Home
News

காப்புரிமை பிரச்சனை: ஆப்பிள், பிளாக்பெர்ரி மீது புதிய வழக்கு

By Super
காப்புரிமை பிரச்சனை: ஆப்பிள், பிளாக்பெர்ரி மீது புதிய வழக்கு

அனுமதி இல்லாமல் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தியதற்காக ஆப்பிள், சோனி உள்பட 2 நிறுவனங்களின் மேல் வழங்கு தொடுத்திருக்கிறது கிராஃபிக்ஸ் பிராப்பர்டீஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம்.

இதற்கு முன்பு சிலிக்கான் கிராஃபிக்ஸ் இன்க் என்ற பெயரில் இயங்கிய நிறுவனம் இப்போது கிராஃபிக்ஸ் பிராப்ர்டீஸ் இன்க் என்ற பெயரில் இயங்கி வருகிறது. சில தொழில் நுட்பங்களுக்கு உரிமம் பெற்று இருக்கிறது கிராஃபிக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனம்.

இதனால் இந்நிறுவனம் உரிமம் பெற்றுள்ள தொழில் நுட்பங்களை பயன்படுத்துகையில் இந்நிறுவனத்திடம் அனுமதி பெற்ற பின் தான் அதை பயன்படுத்த வேண்டி இருக்கிறது.

ஆனால் ஆப்பிள், ஜப்பானில் உள்ள சோனி, பிளாக்பெர்ரி, தைவானில் உள்ள எச்டிசி, தென் கொரியாவில் உள்ள எல்ஜி எலக்ட்ரானிக்ஸ், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கோ ஆகிய நிறுவனங்கள், கிராஃபிக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடம் அனுமதி கேட்டாமலேயே சில தொழில் நுட்பங்களை ஸ்மார்ட்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் பயன்படுத்தி உள்ளன. இதனால் பிராப்பர்டீஸ் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

இந்த உரிமைக்கு எதிரான விஷயங்களை நீதிமன்றம் கண்டிக்கவில்லை என்றால் தனது நிறுவனத்திற்கு நிறைய இழப்பு நேரிடும் என்றும் தெரிவித்து இருக்கிறது கிராஃபிக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனம். ஆனால் இதற்கு ஆப்பிள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் குறிப்படப்பட்டுள்ள நிறுவனங்கள் எந்தவித பதிலையும் அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X