ப்ரோ இரண்டாவது ஜெனரேஷன் மாடல் மீதும் கிடைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, ஐபோன் 14 அல்லது ஐபோன் 14 பிளஸ் வாங்கினால் மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும்.

50% தள்ளுபடி.. iPhone 14.. கூடவே AirPods வாங்க செம்ம சான்ஸ்!

இந்த சிறப்பு தீபாவளி சலுகை குறித்த மேலதிக விவரங்கள் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Apple Official Website) பகிரப்பட்டுள்ளது, மேலும் இந்த சலுகை 2023 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கி வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் ஆப்பிள் அறிவித்துள்ளது.

ஒருவேளை நீங்கள் ஐபோன் 14 மீது மட்டும் கிடைக்கும் தள்ளுபடியை தேடினால் பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தில் ஆப்பிள் ஐபோன் 14 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 17% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.69,900 க்கு பதிலாக ரூ.57,499 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல 256ஜிபி வேரியண்ட் ஆனது 15% தள்ளுபடியை பெற்று ரூ.67,499 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.79,900 ஆகும். கடைசியாக ஐபோன் 14 மாடலின் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.87,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.99,900 ஆகும். அதாவது இது 12% தள்ளுபடியை பெற்றுள்ளது.

இதேபோல, பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ஐபோன் 14 பிளஸ் மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ், 256ஜிபி மற்றும் ஹை-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீது நேரடி தள்ளுபடிகள் அணுக கிடைக்கிறது. மேற்கண்ட மூன்று வேரியண்ட்களும் முறையே ரூ.63,999, ரூ.73,999 மற்றும் ரூ.93,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

நீங்கள் இன்னும் மலிவான விலைக்கு கிடைக்கும் ஆப்பிள் டிவைஸை தேடினால், ஐபோன் 13 (iPhone 13) மாடலை கருத்தில் கொள்ளலாம். பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ஐபோன் 13 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,900 க்கு பதிலாக ரூ.51,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 256ஜிபி மற்றும் 512ஜிபி வேரியண்ட்கள் முறையே ரூ.60,999க்கும், ரூ.69,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple Special Diwali Offer AirPods 50 Percentage Discount iPhone 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X