ரெடியா இருங்க.. செப்டம்பர் 9-ல் களமிறங்கும் புதிய ஐபோன்கள்.. LTPO டிஸ்பிளே.. எந்த மாடல்?
2026 ஆண்டுக்கான ஐபோன் அறிமுக நிகழ்வு வரும் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று ஆப்பிள் (Apple) நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுவும் இந்த நிகழ்வுக்கு ஆப்பிள் நிறுவனம் சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் (Surprise and shine) என்ற டேக்லைன் கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆப்பிள் நிகழ்வு கலிஃபோர்னியாவில் இருக்கும் ஆப்பிள் பார்க் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்குத் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ள ஆப்பிள் நிகழ்வில் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களைத் தவிர இந்த நிகழ்வில் ஆப்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஏர்பாட்ஸ் 5 மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் M6 சிப் கொண்ட மேக் மினி மற்றும் M5 அல்ட்ரா மூலம் இயங்கும் மேக் ஸ்டுடியோ உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட டெஸ்க்டாப் மாடல்களை ஆப்பிள் சமீபத்தில் அறிவித்ததால், புதிய மேக் கணினிகள் அறிமுகமாவதற்கு வாய்ப்பில்லை.
ஐபோன் 18 ப்ரோ அம்சங்கள்
தற்போது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஐபோன் 18 ப்ரோ மாடலில் LTPO+ டிஸ்பிளே வசதி இடம்பெறும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய 2nm A20 ப்ரோ சிப்செட் உடன் இந்த புதிய ஐபோன் அறிமுகமாகும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 5567எம்ஏஎச் பேட்டரி உடன் ஐபோன் 18 ப்ரோ அறிமுகமாகும் எனறு தகவல்கள் கசிந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த போனில் தரமான கேமரா மற்றும் மேம்பட்ட கேமரா அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த போனின் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். தற்போது இந்த போனின் சில விவரங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும்.
கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து, ஆப்பிள் தனது புதிய ஹார்டுவேர் தயாரிப்புகளுக்கான நிகழ்வுகளை நேரடியாக நடத்துவதற்குப் பதிலாக, முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட வீடியோக்களை பதிவு செய்து, அவற்றை ஆப்பிள் பார்க் வளாகத்தில் ஒளிபரப்பும் முறையை தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
ஆனால் இந்த முறை ஆப்பிள் இந்த வழக்கத்தை மாற்றி மீண்டும் ஆப்பிள் நிர்வாகிகளை வைத்தே சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்வை ஆன்லைன் மூலம் உலக நாடுகளில் உள்ள மக்கள் நேரலையில் காண முடியும். குறிப்பாக ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் யூடியூப் சேனலில் நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்படும் நிலையில், ஆப்பிள் டிவி செயலியிலும் இதை நேரலையில் காணும் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் முன்பு வெளியிட்ட அறிவிப்பின்படி, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் டிம் குக் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது. மேலும் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவின் மூத்த துணை தலைவராக இருக்கும் ஜான் டெர்னஸ் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பதவியேற்க இருக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது.
தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகினாலும் டிக் குக் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக குழுவின் தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
photo credits: Unsplash, apple, ndtvprofit


Click it and Unblock the Notifications