Home
News

தம் அடிச்சவங்க ஐபோனுக்கு வாரன்டி கிடையாது.! ஆப்பிள் சொன்ன அதிரடி மேட்டர்.! என்னாச்சு தெரியுமா?

ஆப்பிள் (Apple) நிறுவனம் அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் மற்றும் பிற தொழில்நுட்ப கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தனித்தன்மையே குறைந்த விலைக்கு தரமற்ற தயாரிப்பை கொடுத்து மக்களை கவர வேண்டும் என்று நினைக்காமல், கொடுக்கும் பணத்திற்கு வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வகையில் தரமான பொருட்களை கொடுக்க வேண்டும் என்று நினைப்பதே இதன் அடையாளமாக உள்ளது.

இவ்வாறு மலிவான விலைக்கு ஏதோ ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைக்காமல், விலை அதிகமாக இருந்தாலும் தரமானதாக, நீண்ட நாட்கள் உழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்களை மட்டுமே ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளராகக் கருதுகிறது. கேட்பதற்குச் சிறிது கடுமையாக இருந்தாலும், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த கோட்பாடு தான், மக்கள் அதன் தயாரிப்புகளைத் தேடி வந்து வாங்குவதற்கான முதன்மை காரணம் என்றே கூறலாம்.

தம் அடிச்சவங்க ஐபோனுக்கு வாரன்டி கிடையாது.! ஆப்பிள் சொன்ன அதிரடி.!

ஆப்பிள் வாரன்டி கிடைப்பதில் வாடிக்கையாளர்களுக்கு சிக்கலா?

ஆனால், இவ்வளவு பெருமை வாய்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. 2007 ஆம் ஆண்டு ஆப்பிளின் மேக்புக்கை (MacBook) பயன்படுத்திய வாடிக்கையாளர் ஒருவர் தனது கருவி ஓவர்ஹீட் (Overheat) ஆகிறது என்று அமெரிக்காவில் உள்ள வெஸ்ட் டி மாய் (West Des Moines) பகுதியில் உள்ள ஜார்டன் கிரிக் ஆப்பிள் ஸ்டோரில் (Jordan Creek Apple Store) கொடுத்துள்ளார். ஆனால் அந்த மேக்புக் பயன்படுத்திய வீட்டில் அதிகமாகப் புகை இருந்துள்ளது என்று கூறி அந்த கருவிக்கான வாரண்டியை (Warranty) கிளைம் (Claim) செய்ய ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது.

இதேபோல, வேறொரு இடத்தில் சர்வீஸிற்கு (Service) வந்த ஐமேக்கையும் (iMac), "புகையிலை புகையால் இந்த கருவி கண்டாமினேட் (Contaminate) ஆகி உள்ளது. எனவே இது மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பயோஹசார்டாக (Biohazard) கருதப்படுகிறது. இதில் இருக்கும் நிக்கோட்டின் (Nicotine) OSHA-வின் அபாயகரமான பொருட்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த கருவியை சரி செய்ய எனது ஊழியர்களை கட்டாயப்படுத்த முடியாது" என்று ஆப்பிள் நிறுவனம் அந்த ஐமேக்-ஐ சரி செய்ய மறுத்துள்ளது.

இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் சூசகமாக சொல்ல வருவது என்னவென்றால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும், நச்சுப்புகைகளை வெளியேற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், புகையிலை பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் ஆப்பிள் தயாரிப்புகள் அவர்கள் வெளியிடும் புகைகளினால் பாதிக்கப்படுமாயின் அதற்கு வாரண்ட்டி கொடுக்கவோ, அதனை சர்வீஸ் செய்யவும் இந்த நிறுவனம் முன் வராது என்பதே ஆகும்.

தம் அடிச்சவங்க ஐபோனுக்கு வாரன்டி கிடையாது.! ஆப்பிள் சொன்ன அதிரடி.!

புகைப்பிடித்தால்.. புகையிலை பயன்படுத்தினால் Apple வாரன்டி கிடைக்காதா?

பொதுவாக ஆப்பிளின் பொருட்களை வாங்குபவருக்கு ஆப்பிள் கேர் ப்ரொடெக்ஷன் பிளான் (Applecare Protection Plan, APP) என்று ஒன்று வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள காரணங்களாக இருந்தால் மட்டுமே அந்த பொருட்களுக்கு வாரண்டி மற்றும் சர்வீஸ் வழங்கப்படும். அந்த APP பிளானின் கீழ்தான் புகையினை எதிர்கொண்ட கருவிகளுக்கு வாரண்டி மற்றும் சர்வீஸ் இல்லை என்று ஆப்பிள் தெரிவித்து வருகிறது.

ஆனால், பல வாடிக்கையாளர்கள் ஆப்பிள் கொடுத்த APP டேம்ஸ் அண்ட் கண்டிஷனில் (Terms and Conditions) இவ்வாறு புகையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அல்லது புகையினை எதிர்கொண்ட கருவிகளுக்கு வாரண்ட்டி மற்றும் சர்வீஸ் வழங்கப்படாது என்று எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. எனவே ஆப்பிள் நிறுவனம் வாரன்டி கொடுக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சமாக வாரண்டிக்காக வாங்கிய தொகையாவது திருப்பித்தர வேண்டும் என்று மேல்முறையீடு செய்து வருகின்றனர்.

போகிற போக்கை பார்த்தால் இனி கெட்ட பழக்கம் இல்லாதவர்கள் மட்டும் தான் ஆப்பிள் பொருட்களை பயன்படுத்த முடியும் போல. இந்த வழக்கில் யார் செய்வது சரி? என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் குறிப்பிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Apple's Expensive Extended Warranty Program Don't get Covered If You Have Smoking Habit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X