இந்தியாவில் Apple நிறுவனத்தின் முதல் விற்பனையகம்.. டிம் குக்கின் அடுத்த மாஸ்டர் பிளான் இதுதான்.!
ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான அம்சங்களுடன் சாதனங்களை அறிமுகம் செய்வதால் நல்லவரவேற்பை பெறுகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் (Mixed reality headset) மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது வரும் ஜூன் 5 ஆம் தேதி WWDC எனப்படும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு நடைபெறவுள்ளது. குறிப்பாக நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அப்டேட்கள் மற்றும் அறிவிப்புகள் இந்த நிகழ்வில் வெளியிடப்படும். குறிப்பாக ஐபோன், வாட்ச், மேக், டிவி, ஐபேட் போன்ற மாடல்களுக்கு புதிய ஓஎஸ் அப்டேட்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, xrOS என்றழைக்கப்படும் சாஃப்ட் வேர் அடிப்படையாகக் கொண்டு இந்த மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது ஆப்பிள் நிறுவனம். மேலும் இந்நிறுவனம் 15-இன்ச் மேக்புக் ஏர், மேம்பட்ட 13-இன்ச் மேக்புக் ஏர், எண்ட்ரி லெவல் 13 இன்ச் மேக்புக் ப்ரோ, ரிப்ரெஷ் செய்யப்பட்ட 24-இன்ச் ஐமேக் மாடல்களை உருவாக்கி வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெரிய மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம், இதில் எம்2 சிப்செட் வழங்க உள்ளதாகத் தெரிவித்து உள்ளது. குறிப்பாக WWDC எனப்படும் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக விற்பனையகம் மும்பையில் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவுடன் 25 ஆண்டு வர்த்தகத்தை கொண்டாடும் விதமாக பிரத்யேக விற்பனையகத்தை ஆப்பிள் நிறுவனம் தொடங்குகிறது. அதேபோல் வரும் ஏப்ரல் 20-ம் தேதி புது தில்லியிலும் ஒரு விற்பனையகத்தை ஆப்பிள் நிறுவனம் திறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் இந்தியாவில் முதல் ஆப்பிள் விற்பனையகத்தை இன்று காலை திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்,இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,நடிகை மாதுரி தீட்சித், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் விற்பனையகம் திறக்கப்பட்டுள்ள நிலையில்,நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் விற்பனையகத்திற்கு வெளியே வரிசையில் காத்துள்ளனர். மேலும் இந்த ஆப்பிள் விற்பனையகத்தில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பயனர்களுக்குச் சிறப்பான சேவை வழங்குவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது.
அதேபோல் ஏற்கனவே இந்தியாவில் அழகான கலாச்சாரமும் அதிக ஆற்றலும் இருப்பதாக இந்தியா வந்தவுடன் டிம் குக் தெரிவித்தார். குறிப்பாக மும்பை வந்துள்ள டிம் குக்கிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு இதன் ஒரு பகுதியாக பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் நேற்று டிம் குக்கை ஒரு உணவகத்துக்கு அழைத்துச் சென்று மும்பையின் சிறப்பு உணவுகளில் ஒன்றான வடா பாவ் வாங்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெரிய அரசியல் தலைவர்களையும், தொழிலதிபர்களையும் கூட டிம் குக் சந்திக்கிறார். ஏற்கனவே மும்பை வந்த உடன் முகேஷ் அம்பானியை அவரது இல்லத்தில் டிம் குக் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. பின்பு டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனையும் டிம் குக் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு சந்திப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் தனது பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய ரிலையன்ஸ் குழுமத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. மறுபுறம், பெங்களூரு அருகே இருக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி ஆலையை வாங்குவதற்கு டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுதவிர பிரதமர் நரேந்திர மோடியை நாளை டிம் குக் சந்திக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








