7 இடங்களில் ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த கூகுளும், சுந்தர் பிச்சையும்.!

|

நிகழ்ந்து முடிந்த கூகுள் யூனிவர்ஸ் வருடாந்திர ஐ/ஓ டெவெலப்பர் மாநாட்டில் கூகுள் நிறுவனம் அதன் அற்புதமான கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தியது. ஒருபக்கம் தொழில்நுட்ப உலகம் வியப்பில் மூழ்க மறுபக்கம் ஆப்பிள் நிறுவனம் பீதியில் உறைந்து போயுள்ளது.

சுந்தர் பிச்சை தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் அதன் தேடல் மற்றும் மென்பொருள் ஆகிய பகுதிகளில் பெரும் முன்னேற்றங்களை செய்து வருகின்ற நிலைப்பாட்டில் இந்நாள் வரை, இந்த தேதி வரையிலாக கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை குறிப்பிட்ட 7 விடயங்களில் பகிரங்கமாக பின்தள்ளியுள்ளது, தோற்கடித்துள்ளது. அவைகள் என்னென்ன.?

விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் :

விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் :

கூகுளின் குரல் தேடல் கருவி நீண்ட காலமாக ஆப்பிளின் சிரியை வெளியேற்றிக்கொண்டே வருகிறது. அந்த அளவிற்கு மிகவும் துல்லியமாக மற்றும் சிறந்த பதில்களை அடிக்கடி வழங்குகிறது. அடுத்த தலைமுறை கூகுள் அசிஸ்டென்ட் ஆனது விரைவில் வினவல்களைத் (கேள்விகளை) தட்டச்சு செய்து, கூகுள் லென்ஸ் (Google Lens) கொண்டு பொருட்களை அடையாளம் காணும் இஎன்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோம் :

ஹோம் :

கூகுள் முகப்பு இப்போது குரல் அழைப்பு, புதிய பொழுதுபோக்கு வழங்கல்கள் மற்றும் திரைகளுடன் சிறந்த ஒருங்கிணைப்பு என மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போது அதனுடன் பேசுவதன் அடிப்படையில் பதில்களைத் தனிப்பயனாக்குவதுடன், ஹேண்ட்ஸ் ஃப்ரீ அழைப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திடம் ஹோம் கிட் இன்டர்கிரேட்டட் உள்ளது, இருப்பினும் அது கூகுள் ஹோம் போன்று அனைத்தையும் கட்டியாலும் ஒரு லிவிங் ஹப் கிடையாது.

இமேஜஸ் :

இமேஜஸ் :

கூகுள் புகைப்படங்களுக்கு ஒரு சில விறுவிறுப்பான குளிர் மேம்படுத்தல்கள் உள்ளன, ஆனால் மிகவும் உற்சாகமான மாற்றம் என்று கூறினால் கூகுள் லென்ஸ் தான், இது கேமராவிலிருந்து காணும் பொருள்கள் மற்றும் இடங்களை அடிப்படையாகக் கொண்டது. கூகுள் லென்ஸ் முதலில் கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் உடன் ஒருங்கிணையும்.

விஆர் மற்றும் ஏஆர் :

விஆர் மற்றும் ஏஆர் :

ஆப்பிள் அதன் அடுத்த ஐபோன் கேமராவில் மாற்று ரியாலிட்டியை பதிக்கும் என்று வதந்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் கூகுள் நிறுவனமோ ஏற்கெனவே ஒரு பிரத்யேக விஆர் (VR) ஹெட்செட், விஆர்- ரெடி தொலைபேசிகள் மற்றும் இரண்டு ஏஆர் (AR) தொலைபேசிகளை கொண்டுவந்து விட்டது.

க்ரோம் :

க்ரோம் :

மொபைல் உடன் ஒத்திசைக்கும் மற்றும் மேலும் பல சாதனங்களில் கிடைக்கும் வண்ணத்திலான ப்ரவுஸர் ஒன்றை கூகுள் வெளியிடுகிறது (ஆப்பிளின் சஃபாரி உலாவி ஆண்ட்ராய்டில் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது). இந்த க்ரோம் உலாவியை விஆர்-க்கு கொண்டு வருவதாகவும் கூகுள் அறிவித்துள்ளது.

கார்ஸ் :

கார்ஸ் :

ஆண்ட்ராய்டு உங்கள் காரை இன்ஃபோட்டெயின்மெண்ட் சிஸ்டத்தின் (உங்கள் டச் ஸ்கிரீன் பின்னால் உள்ள பொருட்களை) கீழ் இயக்குவதற்கான வழிகளில் வேலை செய்கின்றது. இது உங்கள் காரினுள் உங்கள் கருவியை கொண்டு வரும்போது திரையின் உள்ளடக்கங்களை மாற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இரண்டில் இருந்தும் வேறுபடுகிறது. இம்முறை கூகுள் ஆழமாக செல்ல முயற்சிக்கிறது.

தேடல் மற்றும் தரவுத்தளம் (டேட்டாபேஸ்) :

தேடல் மற்றும் தரவுத்தளம் (டேட்டாபேஸ்) :

தேடல் கருவிகளும், இடங்கள் மற்றும் உண்மைகளை பற்றிய பாரிய அளவிலான தகவல்களும் தான் கூகுளின் மிக முக்கியமான வலிமையாகும். ஐ/ஓ நிகழ்வில் தேடல் முடிவுகளை அதிகரிக்கும் நோக்கத்தில் வேலை பட்டியல்களை எளிதாக்கப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது.

மீள் புரட்சி

மீள் புரட்சி

கூகிள் சில இடங்களில் திறமையாக தடம் பதித்து இருக்கும் அதே வேளையில் ஆப்பிள் நிறுவனமும் அதன் மீள் புரட்சி சார்ந்த திட்டப்பணிகளில் மூழ்கியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, ஐமெஸேஜ்-ல் இருந்து ஃபேஸ் டைமிற்கு மாற்றம் கண்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் மெசேஜ் அப்ளிகேஷன்ஸ் ஆனது கூகுளின் தளங்களில் உள்ள குழப்பமானவைகளை விட மென்மையானதாக உள்ளது. உடன் ஆப்பிள் அதன் மென்பொருள் சுற்றுச்சூழல் முழுவதும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட சாதனங்களை ஒருங்கிணைப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Apple should be afraid of Google. Very afraid. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X