அமெரிக்காவில் எந்திரன் பட காட்சி: ஆற்றில் விழுந்த இளைஞரை காப்பாற்றிய ஐபோன்

|

தொழில்நுட்பம் மூளைக்கெட்டாத உயரத்தில் வளர்ந்து கொண்டே இருந்தது. இது சாத்தியமா என்ற கேள்விகள் அனைத்தையும் வளர்ந்து வரும் தொழில்நுடபம் நொடி பொழுதில் எதையும் சாத்தியமாக மாற்றி காட்டுகிறது. அதுவும் கையில் இருக்கும் செல்போனில் பல்வேறு வகை செயல்களும் ஒவ்வொரு கட்டங்களாக முன்னேறி சாத்தியமாகிக் கொண்டே தான் இருக்கிறது.

ஆப்பிளுக்கென்று தனி சிறப்பு உண்டு

ஆப்பிளுக்கென்று தனி சிறப்பு உண்டு

மொபைல் போன் நிறுவனங்களின் பட்டியல் பெரிதளவு பட்டியல் நீண்டு கொண்டே போனாலும், தனக்கென்று தனி உலகை கைப்பற்றி வைத்திருக்கும் நிறுவனம் என்றால் அது ஆப்பிள்தான். தனி ஓ.எஸ், தனி வழிமுறைகள் என அனைத்திலும் தனித்து விளங்குவது ஆப்பிள். உச்சக்கட்ட அம்சங்கள் கொண்ட மொபைல் வாங்க வேண்டும் என்றால் உடனடியாக தோன்றுவது ஆப்பிள்.

பனிக்கட்டியில் மோதிய கார்

பனிக்கட்டியில் மோதிய கார்

டெஸ் மொயினுக்கு வடக்கே 122 மைல் தொலைவில் உள்ள மேசன் நகரில் உள்ள வடக்கு அயோவா பகுதி சமுதாயக் கல்லூரிக்கு, 18 வயதான கெயில் சால்செடோ என்ற இளைஞர் தனது காரில் காலை 7:30 மணியளவில் சென்றுள்ளார். மேசன் நகரில் 5 டிகிரி குளிர் பனி வீசிக் கொண்டிருந்தது. அப்போது சாலையில் இருந்த பனிக்கட்டியின் மீது அவரது கார் வேகமாக மோதியுள்ளது.

பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்

ஆற்றில் விழுந்த கார்., போன் தேடியும் கிடைக்கவில்லை

ஆற்றில் விழுந்த கார்., போன் தேடியும் கிடைக்கவில்லை

இளைஞரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த ஆற்றுக்குள் இறங்கியது. ஆற்றின் நடுப்பகுதி வரை சென்ற காருக்குள் நீர் புகத்தொடங்கியது. என்ன செய்வது என்று அறியாத அந்த இளைஞர், தனது ஆப்பிள் செல்போனை தேடியுள்ளார். போன் எங்கு விழுந்தது என்று தெரியவில்லை, அவர் தேடியும் கிடைக்கவில்லை.

ஹேய் சிரி கால் 911

ஹேய் சிரி கால் 911

கன நேரத்தில் சிந்தித்த அந்த இளைஞன் உடனடியாக சொன்ன வார்த்தை, ஹேய் சிரி கால் 911, இந்த வார்த்தை சொன்னது ஆப்பிள் போனில் உள்ள பிரத்யேக செயலியின் மூலம் 911-க்கு அழைப்பு சென்றுள்ளது. அதன்மூலம் போனை கண்டுபிடித்த இளைஞர் மீட்புப்படையினரிடம் தனது நிலையை கூறியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழு அந்த இளைஞரை மீட்டது.

 இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்

இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்

இதுகுறித்து அந்த இளைஞர் கூறுகையில், காரின் கண்ணாடி முழுவதும் பணியால் மறைத்துவிட்டது. ஆற்றுக்குள் கார் இறங்கப்போகிறது என்பதை உணர்ந்தேன். ஆனால் ஆற்று நீர் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவு குளிர்ந்து இருந்தது. காருக்குள் நீர் வந்ததும். எனது கால்லை என்னால் உணர முடியவில்லை. கையும் உறையத் தொடங்கியது. இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் தான் சிரி கால் 911 என்று சொன்னேன் என்று கூறியுள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில் 5 டிகிரி வெப்பநிலையும், 6 டிகிரி குளிர்ந்த காற்றும் வீசியதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு": பாஜக எம்.பி.,

ஆப்பிள் போனின் சிறப்பு செயலி

ஆப்பிள் போனின் சிறப்பு செயலி

ஆப்பிள் போனில் வாய்ஸ் கமெண்ட்(Voice command) மூலம் செயல்படும் பிரத்யேக செயலி உள்ளது. அதன் பெயர் சிரி, சிரி என்று கூறி நமது போனில் என்ன கமென்ட் கொடுத்தாலும் அதன்படி அந்த போன் செயல்படும்.

Source: foxnews.com

Best Mobiles in India

English summary
Iowa man, 18, saved from trapped car in freezing waters thanks to Siri: report

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X