கடந்த வார இறுதியில் மட்டும் 3 மில்லியன் ஐபேடுகளை விற்ற ஆப்பிள்

Posted By: Karthikeyan
கடந்த வார இறுதியில் மட்டும் 3 மில்லியன் ஐபேடுகளை விற்ற ஆப்பிள்

கடந்த வாரம் ஆப்பிள் தனது ஐபேட் மினி என்ற புதிய டேப்லெட்டைக் களமிறக்கியது. இந்த மினி டேப்லெட்டை உலக மக்கள் முழுவதும் மிக ஆவலுடன் வாங்கி வருகின்றனர். எந்த அளவுக்கு என்றால் கடந்த வார இறுதியில் மட்டும் 3 மில்லியன் மினி ஐபேடுகள் விற்பனை ஆகியிருப்பதாக ஆப்பிள் தெரிவித்திருக்கிறது.

அதன் மூலம் ஆப்பிள் கடந்த மார்ச் மாதம் களம் இறக்கிய ஐபேடின் முதல் வார விற்பனையை விட இந்த புதிய மினி ஐபேடின் விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது என்று ஆப்பிள் கூறியிருக்கிறது.

இந்த புதிய ஐபேட் மினி ஆப்பிளின் மற்ற தயாரிப்புகளைவிட எடை குறைவாக இருக்கிறது. மேலும் இந்த ஐபேட் மினியை அதிகாரப்பூர்வமாக களமிறக்குவதற்கு முன்பாகவே விண்ணப்பித்தவர்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் ஆப்பிள் தெரிவித்திருக்கிறது.

கடந்த வார இறுதியில் மட்டும் 3 மில்லியன் மினி ஐபேடுகளை விற்றதன் மூலம் புதிய சாதனையைப் படைத்திருப்பதாக ஆப்பிளின் தலைவர் டிம் குக் கூறியிருக்கிறார்.

இந்த ஐபேட் மினி 329 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபேடி நினியின் விலை சற்று அதிகமாக இருப்பதால் எதிர்காலத்தில் இதன் விற்பனை மந்தமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot