நரேந்திர மோடி மொபைல் ஆப் வெளியிட்ட டிம் குக்.!!

Written By:

முதல் முறை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் ஆப்பிள் நிறுவன சிஇஒ டிம் குக், இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது டிம் குக், ஐபோன் கருவிகளுக்கான மேம்படுத்தப்பட்ட நரேந்திர மோடி மொபைல் செயலியை அறிமுகம் செய்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ட்வீட்

1

செயலியை அறிமுகம் செய்த ஆப்பிள் சிஇஒ'விற்கு பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்தார்.

பதில்

2

பிரதமர் ட்வீட்'ற்கு பதில் அளித்த டிம் தனது பதிலில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும், மீண்டும் இந்தியா வரும் ஆவல் அதிகரித்திருக்கின்றது, மொபைல் செயலிக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

ஆப்

3

அப்டேட் செய்யப்பட்ட நரேந்திர மோடி மொபைல் ஆப், பதிய தன்னார்வ பிணையம் கொண்டிருக்கின்றது. டிம் குக் இந்த செயலியை அறிமுகம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது, நன்றி டிம் குக் என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

பயணம்

4

ஆப்பிள் சிஇஒ டிம் குக் தனது இந்திய பயணத்தில் டெலிகாம் ஆப்பரேட்டர்களுடன் சந்திப்பு, பாலிவுட் பிரபலங்களுடன் சந்திப்பு மற்றும் புதிய அலுவலகத்தை ஹைத்ராபாத்தில் துவக்கி வைத்தது, மற்றும் ஐபிஎல் போட்டியை ரசித்தார் என்பதும் குறிப்பிடப்பத்தக்கது.

திட்டங்கள்

5

இதோடு வரும் ஆண்டுகளில் இந்தியாவில அதிக முதலீடுகளை மேற்கொள்ள இருப்பதாக டிம் குக் தனியார் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படம் : பிஐபி / ஏஎஃப்பி

English summary
Apple's Tim Cook Unveils Updated Narendra Modi App. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot