இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விலை பாதியாக குறைப்பு.!!

Written By:

கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து கருவிகளும் விற்பனையில் சாதனை புரியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. நிலைமை இப்படி இருக்க ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது கருவிகளின் விலையை கனிசமாக குறைத்திருக்கின்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மூன்று முறை

மூன்று முறை

அதன் படி இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 5எஸ் கருவியின் விலை கடந்த மூன்று மாதத்தில் மூன்று முறை குறைக்கப்பட்டிருக்கின்றது.

விலை

விலை

இந்தாண்டு செப்டம்பர் மாதம் ரூ.44,500க்கு விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 5எஸ் கருவியின் இன்றைய வலை ரூ.21,495 ஆகும்.

வெளியீடு

வெளியீடு

2013 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான ஐபோனஅ 5எஸ் 16ஜிபி விலை ரூ.53,500 ஆக இருந்தது. இதுவே இந்தாண்டு செப்டம்பர் மாதம் ரூ.44,500க்கு விற்பனை செய்யப்பட்டு தற்சமயம் மீண்டும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

குறைவு

குறைவு

உலகளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் மட்டும் தான் ஐபோன் 5எஸ் கருவியின் விலை மிகவும் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ஐபோன் 5எஸ் கருவியின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4 இன்ச் டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ7 சிப் டூயல்-கோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 1560 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டிருக்கின்றது.

ஐபோன்

ஐபோன்

தற்சமயம் ஐபோன் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் இன்னும் சில காலம் காத்திருந்தால் புதிய ஐபோன் 6சி கருவியை வாங்கலாம். ஆப்பிள் நிறுவனம் சில மாதங்கள்லி 4 இன்ச் திரை கொண்ட ஐபோன் 6சி கருவியை வெளியிட இருப்பதாக கூறப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Apple slashes prices of iPhone 5s in India. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot